உயிரை காப்பாற்றும் 3 மாத்திரைகள், மருத்துவர் சொல்லும் ரகசியம்.. 30 கோடிக்கு அதிநவீன சிகிச்சை

3 pills that save life: எவ்வளவோ நல்ல விஷயங்கள் நம் மனதிற்கும் மூளைக்கும் தெரிந்தாலும் அதை செய்ய சோம்பேறித்தனம் படுவதால் அனைத்தையும் நிராகரித்து விடுகிறோம். ஆனால் அதற்கான அபாய கட்டத்தில் இருக்கும் பொழுது தான் அதனுடைய மகத்துவமே புரிகிறது. அதாவது வெயிலில் நடக்கும் பொழுது தான் நிழலில் அருமை உணர முடியும் என்று சொல்வார்கள்.

அதுபோல பட்டத்துக்கு பின் தான் புத்தி தெரியும் என்று சொல்வது எல்லா விஷயத்துக்கும் சாத்தியமாகாது. பொதுவாக நம் ஆரோக்கியமான உடலை சீராக வைத்திருந்தால் தான் இருக்கும் நாட்களை நம் நிம்மதியாக கழிக்க முடியும். அதற்கு முக்கியமாக நடைப்பயிற்சி,யோகா, சத்தான உணவுப் பொருட்கள் மிக தேவை. ஆனால் இதையெல்லாம் நாம் படிப்பதோடு சரி கேட்பதோடு சரி பயன்படுத்துவது இல்லை.

இதனால் தற்போது எக்கச்சக்கமான நோய்கள் வருவதால் அதிகமான மாத்திரைகளை கையில் வைத்துக் கொண்டு சாப்பாடை விட மருந்து மாத்திரையை அதிகமாக எடுக்கும் நிலைமைக்கு வந்து விட்டோம். இன்னும் சொல்ல போனால் எந்த நேரத்தில் என்ன ஆகும் என்று தெரியாத அளவிற்கு ஒரு திகில் வாழ்க்கையில் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

லோடிங் டோஸ் என்றால் என்ன

அதிலும் இந்த மாரடைப்பு என்பது எப்பொழுது யாருக்கு வரும் என்று கொஞ்சம் கூட கணிக்க முடியாத அளவிற்கு சிறு வயது முதல் பெரியவர்கள் வரை இந்த நோய் தாக்குகிறது. அதனால் மாரடைப்பிலிருந்து தப்பிக்க நாம் அனைவரும் சட்டப்பையில் லோடிங் டோஸ் என்னும் மாத்திரைகளை வைத்துக்கொண்டு தான் சுற்ற வேண்டும் என்கிறார் கோவை கேஜி மருத்துவமனை சேர்மன் டாக்டர் பக்தவத்சலம்.

அதாவது இவரை ஒருமுறை எதேர்ச்சியாக விமான நிலையத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் என்பவர் சந்தித்திருக்கிறார். அப்பொழுது சந்தித்து பேசிய பொழுது டாக்டர் பக்தவத்சலம் சட்டப் பையில் லோடிங் டோஸ் மாத்திரை இருந்திருக்கிறது. இதைப்பற்றி அவர் கேட்ட பொழுது இந்த மாத்திரை எப்பொழுதுமே மேல் சட்டையில் வைத்துக் கொண்டு இருந்தால் நெஞ்சுவலி அறிகுறிகள் வரும்பொழுது உடனே இது உட்கொள்ள வேண்டும்.

அப்படி இதை சாப்பிட்டு விட்டால் குறைந்தது மூன்று மணி நேரத்துக்கு நம் மருத்துவரை சந்தித்து அதற்கான ட்ரீட்மென்ட் எடுப்பதற்கு தகுந்ததாக இருக்கும் என்று கூறியிருக்கிறார். அதற்காக கோவையில் சுமார் 30 கோடிக்கு அதிநவீன சிகிச்சை பெறுவதற்காக வசதிகளை உருவாக்கிய கேஜி மருத்துவமனையில் உலக அரசு சுகாதார துறை அமைச்சர் சுப்பிரமணியன் திறந்து வைத்து பேசி இருக்கிறார்.

மாரடைப்பு வருவதற்கான அறிகுறிகள்: நெஞ்சுப் பகுதியில் ஏற்படும் வலி, முதுகு மற்றும் இடது கைக்கு வலி பரவுதல், நெஞ்செரிச்சல், உடல் சோர்வு, அஜீரணம், வாந்தி, நெஞ்சில் ஊசி குத்துவது போன்ற வழிகள் அதிக அழுத்தமான நெஞ்சு வலி தாடை மற்றும் கழுத்து வலி, வியர்வை, பிசுபிசுப்பு, தலை சுற்றல் போன்ற அறிகுறிகளால் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.

இதற்கு உடனடியாக நம் அனைவரும் மருத்துவத்தில் சிகிச்சை எடுக்க வேண்டும். அருகில் உள்ள மருத்துவமனைக்கு உடனே செல்ல வேண்டும். ஆனால் பாதிக்கப்பட்டவர்கள் நடக்கவோ. வண்டி ஓட்டவோ இந்த சூழ்நிலையில் நிச்சயம் பண்ணக்கூடாது. அதனால் அந்த சமயத்தில் தற்சமயத்திற்கு லோடிங் டோஸ் மாத்திரையை உட்கொள்ள வேண்டும்.

லோடிங் டோஸ் என்றால் என்ன: மாரடைப்பு முதல் உதவி செய்யும் மாத்திரைகள் இதில் டிஸ்பிரின், 350 மி.கி., 1, அடார்வாஸ்டாடின், 80 மி.கி.,1, குலோபிடாப், 150 மி.கி., இருக்கும். இந்த மாத்திரைகளை ஒரு கவரில் போட்டுக்கொண்டு நம்முடைய மேல் சட்டைப் பகுதியில் வைத்திருக்க வேண்டும். மாத்திரைகளை நம் உட்கொள்ளுவதால் நம் ரத்தத்தின் அடர்த்தியை குறைத்து மாரடைப்பிலிருந்து காப்பாற்ற வாய்ப்பு ஏற்படும்.

குறிப்பாக சர்க்கரை வியாதி உள்ளவர்கள், உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள், புகை பிடிப்பவர்கள், 40 வயதுக்கு மேற்பட்டவர்கள், பரம்பரையாக இதய வியாதி உள்ளவர்கள் இவர்களுக்கு இது மிகவும் முக்கியமானதாக இருக்கும். இதையெல்லாம் தாண்டி தினமும் காலை அரை மணி நேரம் நடக்க வேண்டும், நல்ல பழக்க வழக்கங்களை பின்பற்ற வேண்டும், ஆண்டுதோறும் முழு உடல் பரிசோதனை, இதய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். அத்துடன் மருத்துவ காப்பீடு வைத்திருப்பது மிக அவசியமானது.

ஆரோக்கியமாக வாழ சில டிப்ஸ்

Next Story

- Advertisement -