ரஜினிகாந்த், ஸ்ரீதேவி கொடுத்த மரண மாஸ் ஹிட்ஸ்.. வசூல் வேட்டை ஆடிய 6 படங்கள்

90களில் தனித்துவமான ஸ்டைலின் மூலம் தனக்கென பெரும் ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டுள்ள சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகும் ஒவ்வொரு படங்களையும் திரையரங்குகளில் அவருடைய ரசிகர்கள் திருவிழா போல் கொண்டாடுவார்கள். அதிலும் ஸ்ரீதேவியுடன் இவர் இணைந்து நடித்த 6 படங்கள் சூப்பர் சூப்பர் ஹிட் அடித்தது மட்டுமல்லாமல் திரையரங்கில் 175 நாட்களுக்கு மேல் ஓடி வசூல் சாதனை புரிந்தது.

ஜானி: 1980 ஆம் ஆண்டு இயக்குனர் மகேந்திரன் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இரு வேடங்களில் நடித்து அசத்திய படமான இந்த படத்தில் ரஜினிகாந்த் உடன் ஸ்ரீதேவி நடித்துள்ளார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஜானி என்ற திருடன் கதாபாத்திரத்திலும் வித்யாசாகர் என்னும் நாவிதன் கதாபாத்திரத்திலும் என இரு வேடத்திலும் மிக தத்ரூபமாக நடித்துள்ளார்.

ஜானி படத்திற்கு இளையராஜா இசை அமைத்துள்ளார். இதில் வரும் அனைத்து பாடல்களும் சூப்பர் ஹிட் ஆகின. அதிலும் “ஆசை காத்துல தூது விட்டு” என்ற பாடல் இன்றளவும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த பாடல்களில் ஒன்றாக உள்ளது. இந்த படம் ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று 100 நாட்களுக்கு மேல் திரையரங்கில் திரையிடப்பட்டு பாக்ஸ் ஆபீஸில் வெற்றி பெற்றது.

Also Read: சத்யராஜ், ரஜினிக்கு நிகராக மிரட்டிய 5 படங்கள்.. இப்பவும் மறக்கமுடியாத என்னம்மா கண்ணு சௌக்கியமா!

பிரியா: 1978 ஆம் ஆண்டு இயக்குனர் எஸ்பி முத்துராமன் இயக்கத்தில் எழுத்தாளர் சுஜாதா எழுதிய பிரியா என்ற புதினத்தை அடிப்படையாகக் கொண்ட நாவலில் இருந்து ஒரு சில மாற்றங்கள் மட்டும் செய்யப்பட்டு உருவான திரைப்படம் ஆகும். இதில் ரஜினிகாந்துடன் ஸ்ரீகாந்த், ஸ்ரீதேவி மற்றும் பலர் நடித்துள்ளனர். இதிலும் சூப்பர் ஸ்டார் ஸ்ரீதேவியுடன் ஜோடி போட்டு கலக்கி இருப்பார்.

அடுத்த வாரிசு: 1983 ஆம் ஆண்டு இசையமைப்பாளர் இளையராஜா இசையமைப்பில் வெளியான சூப்பர் ஹிட் திரைப்படம் ஆகும். இதில் ரஜினிகாந்துடன் ஸ்ரீதேவி, ஜெய சங்கர், சில்க் ஸ்மிதா, மனோரமா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அடுத்த வாரிசு திரைப்படத்தில் ரஜினிகாந்த் கண்ணன் கதாபாத்திரத்தில் மிகச் சிறப்பாக நடித்திருப்பார். படத்தில் இவரின் நடிப்பு ரசிகர்களால் ரசிக்க கூடிய வகையில் அமைந்துள்ளது.

ராணுவ வீரன்:ராணுவ வீரன் 1981 ஆம் ஆண்டுஆர்.எம்.வீரப்பன் தயாரிப்பில் ரஜினிகாந்த் ஸ்ரீதேவி ஜோடி சேர்ந்த சூப்பர் ஹிட் திரைப்படம் ஆகும்.எம்ஜிஆர் அரசியலில் ஈடுபட்டதால் இப்படம் அவருக்கு கைநழுவி போனது.எம் ஜி ராமச்சந்திரனை மனதில் வைத்து எழுதிய இப்படத்திற்கு ரஜினிகாந்த் ஹீரோவாக நடித்தது அவரது சினிமா துறையில் ஒரு திருப்பமுணையை ஏற்படுத்திய படமாக அமைந்தது.

Also Read: ஆக்டிங் ஸ்கூலில் ரஜினியுடன் சேர்ந்து படித்த 5 நடிகர்கள்.. இப்பவும் அடிக்கடி ரகசியமாய் சந்திக்கும் சூப்பர் ஸ்டார்

போக்கிரி ராஜா: 1982 ஆம் ஆண்டு எம்எஸ் விஸ்வநாதன் இசையமைப்பில் வெளியான இந்தப் படத்தில் ரஜினிகாந்த் உடன் ராதிகா அடிக்கும் லூட்டி படத்தில் அல்டிமேட் ஆக இருக்கும். இதில் வரும் அனைத்து பாடல்களும் சூப்பர் ஹிட். இப்படம் மாபெரும் வெற்றி பெற்றதுடன் 175 நாட்களுக்கு மேல் திரையில் ஓடி சாதனை படைத்தது .

நான் அடிமை இல்லை: 1986 ஆம் ஆண்டு இயக்குனர் துவாரகீஸ் இயக்கத்தில் வெளியான ஒரு காதல் திரைப்படம் இந்தப் படத்தில் ரஜினிகாந்த் மற்றும் ஸ்ரீதேவி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இதில் ரஜினிகாந்த் விஜய் என்ற கதாபாத்திரத்தில் ஒரு புகைப்பட கலைஞராக நடித்துள்ளார். ஸ்ரீதேவி தமிழில் நடித்து வெளிவந்த கடைசி திரைப்படம் இந்தப் படம். அதன் பிறகு 2012ல் இங்கிலீஷ் விங்கிலீஷ் என்ற படத்தின் மூலம் தமிழில் தோன்றினார்.

Also Read: ரீ ரிலீஸ் வசூலில் கோடிகளை தொடுவதற்கு தட்டு தடுமாறும் பாபா.. 3 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

இவ்வாறு ரஜினிகாந்த் மற்றும் ஸ்ரீதேவி ஜோடி சேர்ந்து நடித்த படங்கள் சூப்பர் ஹிட் ஆனதோடு, இவர்கள் இருவரும் ரியல் ஜோடியாக மாற வேண்டும் என்கின்ற அளவுக்கு இவர்களது ஜோடி ரசிகர்களை வசியம் செய்வது. அத்துடன் இவர்கள் நடிப்பில் வெளியான படங்கள் அனைத்தும் வசூலிலும் பட்டையை கிளப்பியது.

Next Story

- Advertisement -