திங்கட்கிழமை, டிசம்பர் 16, 2024

பெண்ணுக்கும், ஆணுக்கும் உள்ள நட்பை அழகாக காட்டிய 6 படங்கள்.. சேரனுக்கு தோள் கொடுக்கும் தோழனாக இருந்த நடிகை

Friendship Movies: என்னதான் வித்தியாசமான படங்களை பார்த்து நாம் மகிழ்ந்து வந்தாலும், நட்பு ரீதியான படங்கள் பார்க்கும்போது நம் மனதிற்கு இணைப் புரியாத ஒரு சந்தோஷத்தை கொடுக்கும். அதிலும் ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் உள்ள நட்பை பார்க்கும் பொழுது இந்த மாதிரி ஒரு பிரண்ட்ஷிப் நம்ம வாழ்க்கையிலும் இருந்தால் நன்றாக இருக்கும் என்று பொறாமைப்படும் அளவிற்கு சில படங்கள் வெளிவந்திருக்கிறது. அந்த படங்களை பற்றி பார்க்கலாம்.

5 ஸ்டார்: இயக்குனர் சுசி கணேசன் இயக்கத்தில் 2002 ஆம் ஆண்டு 5 ஸ்டார் திரைப்படம் வெளிவந்தது. இதில் கனிகா, பிரசன்னா, கிருஷ்ணா மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இப்படம் முழுக்க முழுக்க கல்லூரி நண்பர்களின் நட்பை வைத்து எடுக்கப்பட்டிருக்கும். அதிலும் ஆணுக்கும் பெண்ணுக்கும் உள்ள நட்புக்குள் எந்த ஒரு வித்தியாசமும் கிடையாது என்று சொல்லும் அளவிற்கு பெண்களுக்கு திருமணம் ஆன பிறகும் நட்புடன் இருப்பதை அழகாக காட்டப்பட்டிருக்கும்.

Also read: விட்டா கிரணையே மிஞ்சிடுவாங்க போல.. மாதவன் பட நடிகையா இது.? செகண்ட் ரவுண்டுக்கு விரிக்கும் வலை

பிரியமான தோழி: இயக்குனர் விக்ரமன் இயக்கத்தில் 2003 ஆம் ஆண்டு பிரியமான தோழி திரைப்படம் வெளிவந்தது. இதில் மாதவன், ஜோதிகா, ஸ்ரீதேவி, வினீத் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தில் மாதவன் மற்றும் ஸ்ரீதேவி சிறு வயதிலிருந்தே நண்பர்களாக ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு அவர்களுடைய நட்பின் ஆழத்தை அழகாக காட்டி இருப்பார்கள்.

பெங்களூர் டேஸ்: இயக்குனர் அஞ்சலி மேனன் இயக்கத்தில் 2014 ஆம் ஆண்டு பெங்களூர் டேஸ் திரைப்படம் வெளிவந்தது. இதில் நிவின் பாலி, துல்கர் சல்மான், பகத் பாசில்,நஸ்ரியா, பார்வதி திருவோடு மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இப்படம் கேரளாவில் இருந்து பெங்களூருக்கு செல்லும் மூன்று நண்பர்களை சுற்றி எடுக்கப்பட்டிருக்கும். அத்துடன் இவர்களுடைய நட்பை பார்ப்பதற்கு ரொம்பவே ஹேப்பியாக கடைசி வரை நண்பர்கள் நம்முடன் இருந்தால் வாழ்க்கை சிறப்பாக அமையும் என்பதை சொல்லும் விதமாக எடுக்கப்பட்டிருக்கும்.

Also read: சினேகாவையே கவர்ச்சி காட்ட வைத்த 5 இயக்குனர்கள்.. செல்வராகவன் கொடுத்த மோசமான கதாபாத்திரம்

புன்னகை தேசம்: கே. ஷாஜகான் இயக்கத்தில் 2002 ஆம் ஆண்டு புன்னகை தேசம் திரைப்படம் வெளிவந்தது. இதில் தருண், சினேகா, குணால், தாமு மற்றும் ப்ரீத்தி விஜயகுமார் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தின் கதையானது நல்ல நண்பர்கள் இருந்தால் வாழ்க்கையில் ஜெயித்து காட்டலாம் என்று சொல்லும் விதமாக இருக்கும். அத்துடன் நண்பர்கள் ஒற்றுமையாக இருந்தால் எதையும் சாதிக்க முடியும் என்பதை காட்டிய படமாகும்.

காதலும் கடந்து போகும்: நலன் குமாரசாமி இயக்கத்தில் 2016 ஆம் ஆண்டு காதலும் கடந்து போகும் திரைப்படம் வெளிவந்தது. இதில் விஜய் சேதுபதி, மடோனா செபாஸ்டின் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தில் மடோனா வேலை இல்லாமல், நண்பர்களும் இல்லாமல் தனியாக தவித்துக் கொண்டிருக்கும் நிலையில் அவருக்கு நண்பராக இருந்து அவருடைய வாழ்க்கையில் ஜெயிப்பதற்கு வழிகாட்டியாக அனைத்தையும் செய்து முடித்து கூடவே பக்கபலமாக இருப்பார்.

ஆட்டோகிராப்: சேரன் இயக்கத்தில் 2004 ஆம் ஆண்டு ஆட்டோகிராப் திரைப்படம் வெளிவந்தது. இதில் சேரன், கோபிகா, சினேகா மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தின் கதை ஆனது காதல் தோல்வியால் வாழ்க்கையை இருட்டில் ஓட்டிக் கொண்டிருக்கும் சேரனுக்கு தோள் கொடுக்கும் தோழியாக சினேகா அவருடைய நட்பின் ஆழத்தை காட்டி இருப்பார். அதே நேரத்தில் எவ்வளவு பிரச்சனைகள் வந்தாலும் அதை எதிர்கொள்ள நம்மிடம் உண்மையான நண்பர்கள் இருந்தால் போதும் என்று உணர்த்தும் படமாக வெளிவந்திருக்கும்.

Also read: கேஎஸ் ரவிக்குமாரை பிரிந்ததற்கு இதுதான் காரணம்.. ஓப்பனாக பேசிய சேரன்

- Advertisement -

Trending News