ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 15, 2024

தோல்வி இல்லாமல் அஜித், விஜய்யை இயக்கிய ஏழு இயக்குனர்கள்.. 8-வதாக வந்து சேர்ந்த வெங்கட் பிரபு

கோலிவுட்டில் எதிரும் புதிருமாக இருக்கும் அஜித், விஜய் இருவரையும் இயக்க வேண்டும் என்பதுதான் இளம் இயக்குனர்கள் முதல் முன்னணி இயக்குநர்களின் ஆசையாக இருக்கிறது. அப்படி அஜித் மற்றும் விஜய்க்கு தோல்வி இல்லாத படங்களை 7 இயக்குனர்கள் கொடுத்திருக்கின்றனர். அந்த வகையில் இப்போது வெங்கட் பிரபு தளபதியுடன் இணைந்துள்ளார்.

வசந்த்: தமிழ் சினிமாவில் வெளிவந்த மிகச்சிறந்த படங்களில் ஒன்றான கேளடி கண்மணி என்ற படத்தை இயக்கியதின் மூலம் கோலிவுட்டில் இயக்குனராக அறிமுகமானவர் வசந்த். அதன் பிறகு அஜித்தின் மார்க்கெட்டை தூக்கி நிறுத்திய ஆசை என்ற படத்தை இயக்கி சூப்பர் ஹிட் கொடுத்தார். இப்படி அஜித்தின் சினிமா வாழ்க்கையை புரட்டி போட்ட ஆசை படத்தை இயக்கிய பிறகு விஜய்யின் நேருக்கு நேர் பட வாய்ப்பு வசந்திற்கு கிடைத்தது. இதில் விஜய் உடன் சூர்யாவும் இணைந்து நடித்திருப்பார்.

எழில்: விஜய் நடிப்பில் வெளியான ‘துள்ளாத மனமும் துள்ளும்’ என்ற சூப்பர் ஹிட் படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் இயக்குனர் எழில். இந்த படத்திற்கு பிறகு அடுத்தடுத்து அஜித்தின் பூவெல்லாம் உன் வாசம், ராஜா போன்ற இரண்டு பட வாய்ப்புகளை தட்டி தூக்கி வெற்றி கண்டார்.

Also Read: விஜய்க்கு ஒர்க் அவுட் ஆனது பிரசாந்துக்கு எடுபடல.. சொந்தக்காசிலே சூனியம் வச்சுக்கிட்ட கொடுமை

கேஎஸ் ரவிக்குமார்: பெரும்பாலான வெற்றி படங்களை தமிழ் சினிமாவிற்கு கொடுத்த முன்னணி இயக்குனரான கேஎஸ் ரவிக்குமார், 1999 ஆம் ஆண்டு வெளியான விஜய்யின் மின்சார கனவு என்ற ஓரளவு வசூலை பெற்ற படத்தை இயக்கிய பிறகு, 2002 ஆம் ஆண்டு வில்லன் என்ற அஜித் பட வாய்ப்பு கிடைத்தது. பிறகு அஜித்தை வைத்து மீண்டும் 2006 ஆம் ஆண்டு வரலாறு என்ற படத்தை இயக்கினார்.

எஸ்ஜே சூர்யா: இயக்குனர், திரைக்கதை, ஆசிரியர், தயாரிப்பாளர், நடிகர் என பன்முக திறமை கொண்ட எஸ்ஜே சூர்யா அஜித்தின் சூப்பர் ஹிட் படமான வாலி படத்திற்கு திரைக்கதை எழுதி, இயக்கியவர். இந்தப் படத்தில் அஜித் ஹீரோவாகவும் வில்லனாகவும் இரண்டு கேரக்டரில் நடித்து பின்னி பெடல் எடுத்து இருப்பார். இந்த படத்திற்கு பிறகு தான் அஜித்தின் சினிமா கேரியரே டாப் கீரில் எகிறியது. அதன் பிறகு விஜய்யின் குஷி என்ற படத்திற்கு திரைக்கதை எழுதி, இயக்கி அவரையும் ரசிகர்களின் ஃபேவரிட் ஹீரோவாக மாற்றினார்.

