லிவிங்ஸ்டன் திரைக்கதையில் மாஸ் பண்ணிய 4 முக்கியமான படங்கள்.. கமலுக்கே பெரிய ஹிட் கொடுத்துருக்காரே

தமிழ் சினிமாவில் ஒரு நடிகராக, ஒரு திரைக்கதை எழுத்தாளராக இன்று வரை மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் லிவிங்ஸ்டன். இவர் ஆரம்பகாலத்தில் சினிமாவிற்காக ராஜன் என்ற தனது பெயரை மாற்றிக் கொண்டாராம். பூந்தோட்ட காவல்காரன் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். 1996 சுந்தரபுருஷன் என்ற திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்தவர்.

இவர் ஒரு குணச்சித்திர நடிகராக தான் நமக்கு தெரியும் ஆனால் தமிழ் சினிமாவில் ஒரு திரைக்கதை ஆசிரியராக பணியாற்றி 4 சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து உள்ளார், அந்த திரைப்பட வரிசையை த்ஜர் தற்போது பார்க்கலாம்.

கன்னி ராசி: பாண்டியராஜன் இயக்கத்தில் பிரபு, ரேவதி, ஜனகராஜ், கவுண்டமணி போன்ற பிரபலங்கள் நடிப்பில் 1985இல் வெளிவந்த படம் கன்னி ராசி. இப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்து இருப்பார். அனைத்து பாடல்களும் சூப்பர் ஹிட்டானது. இந்த படம் கிட்டத்தட்ட 100 நாட்களை தாண்டி ரசிகர் மனதில் இன்றும் ரிப்பீட் மோடில் பார்க்கக்கூடிய படமாக உள்ளது.

காக்கி சட்டை: ராஜசேகர் இயக்கத்தில் கமல்ஹாசன், அம்பிகா, மாதவி, சத்யராஜ் போன்ற பிரபலங்கள் நடிப்பில் 1985-ல் வெளிவந்த படம் காக்கி சட்டை. இந்த படத்தில் திரைக்கதை எழுத்தாளராக லிவிங்ஸ்டன் இடம் பிடித்திருப்பார். இசைஞானி இளையராஜாவின் இசை இந்த படத்தின் வெற்றிக்கு மாபெரும் உறுதுணையாக இருந்தது.

இந்த படமும் பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்து பாக்ஸ் ஆபீஸ் வசூல் சாதனை படைத்தது. ஒரு போலீஸ் அதிகாரியாக வேண்டும் என்ற குறிக்கோளோடு இருக்கும் இளைஞனின் வாழ்க்கையை பற்றி மிக அற்புதமாக எடுத்திருப்பார்கள்.

இன்றளவும் இன்ஸ்பிரேஷனல் மூவி என்ற வரிசையில் காக்கி சட்டை முக்கியமான இடத்தில் உள்ளது.

அறுவடை நாள்: குமார் இயக்கத்தில் லிவிங்ஸ்டன் திரைக்கதையில் 1986ல் வெளிவந்த படம் அறுவடை நாள். இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜா இசை அமைத்திருப்பார். அனைத்து பாடல்களும் சூப்பர் டூப்பர் ஹிட்டானது. முக்கியமான கதாபாத்திரத்தில் பிரபு, பல்லவி, வடிவுக்கரசி, குமரிமுத்து போன்ற பிரபலங்கள் நடித்திருப்பார்கள். மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்ற படம்.

சுந்தர புருஷன்: முழுக்க முழுக்க காமெடி கதாபாத்திரத்தில் லிவிங்ஸ்டன், வடிவேலு பட்டைய கிளப்பி இருப்பார்கள். ரசிகர் மத்தியில் இன்றளவும் வயிறு குலுங்க குலுங்க சிரிக்க படமாகப் பார்க்கப்படுகிறது. லிவிங்ஸ்டனுக்கு ஜோடியாக ரம்பா நடித்திருப்பார், கட்டாயப்படுத்தி திருமணங்கள் செய்யும் வழக்கத்தை சாடும் கதைக்களமாக லிவிங்ஸ்டன் கதை மற்றும் திரைக்கதை எழுதி இருப்பார். இந்த படத்தின் வெற்றியை வைத்து மற்ற மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. ஒரு நடிகனாக தமிழ் சினிமாவில் லிவிங்ஸ்டனுக்கு அங்கீகாரம் கொடுத்த படம்.

Next Story

- Advertisement -