பிரபுதேவாவுக்கு கிடைக்க வேண்டிய வாய்ப்பை தட்டி பறித்த சல்மான் கான்.. என்ன ஒரு வில்லத்தனம்

திரையுலகில் இருக்கும் நடிகர்கள் ரசிகர்கள் முன்னிலையில் நட்சத்திரங்களாக ஜொலித்தாலும் அவங்களுக்குள்ள சக நடிகர்களுடன் போட்டி பொறாமை என ஒரு பனிப்போர் எப்பவுமே இருந்துட்டு தான் இருக்கும். தொழில் போட்டி காரணமா பல சம்பவங்களையும் செஞ்சிருக்காங்க. என்ன இந்த விஷயத்தை வெளிய தெரியாம பார்த்துப்பாங்க. அப்படி பல சம்பவங்கள் அதுல ஒரு சம்பவத்தை தான் இப்போ பார்க்க போறோம்.

இன்னைக்கு தேதிக்கு இந்திய சினிமா ரசிகர்கள் மத்தியில் டிரெண்டிங்கில் உள்ள படம்னா அது ஆர்ஆர்ஆர் படம் தான். இயக்குனர் ராஜமெளலி இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்துக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருக்கு. இதே மாதிரி கடந்த 2009ஆம் ஆண்டு ராஜமெளலி இயக்கத்துல வெளியான மகதீரா படம் மாபெரும் வெற்றி பெற்றது.

ராம் சரண் நடிப்பில் உருவான இந்த படம் அந்த சமயத்தில் நல்ல வரவேற்பை பெற்றது. அதன் காரணமாக மகதீரா படத்தை தமிழ் மற்றும் மலையாளத்தில் மொழி மாற்றம் செய்து மாவீரன் மற்றும் தீரா தி வாரியர் என்ற தலைப்பில் வெளியிட்டனர். ஆனால் தற்போது வரை இப்படம் ஹிந்தியில் வெளியாகவில்லை. அதற்கான பேச்சுவார்த்தை நடந்தபோதும் சில காரணங்களால் அது தடைபட்டது.

இந்நிலையில் தான் பிரபல டான்ஸ் மாஸ்டரும், நடிகருமான பிரபுதேவா மகதீரா படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்யும் உரிமையை ராஜமெளலியிடம் கோரியிருந்தார். ஏனெனில் பிரபுதேவா ஏற்கனவே ஹிந்தியில் சில படங்களை இயக்கி வெற்றியும் கண்டுள்ளதால் இந்த வாய்ப்பை தனக்கு வழங்குமாறு ராஜமெளலியிடம் கோரியிருந்தார்.

தற்போது அவர் ஆர்ஆர்ஆர் படத்தின் பணிகளில் பிசியாக இருப்பதால், இதுகுறித்து யோசித்து கூறுகிறேன் என கூறியிருந்தாராம். இந்நிலையில் சமீபத்தில் ஆர்ஆர்ஆர் படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சிக்காக சென்றிருந்த ராஜமெளலியை நடிகர் சல்மான் கான் நேரில் சந்தித்து பேசியுள்ளார்.

அப்போது பேசிய சல்மான் கான், “பிரபுதேவா அந்த விஷயத்திற்கெல்லாம் சரிபட்டு வரமாட்டார். அவரால் நிச்சயம் மகதீரா படத்தை ரீமேக் செய்ய முடியாது. எனவே அதன் ரீமேக் உரிமையை எனக்கு தாருங்கள்” என கூறியதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து ராஜமெளலி என்ன செய்வதென யோசித்து வருகிறாராம்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்