இந்த வார நாமினேஷன் லிஸ்டில் இருக்கும் 7 பேர்.. சாந்தியை தொடர்ந்து வெளியேறும் அடுத்த நபர் இவர்தான்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பு கிடைத்துள்ளது. இந்நிலையில் 20 போட்டியாளர்கள் கொண்டு ஆரம்பிக்கப்பட்ட பிக் பாஸ் நிகழ்ச்சியில் மைனா நந்தினி நுழைந்துள்ளார். தற்போது விறுவிறுப்பாகவும் சுவாரசியத்துடனும் இந்நிகழ்ச்சி சென்று கொண்டிருக்கிறது.

மேலும் மக்களின் ஃபேவரட் போட்டியாளரான ஜி பி முத்து தனது மகனை பார்க்க வேண்டும் என்பதால் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார். இது ரசிகர்களுக்கு அதிர்ச்சியையும், ஏமாற்றத்தையும் தந்தது. இவரைத் தொடர்ந்து குறைந்த ஓட்டுக்கள் வாங்கி சென்ற வாரம் சாந்தி பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறி உள்ளார்.

Also Read :பிக் பாஸ் அசீம் மனைவி, குழந்தையை பார்த்துள்ளீர்களா.. வெளியான வைரல் புகைப்படம்

இந்த வார நாமினேஷன் லிஸ்டில் 7 பேர் தேர்வாகியுள்ளனர். கடந்த வாரம் அதிக ஓட்டுக்கள் வாங்கிய விக்ரமன் மற்றும் சிவின் இருவருமே இந்த வாரம் நாமினேஷன் லிஸ்டில் இடம்பெறவில்லை. ரக்ஷிதா, மகேஸ்வரி, ஆயிஷா, ஜனனி, ஏ டி கே, அசீம், அசல் கோலாறு ஆகியோர் இந்த வாரம் நாமினேஷன் லிஸ்டில் தேர்வாகியுள்ளனர்.

அதாவது கடந்த வாரம் நடந்த ஒரு டாஸ்க்கில் அசீம் ஆயிஷாவை போடி வாடி என்று மரியாதை இல்லாமல் பேசி இருந்தார். இதனால் பிக் பாஸ் ஹவுஸ் மேட்ஸ் அனைவரும் இவருக்கு ரெட் கார்டு கொடுத்திருந்தனர். இதனால் தான் இந்த வாரம் நாமினேஷனில் ஆயிஷா மற்றும் அசீம் இருவருமே தேர்வாகியுள்ளனர்.

Also Read :விவாகரத்து பின் மகளுக்காக ஏங்கும் ராபர்ட் மாஸ்டர்.. பிக் பாஸ் வீட்டில் கதறி அழுததின் பின்னணி இதுதான்

சாந்தியைத் தொடர்ந்து இந்த வாரம் யார் வெளியேறப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. இந்த வாரம் வெளியேற அதிக வாய்ப்பு அசல் கோலாறுக்கு உள்ளது. ஏனென்றால் பெண்களிடம் இவரது அணுகுமுறை மிகவும் தவறாக இருக்கிறது.

தனலட்சுமி இடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டபோதும் இவரது பேச்சு மோசமாக இருந்தது. கடந்த வாரமே அசல் நாமினேஷன் லிஸ்டில் இடம்பெற்றிருந்தால் கண்டிப்பாக வெளியேறி இருப்பார் என ரசிகர்கள் கூறி வருகிறார்கள். இதனால் இந்த வாரம் பிக் பாஸ் வீட்டை விட்டு அசல் வெளியேறுவார் என எதிர்பார்க்கலாம்.

Also Read :வன்மத்தால் வீழ்த்திய பிக் பாஸ் போட்டியாளர்கள்.. மக்கள் அவரைக் காப்பாற்றுவார்களா?

Next Story

- Advertisement -