சமீபத்தில் தமிழ் சினிமா ஒதுக்கிய 6 சப்போர்ட் ஆக்டர்ஸ்.. ஸ்டைலிஷ் ஆக்டர் ரகுமானுக்கும் வந்த சோதனை

சிறந்த நடிப்பு திறமை இருந்தும் சில நடிகர்களை தற்போது தமிழ் சினிமாவை ஒதுக்கி வைத்துள்ளது. அதாவது நிறைய புதுமுக நடிகர்கள் வந்ததாலா அல்லது பழைய முகங்கள் பார்த்து மக்கள் சலித்து விடுவார்கள் என்ற காரணத்தினால் இந்த நடிகர்களை தற்போது படத்தில் காண முடியவில்லை. அவ்வாறு தமிழ் சினிமா ஒதுக்கிய 6 நடிகர்களை தற்போது பார்க்கலாம்.

கிஷோர் : பல மொழி படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்தவர் கிஷோர். ஒரு சில படங்களில் வில்லன் கதாபாத்திரத்திலும் மிரட்டி உள்ளார். வம்சம், ஆடுகளம், ஹரிதாஸ், ஆரம்பம் போன்ற படங்களில் இவருடைய நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது. ஆனால் சமீபகாலமாக இவரை திரையில் பார்க்க முடியவில்லை.

சார்லி : வெள்ளந்தியான நடிப்பின் மூலம் மக்கள் மனதில் இடம் பிடித்தவர் நடிகர் சார்லி. பிரண்ட்ஸ், டூயட், நினைத்தேன் வந்தாய், கண்ணுபடபோகுதய்யா, தெனாலி போன்ற பல படங்களில் சிறந்த நடிப்பை வெளிக் காட்டி உள்ளார் சார்லி. தற்போதும் அவர் படங்களில் நடித்தாலும் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு கதாபாத்திரம் கொடுக்கப்படுவதில்லை.

Also Read: வாய்ப்பு இல்லாமல் தவிக்கும் 5 சிறந்த இசையமைப்பாளர்கள்.. ஹிட்டு கொடுத்தும் ஒதுக்கிய சினிமா

ரமேஷ் கண்ணா : இயக்குனர், நடிகர் என பன்முகத் தன்மை கொண்டவர் ரமேஷ் கண்ணா. இவர் பெரும்பாலும் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியுள்ளார். உன்னை நினைத்து, பிரண்ட்ஸ், படையப்பா, வில்லன், வரலாறு போன்ற படத்தில் இவருடைய கதாபாத்திரம் பெரிய அளவில் பேசப்பட்டது.

லிவிங்ஸ்டன் : ஹீரோ, குணச்சித்திர கதாபாத்திரம் என அனைத்திலும் அசத்தியவர் நடிகர் லிவிங்ஸ்டன். 80 களிலேயே சினிமாவில் நடிக்க வந்துள்ளார். 150 படங்களுக்கு மேல் லிவிங்ஸ்டன் நடித்துள்ளார். தற்போது வரையில் லிவிங்ஸ்டன் படங்களில் நடித்து வந்தாலும் பேசும்படியான கதாபாத்திரங்கள் எதுவும் அவருக்கு கொடுக்கப்படுவதில்லை.

Also Read: லிவிங்ஸ்டன் திரைக்கதையில் மாஸ் பண்ணிய 4 முக்கியமான படங்கள்

ரகுமான் : பல மொழி படங்களில் ஹீரோவாக நடித்து அசத்தியவர் ரகுமான். பாலச்சந்தர் இயக்கத்தில் இவர் நடித்த புது புது அர்த்தங்கள் படம் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றது. இதைத் தொடர்ந்த சங்கமம், வாமனன், பில்லா-2, துருவங்கள் பதினாறு போன்ற பல படங்களில் நடித்திருந்தார். ஆனால் தற்போது இவரை தமிழ் சினிமா ஒதுக்கி வைத்துள்ளது.

நட்டி நடராஜ் : பல திறமைகளை உள்ளடக்கியவை நடிகர் நட்டி நட்ராஜ். ஆரம்பத்தில் சைடு கேரக்டர்களில் நடித்து வந்த இவருக்கு சதுரங்க வேட்டை படம் மிகப்பெரிய வரவேற்பை கொடுத்தது. அதன்பிறகு நம்ம வீட்டுப்பிள்ளை, கர்ணன் போன்ற படங்களில் வில்லனாக அசத்தியிருந்தார்.

Also Read: இயக்குனராக தோற்று பின் நடிகராக வெற்றி கண்ட 7 பேர்.. அஜித்தை இயக்கிய ரமேஷ் கண்ணா!

Next Story

- Advertisement -