மணிரத்னத்தின் அசைக்கமுடியாத 8 படங்கள்.. ரிலீசுக்கு முன்பே கல்லா கட்டும் பொன்னியின் செல்வன்

பத்மஸ்ரீ விருது பெற்று, இந்தியத் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வரும் இயக்குனர் மணிரத்னம் இயக்கிய சூப்பர் ஹிட் படங்கள் பல உண்டு. அதிலும் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய இந்த 8 படங்கள் ரசிகர்களின் மனதில் இப்பொழுதும் நீங்கா இடம் பிடித்திருக்கிறது.

மேலும் மணிரத்னத்தின் வாழ்நாள் கனவு திரைப்படமான பொன்னியின் செல்வன் படத்தை பல போராட்டங்களுக்குப் பிறகு வெற்றிகரமாக பிரம்மாண்டமாக எடுத்து முடித்து, வரும் செப்டம்பர் 30ஆம் தேதியான நாளை ரிலீஸ் ஆவதற்கு முன்பே முன்பதிவு படுஜோராக நடந்து கொண்டிருக்கிறது. ஆயிரத்திற்கு மேல் ஒரு டிக்கெட்டின் விலை இருப்பதால் படம் வெளியாவதற்கு முன்பே இந்த படம் கல்லா கட்டிக் கொண்டிருக்கிறது.

மௌனராகம்: 1986ல் மணிரத்னம் இயக்கத்தில் கார்த்திக், மோகன், ரேவதி நடித்து வெளியான படம் மௌன ராகம். இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார். ரேவதியின் காதலனாக இப்படத்தில் கார்த்திக் நடித்து இருந்தார். போலீஸாரால் துப்பாக்கி சூடு நடைபெறும் போது எதிர்பாராத விதமாக துப்பாக்கி குண்டு கார்த்திக் மேல் பட்டு இறந்துவிடுவார்.

அதன்பிறகு மோகனை திருமணம் செய்து கொள்ளும் ரேவதி. எப்படி அந்த வாழ்க்கையை ஏற்றுக் கொண்டு வாழத் துவங்குகிறார்கள் என்பதை இந்தப் படத்தின் மூலம் எதார்த்தமாக வெளிக்காட்டி இயக்குனர் மணிரத்தினம் மாபெரும் வெற்றி கண்டார்.

Also Read: சர்வதேச அளவில் மிரட்ட வரும் பொன்னியின் செல்வன்.. எதிர்பார்ப்பை அதிகரிக்கும் முதல் நாள் வசூல் இத்தனை கோடியா?

நாயகன்: 1987 ஆம் ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் கமலஹாசன், சரண்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இந்த படத்தை மும்பையில் தாதாவாக விளங்கிய வரதராஜன் முதலியாரின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட படமாகும்.

நூறு நாட்களுக்கு மேல் திரையரங்குகளில் ஒரு நல்ல வசூலை பெற்ற இந்த படம், ரசிகர்களின் மனதைக் கவர்ந்தது மட்டுமல்லாமல் மூன்று தேசிய விருதுகளை பெற்று 1988 ஆம் ஆண்டு ஆஸ்கார் விருதுக்கு இந்திய சார்பில் பரிந்துரைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

அஞ்சலி: இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் ஷாம்லி, ரகுவரன், பிரபு, ரேவதி மற்றும் பலர் நடித்த திரைப்படம் அஞ்சலி. அஞ்சலி பாப்பாவாக நடித்த ஷாமிலியின் நடிப்பு அப்போது பெருவாரியாக ரசிக்கப்பட்டது. அஞ்சலிக்கு நரம்பு மற்றும் மூளை வளர்ச்சி சம்பந்தப்பட்ட குறைபாடு இருப்பதால் அவளால் மற்ற குழந்தைகள் போல செயல்பட முடியாமல் இருக்கிறார்.

