ஜி.பி முத்து வைத்து வெங்கட் பிரபுவிடம் வம்புக்கு இழுத்த ரிப்போர்ட்டர்.. தளபதி இயக்குனர் கொடுத்த பதிலடி

சமீபத்தில் வெங்கட் பிரபு ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றுக் கொண்டார். அங்கு இவரை பார்த்த பத்திரிக்கையாளர்கள் தளபதி 68 படத்திற்கான அப்டேட்டுகளை கேட்க ஆரம்பித்தார்கள். அத்துடன் உங்களுடைய வெற்றி தோல்வி படங்களை பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்டிருக்கிறார்கள். அப்பொழுது வெற்றி தோல்வி இது இரண்டுமே நான் சமமாக தான் பார்க்கிறேன் எதையுமே நான் தலைக்கு மேலே எடுத்துக் கொண்டு போவதில்லை. அப்படி இருந்தால்தான் என்னால் அடுத்த கட்டத்திற்கு நகர முடியும் என்று கூறி இருக்கிறார்.

இதோடு விடாமல் சமீபத்தில் யூடியூப் மூலம் பிரபலமாகி படங்களுக்கு நடிக்க வருகிறார்கள் அவர்களை பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்டிருக்கிறார்கள். மேலும் யூடியூபில் இருந்து ஆபாசமாக பேசுபவர்கள் தற்போது அவர்களுக்கு நடிப்பதற்கு வாய்ப்பு கிடைக்கிறது. அவர்களும் ஒரு சில படங்களில் நடித்து பிரபலமாகி விடுகிறார்கள். அப்படி என்றால் சினிமாவில் நடிப்பவர்களுக்கும் இவர்களுக்கும் என்ன வித்தியாசம். எப்படி நீங்கள் அவர்களை ஏற்றுக் கொள்கிறீர்கள் என்று கேள்வி கேட்டு உள்ளார்.

Also read: முதல்முறையாக இணையும் 7 கூட்டணி.. இணையத்தையே அல்லோலபடுத்திய வெங்கட் பிரபு, தளபதி காம்போ

அதற்கு வெங்கட் பிரபு சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் முழு முயற்சி உடன் அவர்களுடைய திறமைகளை வளர்த்துக்கொண்டு அதற்கு ஏற்ற முறையில் பயிற்சி செய்து சினிமாவில் நடிக்க வந்தால் மட்டும் தான் அவர்களால் நிலையான ஒரு இடத்தை பிடிக்க முடியும்.
அப்படி அவர்கள் கஷ்டப்பட்டு வந்தால் மட்டும் தான் நடிப்பில் வெற்றி பெறுவார்கள். கடைசி வரை அவர்களால் சினிமாவில் இருக்க முடியும்.

அதை விட்டுவிட்டு நீங்கள் சொல்லும் யூட்யூபர்ஸ் ஏதோ பொழுதுபோக்குக்காக எதையாவது வீடியோ மூலமாக காட்டி பணம் சம்பாதிக்கும் என்ற எண்ணத்தில் உள்ளே வந்தவர்கள். அவர்களுக்கு தேவை பணம்தான் தவிர உள் மனதில் அவர்களுக்கு சினிமாவில் எந்தவித அபிப்ராயமும் இருந்திருக்காது. அப்படி வந்தவர்களுக்கு நடிப்பு என்றால் என்ன என்று தெரியாது. ஏதோ அவங்க பண்ற வீடியோவுக்கு லைக் கிடைக்குது நிறைய பேர் வீடியோ பாக்குறாங்க அதன் மூலமா காசு வருகிறது என்று தொடர்ந்து அதை செய்து கொண்டு வருகிறார்கள்.

Also  read: அஜித்தின் அந்த படம் மாதிரி சஸ்பென்ஸ், திரில்லர் வேணும்.. விஜய் கண்டிஷனுக்கு தலையாட்டிய வெங்கட் பிரபு

அவர்கள் அனைவரும் திடீரென்று காணாமல் போய்விடுவார்கள் என்று சொல்லி இருக்கிறார். ஆனால் பத்திரிகையாளர்கள் மறுபடியும் அவரை வம்புக்கு இழுக்கும் விதமாக ஜி பி முத்துவை தான் நீங்கள் சொல்லுகிறீர்களா என்று கேட்டிருக்கிறார். அதற்கு வெங்கட் பிரபு அவர் எல்லாம் நடிகனே கிடையாது. சினிமாவில் உள்ளவர்களோடு இவரை சேர்த்து வைத்து பேசாதீர்கள். அத்துடன் சினிமாவில் இருக்கும் நடிகர்களுடன் ஒப்பிட்டு பார்க்கும் பழக்கத்தை தயவு செய்து விட்டு விடுங்கள்.

சினிமாவில் நடிப்பவர்கள் வேறு, சோசியல் மீடியாவை கையில் வைத்துக்கொண்டு பிரபலமாவது வேறு. இரண்டையும் ஒன்றாக பார்த்து குழப்பிக் கொள்ளாதீர்கள் என்று பத்திரிகையாளர்களுக்கு பதில் அளித்திருக்கிறார். ஆனால் ஒரு விதத்தில் இவர் சொல்வது சரியாகத்தான் இருக்கிறது. அதாவது சமூக வலைத்தளங்களை கையில் வைத்துக்கொண்டு என்னவெல்லாம் செய்யலாம் என்று சிலர் உள்ளே வந்து விடுகிறார்கள். ஆனால் சினிமாவில் கஷ்டப்பட்டு எதையாவது சாதிக்க வேண்டும் என்று அவர்களின் வாழ்நாள் கனவாக வைத்துக் கொண்டு போராடிவரும் கலைஞர்கள் வேற தான்.

Also  read: அயலானுக்கு போட்டியா இல்ல அவதாருக்கு போட்டியா.? வெங்கட் பிரபு சொன்ன தளபதி-68 சீக்ரெட்

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்