மலையாளத்தில் உச்சகட்ட பயத்தில் கதறவிட்ட 6 திரில்லர் படங்கள்.. டபுள் மடங்கு லாபம் பார்த்த மம்முட்டி

6 Horror Movies: பொதுவாக நம்மிடம் இருக்கும் ஒரு விஷயங்களை விட மற்றவர்கள் வைத்திருக்கும் பொருட்கள் மீது தான் அதிக ஆசைப்படுவது உண்டு. அப்படித்தான் இங்கே இருக்கும் சினிமாக்களில் எத்தனையோ படங்கள் வித்தியாசமான கதைகளுடன் மிரட்டலான நடிப்பை கொடுத்திருந்தாலும், மற்ற மொழிகள் படங்களை பார்க்கும் பொழுது ஒரு பரபரப்பை ஏற்படுத்துகிறது.

அந்த வகையில் சமீபத்தில் மலையாள படங்கள் மீது அதிக மோகம் திரும்பிவிட்டது. மலையாளத்தில் வெளிவந்த படங்களில் உச்சகட்ட பயத்தை ஏற்படுத்தி பார்ப்பவர்களை கதறவிட்ட திரில்லரான படங்கள் ஏகப்பட்டது இருக்கிறது. அதில் சில படங்கள் பற்றி ஒரு தொகுப்பாக பார்க்கலாம்.

ஈர கொலையை நடுங்க வைத்த படங்கள்

பிரம்மயோகம்: ராகுல் சதாசிவன் இயக்கத்தில் இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் வெளிவந்த பிரம்மயோகம் படம் 27 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால் லாபமோ டபுள் மடங்கில் அதிகரிக்கும் வகையில் 85 கோடிக்கு மேல் வசூலித்திருக்கிறது. அதற்கு காரணம் மம்முட்டியின் மிரட்டலான நடிப்பு. இரண்டு பேரை சுற்றி அந்த காலத்தில் பிளாக் அண்ட் ஒயிட் கதையாக திரில்லர் படத்தை கொண்டு வந்திருக்கிறார்கள். மலபார் வனப்பகுதியில் ஒருவர் மாட்டிக்கொண்டு அங்கே ஏற்படக்கூடிய விஷயங்களை பயங்கரமாக காட்டும் விதமாக ஹாரர் மூவியாக இருக்கும்.

பீனிக்ஸ்: விஷ்ணு பரதன் இயக்கத்தில் கடந்த ஆண்டு திகில் திரைப்படமாக பீனிக்ஸ் வெளிவந்தது. இதில் அஜு வர்கீஸ், சந்துருநாத், பகத் மானுவல், அணுப்மேனன் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தின் கதை ஆனது 1990களில் அமைக்கப்பட்ட ஒரு வழக்கறிஞர் அவரது குடும்பத்தினர் மர்மமான வீட்டில் வாழத் தொடங்கும் போது அவர்கள் எதிர்கொள்ளும் வித்தியாசமான சூழ்நிலைகளை முன்னிறுத்தி காட்டும் கதையாக இருக்கும்.

ரோமன்சம்: ஜித்து மாதவன் இயக்கத்தில் கடந்த ஆண்டு நகைச்சுவையுடன் கலந்த திகில் திரைப்படமாக ரோமன்சம் வெளிவந்தது. இதில் சவுப்பின் சாஹிர், அர்ஜுன் அசோகன், சஜின் கோபு மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தில் கதையானது ஏழு திருமணமாகாத ஆண்களை சுற்றி கதை நகர்கிறது. இதில் ஒருவர், நண்பரே சந்திக்க சென்ற பொழுது அவர்கள் பேசக்கூடிய ஒரு ஆவியை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஓஜ்ஜியா போர்டு பயன்படுத்துவதை பார்க்கிறார்கள். அதன்பிறகு ஏற்படக்கூடிய பிரச்சனைகள் இருந்து எப்படி அவர்கள் தப்பிக்கிறார்கள் என்பதை நோக்கி தலைநகருகிறது.

எஸ்ரா: ஜெய் கே இயக்கத்தில் 2017 ஆம் ஆண்டு எஸ்ரா ஹாரர் த்ரில்லர் திரைப்படமாக வெளிவந்தது. இதில் பிரித்விராஜ், பிரியா ஆனந்த் டோமினோ தாமஸ் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். வீட்டில் அழகுக்காக ஒரு ஷோரூமில் அழகான பெட்டி ஒன்றை வாங்கிட்டு வந்து வீட்டில் வைக்கிறார்கள். அந்தப் பெட்டி வீட்டுக்குள் வந்த பிறகு அங்கு இருக்கும் கணவன் மனைவி பார்க்கும் அமானுஷ்ய விஷயங்களை திர்லராக காட்டப்பட்டிருக்கிறது.

நீல வெளிச்சம்: ஆஷிக் அபு இயக்கத்தில் திகில் திரைப்படமாக நீல வெளிச்சம் 2023 ஆம் ஆண்டு வெளிவந்தது. இப்படத்தில் டோமினோ தமாஸ், ரீமா மற்றும் ரோஷன் மேத்யூ ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். இப்படத்தின் கதையானது நள்ளிரவில் ஒரு மாளிகைக்குள் அடையாளம் தெரியாத நபர் நுழைவதும் இருட்டில் ஒரு பேய் உருவத்தால் பயந்து போவதும் மூலமாக படத்தின் கதை நகருகிறது. இதை நோக்கி ஒவ்வொரு காட்சிகளும் உச்சகட்ட பயத்தை ஏற்படுத்தும் அளவிற்கு நடுநடுங்க வைக்கிறது.

பூதக்களம்: ராகுல் சதாசிவன் இயக்கத்தில் கடந்த 2022 ஆம் ஆண்டு திகில் திரைப்படமாக பூதக்களம் வெளிவந்தது இதில் ஷேன் நிகம் மற்றும் ரேவதி நடித்திருக்கிறார்கள். இப்படத்தின் கதை ஆனது அம்மா மற்றும் மகன் ஒரு வீட்டில் இருக்கும் பொழுது மகன் வேலை விஷயமாக வெளியூருக்கு போக ஆசைப்படுகிறார். ஆனால் அம்மா இதே ஊரில் இருந்து வேலை பார்க்கலாம் என்று மகனே அதே வீட்டில் வைத்து வேலைக்கு போக நினைக்கிறார்.

இதனால் ஏற்படும் பிரச்சனைகள் ஒரு பக்கம் இருந்தாலும், அந்த வீட்டில் இருக்கும் அமானுஷ்ய சக்திகள் மூலம் தொடர்ந்து வரும் பிரச்சினைகளை எப்படி சமாளித்து அவர்கள் இருவரும் வெளி வருகிறார்கள் என்பதை காட்டும் விதமாக ஒவ்வொரு காட்சிகளும் பார்ப்பதற்கு ஈரக் கொலை நடுங்கும் வகையில் அமைக்கப்பட்டிருக்கும்

Next Story

- Advertisement -