திங்கட்கிழமை, டிசம்பர் 2, 2024

600 எபிசோடை கடந்த டாப் சீரியலை ஊற்றி மூடும் பிரபல சேனல்.. டிஆர்பி இல்லாததால் எடுத்த அதிரடி முடிவு

Top serial to be end: ஒவ்வொரு வாரமும் டிஆர்பி-யில் சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ் போன்ற மூன்று சேனல்களுக்கு இடையே தான் கடும் போட்டி நிலவும். இதனால் இந்த மூன்று சேனல்களும் எப்படியாவது டாப் 5 இடத்தை பிடிக்க வேண்டும் என, சின்னத்திரை ரசிகர்களுக்கு பிடித்த மாதிரியான புது புது சீரியல்களை தரை இறக்கி கொண்டிருக்கின்றனர். அதிலும் சமீபத்தில் சன் டிவியில் துவங்கப்பட்ட சிங்கப்பெண்ணே சீரியல் தான் இப்போது டிஆர்பி-யில் முதல் இடத்தை தொடர்ந்து தக்க வைத்துக் கொண்டிருக்கிறது.

ஆனா ஜீ தமிழில் மட்டும் ‘கார்த்திகை தீபம்’ என்ற ஒரே ஒரு சீரியல் தான் இப்போதைக்கு டிஆர்பி-யில் டாப் 10 லிஸ்டில் இடம்பெற்றுள்ளது. இதனால் ஜீ தமிழில் டல்லடிக்கும் பிரபல சீரியல் ஒன்றை ஊத்தி மூட போகின்றனர். கடந்த 2021 ஆம் ஆண்டு டிசம்பர் 27 தேதி அன்று துவங்கப்பட்ட வித்யா No.1 என்ற சீரியல் இப்போது கிளைமாக்ஸை எட்டி உள்ளது.

600 எபிசோடை கடந்த இந்த சீரியலில் கதாநாயகியாக தேஜஸ்வினியும் கதாநாயகனாக புவியரசனும் நடித்துக் கொண்டிருக்கின்றனர். இந்த சீரியலுக்கு கடந்த சில மாதங்களாகவே டிஆர்பி சுத்தமாகவே கிடைப்பதில்லை. இதனால் வித்யா No.1 சீரியலின் கிளைமாக்ஸை வரும் ஞாயிற்றுக்கிழமை மதியம் 1:30 மணிக்கு ஒளிபரப்பு செய்து சீரியலுக்கு எண்டு கார்ட் போடப் போகின்றனர்.

Also Read: பொண்டாட்டி, பிள்ளைக்காக சைக்கோவாக மாறிய கணேஷ்.. பைத்தியக்காரத்தனமாக உருட்டும் பாக்கியலட்சுமி

கிளைமாக்ஸை ஏற்றிய வித்யா No.1

முதலில் இந்த சீரியலின் கதாநாயகனாக இனியன் என்ற கேரக்டரில் சஞ்சய் நடித்துக் கொண்டிருந்தார். அதன் பின் ஷூட்டிங் ஸ்பாட்டில் அவருக்கு விபத்து ஏற்பட்டதும் புவியரசன் ‘இனியன்’ கேரக்டரில் நடித்து வருகிறார். இருந்தாலும் வித்யா No.1 சீரியலுக்கு எதிர்பார்த்த அளவே டிஆர்பி கிடைக்காததால் வரும் ஞாயிற்றுக்கிழமையுடன் இந்த சீரியலை முடித்துவிட்டு அதற்கு பதில் வீரா என்ற புத்தம் புது சீரியலை துவங்கப் போகின்றனர்.

இதில் வைஷு மற்றும் சிபு சூரியன் முக்கிய கேரக்டரில் நடிக்கின்றனர். வரும் திங்கட்கிழமை பிப்ரவரி 26 ஆம் தேதி முதல் வீரா சீரியல் ஜீ தமிழில் ஒளிபரப்பாக போகிறது. இந்த சீரியல் நிச்சயம் டிஆர்பி-யை அடித்து நொறுக்கும் என்று நம்பப்படுகிறது.

Also Read: எம்டன் மகனின் உயிருக்கே உலை வைத்த குடும்பம்.. தான் ஆடாவிட்டாலும் தன் தசை ஆடல பாண்டியா

- Advertisement -spot_img

Trending News