செவ்வாய்க்கிழமை, அக்டோபர் 22, 2024

மிஸ் பண்ணாமல் பார்க்க வேண்டிய 8 தமிழ் வெப் சீரிஸ்கள்.. பயத்தில் உறைய வைத்த ‘இன்ஸ்பெக்டர் ரிஷி’

8 must watch web series: வெப் சீரிஸ் பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டு விட்டால் ஓடிடி தளத்தில் கடல் அளவில் கொட்டி கிடக்கிறது. எதை பார்ப்பது, எதை விடுவது என்று தீர்மானிக்கவே முடியாது. தமிழ் வெப் சீரிஸ் பார்க்க வேண்டும் என்று ஆசைப்படுபவர்கள் கண்டிப்பாக இந்த எட்டு வெப்சைரிசை மிஸ் பண்ணாமல் தேடி பார்த்து விடுங்கள்.

பேப்பர் ராக்கெட்: பேப்பர் ராக்கெட் வெப்சீரிஸ் ஜீ 5 தளத்தில் இருக்கிறது. கிருத்திகா உதயநிதி இயக்கிய இந்த தொடரில் காளிதாஸ் ஜெயராம் மற்றும் தன்யா ரவிச்சந்திரன் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். ஒருவருக்கொருவர் அறிமுகம் இல்லாத ஆறு பேர் செல்லும் ட்ரிப்பை மையமாகக் கொண்டு இந்த தொடர் எடுக்கப்பட்டு இருக்கிறது.

லேபிள்: ஜெய் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்த வெப் சீரிஸ் தான் லேபிள். ஒரு குறிப்பிட்ட இன மக்கள் மீது அடையாளப்படுத்தப்படும் தவறான குற்றச்சாட்டில் இருந்து, வெளியில் வந்து தன்னுடைய கனவை நோக்கி பயணப்படும் ஆணின் கதை இது.

கூச முனுசாமி வீரப்பன்: ரசிகர்களிடையே பெரிய அளவில் வரவேற்பை பெற்ற வெப் சீரிஸ் கூச முனுசாமி வீரப்பன். வீரப்பனின் வாழ்க்கை வரலாறை நக்கீரன் கோபால் உதவியோடு டாக்குமெண்டரி ஆக எடுத்திருக்கிறார்கள். இந்த சீரிஸ் கண்டிப்பாக எல்லோரும் பார்க்க வேண்டிய ஒன்று.

கையும் களவும்: ரசிகர்களால் அதிகமாக வரவேற்கப்பட்ட சுவாரசியமான சீரிஸ்களில் கையும் களவும் தொடரும் ஒன்று. ரோஜ் இயக்கத்தில் வெளியான இந்த தொடர் இரண்டு மனிதர்களின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டது. வெளியில் ஒரு வாழ்க்கை சொந்த வாழ்க்கையில் ஒரு வாழ்க்கை வாழ்பவர்களை இரட்டை வாழ்க்கை வாழ்கிறவர்கள் என்று சொல்வார்கள். அதை மையமாகக் கொண்டு வெளியான தொடர்தான் இது.

இரு துருவம்: ஈரம் படத்தில் நடித்த நந்தா முக்கியமான கேரக்டரில் நடித்திருக்கும் சீரிஸ் தான் இரு துருவம். போலீஸ் விசாரணையை மையமாகக் கொண்டு அதிரடி திருப்பமாக வெளியான தொடர் இது.

இறை: சரத்குமார் மற்றும் நிழல்கள் ரவி முக்கியமான கேரக்டரில் நடித்த சீரிஸ் தான் இறை. சமுதாயத்தின் பெரிய இடத்தில் இருக்கும் அரசியல்வாதி ஒருவரின் கடத்தல் மற்றும் அதை தொடர்ந்து நடக்கும் விசாரணையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டது.

இன்ஸ்பெக்டர் ரிஷி: திகில் நிறைந்த போலீஸ் விசாரணையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட வெப் சீரிஸ் தான் இன்ஸ்பெக்டர் ரிஷி. ஒரு கிராமத்தில் நடக்கும் மர்மமான கொலைகள் மற்றும் அந்த கிராம மக்கள் வழிபடும் காட்டு தேவதை என இந்த கதை வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

தி ஹண்ட் பார் வீரப்பன்: சந்தன கடத்தல் வீரப்பனின் வாழ்க்கை கதை மற்றும் மற்றும் தமிழ்நாடு போலீசின் தேடுதல் வேட்டையை மையமாக ஏற்றுக் கொண்டு எடுக்கப்பட்ட கதை தான்.

ஃபிங்கர் டிப்: பிரசன்னா, அபர்ணா பால முரளி, ரெஜினா கேசான்ரா ஆகியோர் முக்கியமான கேரக்டரில் நடித்த சீரிஸ் தான் ஃபிங்கர் டிப். இணையதள மோகத்தால் நடக்கும் விபரீதங்களை எடுத்துச் சொன்ன கதைக்களம் இது.

அனந்தம்: கண்ட நாள் முதல், கண்ணாமூச்சி ஏனடா போன்ற படங்களை இயக்கிய பிரியா இயக்கிய வெப் சீரிஸ் தான் அனந்தம். 1951 ஆம் ஆண்டில் கட்டப்பட்ட வீட்டில் மூன்று தலைமுறைகளாக ஒரே குடும்பம் வசித்து வருகிறது. அதன் பின்னர் வீட்டை விட்டு வெளியேறிய அந்த குடும்பத்தை சார்ந்த மகன் பல வருடங்களுக்குப் பிறகு அந்த வீட்டை பார்க்க வருவதும், அதன் பின்னணியின் சுவாரசியமும் தான் இதன் கதை.

- Advertisement -spot_img

Trending News