தீபாவளியன்று ரிலீசான 6 படங்கள்.. கமல், ரஜினியுடன் போட்டியிட்டு ஜெயித்த விஜயகாந்த், பாக்யராஜ்

தீபாவளி என்றாலே மற்ற திருவிழாக்களை போல் இல்லாமல் அன்றைய நாள் முழுக்க களைகட்டும். அதுவும் தீபாவளி அன்று முக்கிய நடிகர்களின் படங்கள் ரிலீஸ் ஆகிறது என்றால் பட்டாசு, மேள தாளத்துடன் கொண்டாடி தீர்த்துவிடுவார்கள். ரஜினி, கமல், அஜித், விஜய் ரசிகர்களுக்கு அவர்களது ஹீரோக்களின் படங்கள் தீபாவளி அன்று ரிலீஸ் என்றால் டபுள் ட்ரீட்டாக அமைந்து விடும்.

தீபாவளி அன்று ஒரு படம் ரிலீஸ் ஆனாலே பெரிய கொண்டாட்டம் தான். ஆனால் 1992 ஆம் ஆண்டு தீபாவளி அன்று அதாவது அக்டோபர் 25 1992 ஆண்டு மொத்தம் 6 படங்கள் ரிலீஸ் ஆகி அந்த 6 படங்களுமே மிகப்பெரிய ஹிட் அடித்து இருக்கிறது.

Also Read: செம டோஸ் விட்ட சிவாஜி.. எவ்வளவு சொல்லியும் கமலை விரட்டிய நடிகர் திலகம்

தேவர் மகன்: கமலும் சிவாஜியும் சேர்ந்து நடித்த தேவர் மகன் திரைப்படம் 1992 ஆம் ஆண்டு தீபாவளிக்கு ரிலீசான படங்களில் ஒன்று. இந்த படத்திற்கான கதை மற்றும் திரைக்கதையை கமலஹாசன் ஒரே வாரத்தில் எழுதி முடித்தாராம். இந்த படம் 100 நாட்களுக்கு மேல் ஓடி வெற்றி பெற்றதோடு அந்த ஆண்டிற்கான எல்லா விருதுகளையும் வென்றது.

பாண்டியன்: இயக்குனர் எஸ் பி முத்துராமன் இயக்கத்தில் ரஜினிகாந்த், குஷ்பூ, ஜனகராஜ், ஜெயசுதா ஆகியோர் சேர்ந்து நடித்த திரைப்படம் பாண்டியன். இந்த படம் கன்னட படத்தின் ரீமேக் ஆகும். 1992 ஆம் ஆண்டு தீபாவளிக்கு ரிலீசான இந்த படம் 100 நாட்களுக்கு மேல் ஓடி வெற்றிக் கண்டது.

காவியத்தலைவன்: ரஜினி, கமல் படங்களோடு போட்டியிட்ட விஜயகாந்தின் திரைப்படம் காவியத்தலைவன். இந்த படத்தில் பானுப்பிரியா, மஞ்சுளா விஜயகுமார், MN நம்பியார் ஆகியோர் நடித்திருந்தனர். தீபாவளிக்கு மிகப்பெரிய ஜாம்பவான்களான ரஜினி, கமலுடன் போட்டியிட்டு விஜயகாந்த் இந்த படத்தில் வெற்றி கண்டார்.

Also Read: விஜயகாந்தை வைத்து 7 படங்கள் இயக்கிய பிரபலம் யார் தெரியுமா? அதிலும் 5-க்கு மேல சூப்பர் டூப்பர் ஹிட்

திருமதி பழனிசாமி: சத்யராஜ் நடித்து சுந்தர்ராஜன் இயக்கிய திருமதி பழனிசாமி திரைப்படமும் 1992 ஆம் ஆண்டு தீபாவளி அன்று ரிலீஸ் ஆனது. படிக்காத சத்யராஜ் ஒரு டீச்சரை திருமணம் செய்ய வேண்டும் என்பதை லட்சியமாக கொண்டு சுகன்யாவை காதலித்து திருமணம் செய்வார். இந்த படம் முழுக்க முழுக்க நகைச்சுவை நிறைந்த படம் ஆகும்.

செந்தமிழ்ப்பாட்டு: பி.வாசு இயக்கத்தில் இளைய திலகம் பிரபு நடித்த திரைப்படம் செந்தமிழ்பாட்டு. இந்த படத்தில் சுகன்யா, கஸ்தூரி, சுஜாதா ஆகியோர் நடித்திருந்தனர். இந்த படமும் 100 நாட்களை கடந்து ஓடி வெற்றி கண்டது.

ராசுக்குட்டி: இயக்குனர் மற்றும் நடிகர் பாக்யராஜ் எழுதி, இயக்கி நடித்த திரைப்படம் ராசுக்குட்டி. இந்த படத்தில் பாக்யராஜ், ஐஸ்வர்யா, மனோரமா, கல்யாண் குமார் ஆகியோர் நடித்திருந்தனர். இந்த படம் வசூலில் நல்ல வெற்றியைப் பெற்றது. இதன் வெற்றியை தொடர்ந்து தெலுங்கு, கன்னடம், ஹிந்தி மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது.

Also Read: பார்த்திபன், பாண்டியராஜன் என வளர்த்து விட்ட பாக்யராஜ்.. ஒருவருக்கு மட்டும் நடந்த துரதிர்ஷ்டம்

Next Story

- Advertisement -