அவருடைய இறப்பு மிக சீக்கிரம் நடக்கப் போகிறது என்பது தெரிந்த பிறகு அவரது குடும்பத்தினர் காட்டும் பாசம் நம்மை நெகிழச் செய்யும். இந்தப்படத்திற்கு தரமான இசையை இசைஞானி இளையராஜா வழங்கியிருந்தார். மாபெரும் வெற்றி பெற்ற இந்த திரைப்படத்திற்கு பல விருதுகள் கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: கார்த்திக் உயிரை விட்டு நடித்த 5 படங்கள்.. இதில் இரண்டு பிளாக்பஸ்டர் ஹிட்

பம்பாய்: மணிரத்னம் பம்பாய் படத்தை இயக்கி, தயாரித்து இருந்தார். 1992 மற்றும் 1993 இல் பம்பாயில் நடைபெற்ற கலவரத்தின் உண்மைச் சம்பவங்களை கற்பனையாக எடுக்கப்பட்ட திரைப்படம். இத்திரைப்படத்தில் அரவிந்த்சாமி, மனிஷா கொய்ராலா, நாசர், பிரகாஷ்ராஜ் என பலரும் நடித்திருந்தனர். இத்திரைப்படத்திற்கு இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் இசையமைத்து இருந்தார். இந்தப் படம் சூப்பர் ஹிட் ஆனது மட்டுமல்லாமல் இதில் இருக்கும் பாடல்கள் அனைத்தும் இன்றும் மக்களின் மனதில் ஒலித்துக் கொண்டிருக்கிறது.

அலைபாயுதே: ‌‌2000 ஆம் ஆண்டு மணிரத்னம் தயாரித்து, இயக்கிய படம் அலைபாயுதே. இத்திரைப்படத்தில் மாதவன்,ஷாலினி சொர்ணமால்யா முதலியோர் நடித்திருந்தனர். இப்படத்தில் இளமை துள்ளுவதோடு காதல் ஜோடி கல்யாணத்திற்குப் பின் காதலுடன் கூடிய ஊடலை புன்னகையுடன் சொன்ன படம்.

கன்னத்தில் முத்தமிட்டால்: 2002ல் மணிரத்னம் இயக்கி தயாரித்து வெளியான படம் கன்னத்தில் முத்தமிட்டால். இப்படத்தில் மாதவன், சிம்ரன், பார்த்திபன் மகள் கீர்த்தனா நடித்திருந்தார்கள். இப்படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைத்திருந்தார். சுஜாதாவின் அமுதாவும் அவனும் என்ற சிறுகதையை திரைக்கதையாக மாற்றினார் மணிரத்னம். இப்படத்தில் இலங்கை இன மக்களின் பிரச்சனையை பிரதிபலித்திருப்பார்.

செக்க சிவந்த வானம்: அரவிந்த்சாமி, சிம்பு, அருண் விஜய், விஜய் சேதுபதி, ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ், அதிதீரா என முன்னணி நடிகர்கள் நடித்திருந்த திரைப்படம் செக்கச் சிவந்த வானம். மணிரத்னம் இயக்கி, தயாரித்த இப்படத்திற்கு ஏஆர் ரகுமான் இசையமைத்திருந்தார். பல நட்சத்திரங்கள் கூட்டணியால் இப்படம் வசூல் வேட்டையாடியது.

Also Read: 80, 90-களில் வசூலில் ரஜினிக்கு சிம்மசொப்பனமாக இருந்த கமலின் 5 படங்கள்.. காலத்தால் அழியாத நாயகன்

பொன்னியின் செல்வன்: இரண்டு பாகங்களாக உருவாகும் இந்த படத்தின் முதல் பாகத்தில் இந்திய திரையுலகில் இருக்கும் பல முன்னணி பிரபலங்கள் இணைந்து நடித்திருக்கின்றனர் நாளை வெளியாகும் இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகமாக இருப்பதால் திரையரங்கிற்கு சென்று இந்த படத்தைப் பார்ப்பதற்காக முண்டியடித்துக்கொண்டு முன்பதிவுகள் நடக்கிறது.

இதனால் ரிலீசுக்கு முன்பே பல கோடியை தட்டி தூக்கி இருக்கிறது மணிரத்தினத்தின் பொன்னியின் செல்வன். ஆகையால் நிச்சயம் இந்த படம் சில வாரங்களிலேயே 1000 கோடிக்கு மேல் பாக்ஸ் ஆபீஸில் குவிக்கும் என்றும் திரைவிமர்சனங்கள் இப்பவே கணித்து விட்டனர்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்