Also Read: விஜய் கூட சண்டை முத்தினதுக்கு முக்கிய காரணம் அவங்க தான்.. வெளிப்படையாக கூறிய எஸ்ஏசி

ஏஆர் முருகதாஸ்: இயக்குனர், திரைக்கதை ஆசிரியர், தயாரிப்பாளர் என தமிழ், தெலுங்கு, ஹிந்தி படங்களில் ரவுண்டு கட்டிக் கொண்டிருக்கும் ஏஆர் முருகதாஸ் முதல் முதலாக அஜித்தின் தீனா படத்தின் மூலம் தான் தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமானார். இந்த படம்தோல்வியை சந்திக்காமல் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றதால், அடுத்ததாக தளபதியை இயக்குவதற்கான வாய்ப்பு வந்து சேர்ந்தது. அப்படிதான் விஜய்யின் துப்பாக்கி படத்தை இயக்கி தளபதிக்கும் சூப்பர் ஹிட் கொடுத்தார்.

பேரரசு: தமிழ் சினிமாவில் ஆட்டம், பாட்டம், சண்டை, பாசம், நகைச்சுவை, அதிரடி வசனங்கள் என்று வெரைட்டி வெரைட்டியான மசாலா திரைப்படங்களை கொடுத்தவர் இயக்குனர் பேரரசு. இவர் 2005 ஆம் ஆண்டு விஜய்யின் திருப்பாச்சி என்ற படத்தை இயக்கினார். இந்த படம் தாறுமாறான வசூலை குவிக்கா விட்டாலும் தோல்வி படமாக அமையவில்லை. அடுத்ததாக விஜய்யின் சிவகாசி படத்தை இயக்கிய பேரரசு, அடுத்த வருடமே அஜித்தின் திருப்பதி படத்தை இயக்குவதற்கான வாய்ப்பைப் பெற்றார். இவருடைய படங்களின் டைட்டில் எல்லாம் ஊர்களின் பெயராகத்தான் இருக்கும். தர்மபுரி, பழனி, திருவண்ணாமலை என ஊர்களின் பெயர்களை தான் தன்னுடைய படத்தின் தலைப்பாக வைத்து தன்னை அடையாள படுத்திக் கொண்டார்.

Also Read: ஜி.பி முத்து வைத்து வெங்கட் பிரபுவிடம் வம்புக்கு இழுத்த ரிப்போர்ட்டர்.. தளபதி இயக்குனர் கொடுத்த பதிலடி

ஏஎல் விஜய்: தயாரிப்பாளரும் இயக்குனருமான ஏஎல் விஜய் 2007 ஆம் ஆண்டு அஜித் நடிப்பில் வெளியான கிரீடம் படத்தை இயக்கியது மூலம் தமிழ் சினிமாவிற்கு டைரக்டராக அறிமுகமானார். இந்த படத்தின் வசூல் சொல்லிக் கொள்ளும் அளவுக்கு பெரிதாக இல்லை. இருந்தாலும் ஃபிளாக் படம் என்று சொல்லிவிட முடியாது. இருப்பினும் ஏஎல் விஜய்க்கு தளபதியின் தலைவா படத்தை இயக்குவதற்கான வாய்ப்பு வழியனவாகவே வந்தது.

இவ்வாறு இந்த 7 இயக்குனர்களும் அஜித், விஜய் இருவருக்கும் தோல்வியில்லாத படங்களை கொடுத்திருக்கின்றனர். அப்படித்தான் அஜித்தின் மங்காத்தா படத்தை இயக்கி ஹிட் கொடுத்த வெங்கட் பிரபுவுக்கு இப்போது விஜய்யின் தளபதி 68 பட வாய்ப்பு கிடைத்திருக்கிறது. 10 வருடத்திற்கு கிடைத்த தவமாய் இதை வெங்கட் பிரபு பார்க்கிறார். இவர்களது கூட்டணியில் நிச்சயம் ஒரு தரமான படம் உருவாகும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

- Advertisement -

Trending News