பேய் படம் பிடிச்சவங்க பார்க்க வேண்டிய 5 மலையாள மூவிஸ்.. திகிலின் உச்சிக்கு கொண்டு போகும் ரோமன்ஜம்

5 best horror movies in Malayalam: பேய் படங்களை பெரும்பாலானோர் தனிமையில் பார்க்க விரும்ப மாட்டார்கள். நண்பர்கள் கூட்டத்துடன் இருக்கும்போது தான் இந்த பேய் படம் பார்க்கும் ஆசையெல்லாம் வரும். ஆனால் ஒரு சிலர் தனிமையில் பேய் படம் பார்த்து அந்த திகில் அனுபவத்தை உணர வேண்டும் எனவும் ஆசைப்படுவார்கள். நம்மில் பெரும்பாலானோர் பேய் படத்தை பார்க்க ஆசைப்பட்டு பின்னர் சில முக்கியமான சீண்டலில் ஒலி அளவை குறைத்து வைத்துக் கொண்டு கூட பயத்தில் பார்த்ததுண்டு. பேய் படம் பார்க்க விரும்புவர்கள் உண்மையான அந்த திகில் அனுபவத்தை உணர கண்டிப்பாக இந்த ஐந்து மலையாள பேய் படங்களை மிஸ் பண்ணாமல் பார்க்க வேண்டும்.

ஐந்து மலையாள பேய் படங்கள்

பூதகாலம்: மலையாளத்தில் கடந்த 2022 ஆம் ஆண்டு ரிலீஸ் ஆன திகில் படம் தான் பூத காலம். இந்த படத்தில் சோனு நிஜாம் மற்றும் ரேவதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள். ஒரு வீட்டில் அம்மா மற்றும் மகனை சுற்றி நடக்கும் அமானுஷ்யத்தை மையப்படுத்தி வெளியான படம் இது. இந்த படத்தை நாம் அமர்ந்து பார்க்கும் பொழுது உண்மையாகவே ஒரு பேய் வீட்டில் நாம் சிக்கிக் கொண்டது போன்ற ஒரு உணர்வை கொடுக்கும்.

ரோமன்ஜம்: ஓஜா போர்டு பற்றி நிறைய படங்கள் தென்னிந்திய சினிமா மற்றும் இல்லாமல் பாலிவுட்டிலும் வெளியாகி இருக்கிறது. ஆனால் ரோமன்ஜம் இதில் முற்றிலும் வித்தியாசமான கதைக்களத்தை கொண்டது. பேச்சிலர்ஸ் தங்கி இருக்கும் ஓஜா போர்டு விளையாட ஆசைப்பட்டு அதன் பின்னர் அவர்கள் சந்திக்கும் அமானுஷ்யங்களை காமெடி மற்றும் திகில் குறையாமல் இந்த படம் சொல்லி இருக்கும். சிரித்துக் கொண்டே திகில் அனுபவத்தை அனுபவிக்க ஆசைப்படுபவர்கள் இந்த படத்தை பார்க்கலாம்.

Also Read:டாக்டர் படிப்பு வேண்டாம் எனக்கு தூக்கி எறிந்து விட்டு நடிக்க வந்த 6 பிரபலங்கள்.. அப்பா பேச்சையும் மீறி சினிமாவுக்கு வந்த அதிதி ஷங்கர்

குஞ்சம்மினிஸ் ஹாஸ்பிடல்: பிரபல மலையாள நடிகர் இந்திரஜித் சுகுமாரன் முக்கிய கேரக்டரில் நடித்த படம் தான் குஞ்சம்மினிஸ் ஹாஸ்பிடல் ஹாஸ்பிடல். இந்த படம் முழுக்க முழுக்க மருத்துவமனையை சுற்றி நடக்கும் காமெடி மற்றும் திகில் நிறைந்த கதை. புதிதாக திறக்கும் ஹாஸ்பிட்டலில் இறந்தவர்கள் எல்லாம் திரும்ப எழுந்து வந்து செய்யும் அட்டகாசம் தான் படத்தின் கதை. சிரிப்போடு சேர்த்து திகிலையும் கொடுத்து இருக்கும் இந்த படம் மிஸ் பண்ணாமல் பார்க்க வேண்டிய ஒன்று.

பிரம்மயுகம்: சமீபத்தில் வெளியாகிய இந்திய திரை உலகை மிரட்டிக் கொண்டிருக்கும் படம் தான் பிரம்மயுகம். இந்த படத்தின் மூலம் மம்மூட்டி தன்னை மீண்டும் ஒரு பாக்ஸ் ஆபீஸ் கலக்சனின் பேரரசன் என்பதை நிரூபித்திருக்கிறார். 17ஆம் நூற்றாண்டில் கேரளாவில் வாழ்ந்த குஞ்சமண் போட்டி என்ற மலையாள மாந்திரீகம் வாழ்க்கையில் நடந்த அமானுஷ்யங்களின் கதை தொகுப்பு தான் இந்த படம். படம் முழுக்க கருப்பு வெள்ளையில் எடுக்கப்பட்டிருக்கிறது. இந்த படமும் இப்போதைக்கு இந்திய அளவில் மிஸ் பண்ணாமல் பார்க்க வேண்டிய பேய் படமாக இருக்கிறது.

சதுர் முகம்: நடிகை மஞ்சு வாரியர் முக்கிய கேரக்டரில் நடித்திருக்கும் படம் தான் சதுர் முகம். இந்த படம் படம் 2021 ஆம் ஆண்டு ரிலீசானது. தேஜஸ்வினி என்னும் கேரக்டரில் நடிக்கும் மஞ்சுவாரியரின் கையில் லிசா என்னும் போன் கிடைத்ததும் அவருடைய வாழ்க்கையில் ஏற்படும் அமானுஷ்ய சம்பவங்கள் மற்றும் அவருடைய உயிருக்கே ஆபத்தாக முடியும் சம்பவத்தை மையமாகக் கொண்டு இந்த படம் எடுக்கப்பட்டது. நொடிக்கு நொடி திகில் அனுபவம் வேண்டும் என நினைப்பவர்களுக்கு இந்த படம் பெரிய வரப்பிரசாதம்.

Also Read:6 படங்களை ரிஜெக்ட் செய்த சாய் பல்லவி.. மணிரத்தினத்துக்கே குட் பாய் சொன்ன மலர்

Sharing Is Caring:

சமீபத்திய சினிமா செய்திகள்