இயக்குனராக தோற்று பின் நடிகராக வெற்றி கண்ட 7 பேர்.. அஜித்தை இயக்கிய ரமேஷ் கண்ணா!

வணக்கம் சினிமா பேட்டை வாசகர்களே! நமது சினிமா பேட்டை வலைதளம் வாயிலாக பல சுவாரஸ்யமான சினிமா செய்திகளை கண்டு வருகிறோம். அந்த வகையில் இன்று நாம் காணவிருக்கும் தலைப்பு நம்மையே ஆச்சரியப்படுத்தும். இந்த நகைச்சுவை நடிகர்கள் எல்லாம் டைரக்டர்களா? என்று கேட்கத் தோன்றும். அந்த வரிசையை தற்போது காணலாம்.

ஜி.மாரிமுத்து: பல திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருபவர் மாரிமுத்து. பரியேறும் பெருமாள் படத்தில் கயல் ஆனந்தியின் தந்தையாக சிறப்பாக நடித்திருப்பார். இவர் கண்ணும் கண்ணும், புலிவால் ஆகிய திரைப்படங்களை இயக்கியிருக்கிறார். இவர் இயக்கிய இரண்டு படங்களும் சரியாக போகாத காரணத்தால் இயக்கத்தை விட்டு விட்டு நடிப்பதில் கவனம் செலுத்துகிறார்.

ரவி மரியா: ரவி மரியாவின் கோபத்துடன் நகைச்சுவை செய்யும் நடிப்பிற்கு பல ரசிகர்களுக்கு உண்டு. தேசிங்கு ராஜா திரைப்படத்தில் சூரியை வைத்து இவர் செய்யும் காமெடி இன்றும் நம் மனதில் நிற்கிறது. ஜீவா நடித்த முதல் படமான ஆசை ஆசையாய், நட்டி நட்ராஜ் நடித்த மிளகா ஆகிய படங்களை இவர் இயக்கி உள்ளார்.

மனோபாலா: பல திரைப்படங்களில் இன்று காமெடி நடிப்பில் கலக்கி வருபவர் மனோபாலா. இவர் நடிப்பில் வெளியான சிறுத்தை, கண்டேன் காதலை, கலகலப்பு படத்தின் நகைச்சுவை காட்சிகள் மிகப்பிரபலம். ரஜினிகாந்த் நடித்த ஊர்க்கவலன் படம் மூலம் இவர் இயக்குனராக அறிமுகமானார். சிறகுகள், நைனா போன்ற படங்களையும் இயக்கி உள்ளார்.

சித்ரா லட்சுமணன்: சந்தானம் களாய்ப்பாரே ‘ இது என்ன பங்களா நாய் ஹேர் ஸ்டைல்’ என்று சித்ரா லட்சுமணன், அவரும் இயக்குனர் தான். அதுவும் கமல் ஹாசனை வைத்து சூரசம்ஹாரம், பிரபுவை வைத்து பெரிய தம்பி, கார்த்திக்கை வைத்து சின்ன ராஜா போன்ற படங்களை இயக்கியவர். தற்போது யூடியூப் சேனல் ஒன்றை நடத்தி வருகிறார்.

ரமேஷ் கண்ணா: பல திரைப்படங்களில் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருபவர் ரமேஷ் கண்ணா. பம்மல் கே சம்பந்தம், வீரம் போன்ற படங்களில் இவர் பங்களிப்பும் அதிகம். இவர் தல அஜித் குமார், தேவயானி நடிப்பில் வெளியான தொடரும் படத்தை இயக்கியவர் என்றால் பலருக்கும் ஆச்சரியமாக இருக்கும்.

ஆர்.என்.ஆர் மனோகர்: விவேக் ஒரு படத்தில் ‘ ஆந்தை கண்ணன் ‘ என்று இவரை குறிப்பிடுவார். கைதி படத்தில் ஐ.ஜி கதாபாத்திரத்திலும் நடித்து இருப்பார். பார்க்க கம்பீரமாக இருக்கும் இவர் நகுல் நடித்த மாசிலாமணி, நந்தா நடித்த வேலூர் மாவட்டம் ஆகிய படங்களை இயக்கியவர்.

சிங்கம்புலி: நகைச்சுவை வேடங்களில் பின்னி பெடல் எடுக்கும் சிங்கம் புலி, ஒரு இயக்குனர் என்றால் பலர் நம்ப தயங்குவார்கள். அந்த அளவுக்கு இவர் நடித்த மணம்கொத்தி பறவை, மாயாண்டி குடும்பத்தார் போன்ற படங்களில் சிறப்பாக நடித்திருப்பார். இவர் தல அஜித்தை வைத்து ரெட் என்ற படத்தையும், சூரியா ஜோதிகாவை வைத்து மாயாவி என்ற படத்தையும் இயக்கி உள்ளார்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்