காதலுக்காக உயிரை விட்டு நடித்த 6 படங்கள்.. மீனா இறந்ததும் கூடவே உயிரை விட்ட நடிகர்

meena-actress
meena-actress

பொதுவாக சினிமாவில் வருகிற எல்லா படங்களிலும் கண்டிப்பாக ஹீரோ ஹீரோயின்களுக்கு காதல் ஏற்பட்டு அவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கிற மாதிரி கதை கண்டிப்பாக இருக்கும். அந்த நேரத்தில் அவர்களுடைய காதல் தோல்வி அடைந்த நிலையில் அதை தாங்கிக் கொள்ள முடியாமல் காதலுக்காக உயிரை விட்டிருக்கிறார்கள். அப்படி எந்த படங்களில் காதலுக்காக தற்கொலை கொண்டார்கள் என்பதைப் பற்றி பார்க்கலாம்.

மைனா: பிரபு சாலமன் இயக்கத்தில் 2010 ஆம் ஆண்டு மைனா திரைப்படம் வெளிவந்தது. இதில் விதார்த், அமலாபால், தம்பி ராமையா, சேது மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தில் விதார்த் சுருளி கேரக்டரிலும், அமலாபால் மைனவாக நடித்திருப்பார்கள். இதில் இளம் பருவத்திலேயே இவர்கள் ஒருவரை ஒருவர் காதலித்து வருவதால் வீட்டிற்கு எதிர்த்து காதலில் சேர நினைப்பார்கள். ஆனால் ஒரு சூழ்நிலையில் மைனாவிற்கு ஏற்பட்ட விபத்தினால் தன்னுடைய காதலில் சேர முடியாது என்ற துக்கத்தில் இவரும் தற்கொலை செய்து கொள்வார். இந்த படத்தின் கிளைமாக்ஸ் பலபேரின் மனதில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும்.

புன்னகை மன்னன்: கே பாலச்சந்தர் இயக்கத்தில் 1986 ஆம் ஆண்டு புன்னகை மன்னன் திரைப்படம் வெளிவந்தது. இதில் கமலஹாசன், ரேவதி, ஸ்ரீவித்யா, ரேகா மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இப்படம் ஆரம்பிக்கும் போதே கமல் மற்றும் ரேகா ஒருவரை ஒருவர் காதலித்துக் கொண்டு அவர்கள் காதலில் ஒன்று சேர முடியாமல் அதனால் தற்கொலை பெயர் ஒரு குன்றுக்கு வந்து மலை மீதி ஏறி இருவருமே தற்கொலை செய்து கொள்வார்கள். ஆனால் அதிர்ஷ்டவசமாக கமல் மட்டும் காப்பாற்றப்பட்டு விடுவார். பாவம் கடைசியில் ரேகாவுடன் நிலைமை தான் பாவமாக முடிந்து விடும்.

Also read: சப்போர்ட் கேரக்டரில் நடித்து வாழ்க்கை ஓட்டின 6 நடிகர்கள்.. எது கொடுத்தாலும் நின்னு பேசும் விஜய் நண்பர்

சேது: பாலா இயக்கத்தில் 1999 ஆம் ஆண்டு சேது திரைப்படம் வெளிவந்தது. இதில் விக்ரம் அபிதா, சிவகுமார், ஸ்ரீமன் மற்றும் மனோபாலா ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தில் விக்ரம் மற்றும் அபிதா இருவரும் உருகி உருகி காதலித்து, அந்த காதலில் சேர முடியாமல் அபிதா, விக்ரமனின் நிலைமையை பார்த்து தற்கொலை செய்து கொள்வார். இப்படம் தான் விக்ரமுக்கு மிகப்பெரிய திருப்புமுனையாகவும் அமைந்தது.

பாரதி கண்ணம்மா: சேரன் இயக்கத்தில் 1997 ஆம் ஆண்டு பாரதி கண்ணம்மா திரைப்படம் வெளிவந்தது. இதில் பார்த்திபன், மீனா, விஜயகுமார், வடிவேலு மற்றும் ராஜா ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இதில் பார்த்திபன் மற்றும் மீனா ஒருவரை ஒருவர் காதலிப்பார்கள் ஆனால் இவர்கள் காதலில் ஜாதி தடையாக இருப்பதால் இவர்கள் ஒன்று சேர முடியாது என்று நினைத்து மீனா தற்கொலை செய்து கொள்வார். இதைப் பார்த்த பார்த்திபனும் அதே தீயில் விழுந்து இறந்து போய்விடுவார். இப்படி காதலுக்காக இருவரும் அவர்களுடைய உயிரை விட்டுவிடுவார்கள். இந்த கிளைமேக்ஸ் காட்சி பல பேரின் மனதை உலுக்கி எடுத்து இருக்கும்.

Also read: பல வருட சினிமா ட்ரெண்டை மாற்றிய 5 இயக்குனர்கள்.. அவெஞ்சர்ஸையே மிரள வைத்த ரஜினி

வைதேகி காத்திருந்தாள்: ஆர்.சுந்தர்ராஜன் இயக்கத்தில் 1984 ஆம் ஆண்டு வைதேகி காத்திருந்தால் திரைப்படம் வெளிவந்தது. இதில் விஜயகாந்த், ரேவதி, கவுண்டமணி, செந்தில் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தில் சொந்த உறவாக இருக்கும் மாமனை கல்யாணம் செய்து கொள்ள வேண்டும் என்று ஆசையில் இருக்கும் வைதேகி இடம் விஜயகாந்த் சும்மா விளையாட்டு ஆக நான் வேறு ஒருவரை திருமணம் செய்து கொள்ள போறேன் என்று சொல்வார். ஆனால் இதை உண்மை என்று நம்பி தன்னுடைய கல்யாணம் மாமனுடன் நடக்காதா என்று அவசரத்தில் தற்கொலை செய்து கொள்வார்.

ராஜாவின் பார்வையில்: ஜானகி செளந்தர் இயக்கத்தில் 1995 ஆம் ஆண்டு ராஜாவின் பார்வையிலே திரைப்படம் வெளிவந்தது. இதில் விஜய், அஜித், இந்திராஜா மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தில் அஜித் மற்றும் விஜய் இருவரும் நெருங்கிய நண்பர்களாக பேச்சுலர் ரூமில் தங்கி இருப்பார்கள். அப்பொழுது அஜித் அந்த வழியாக போகும் பஸ்ஸில் ஒரு பெண்ணை பார்த்து ஆசைப்படுவார். பிறகு இவருடைய காதலை தெரியப்படுத்திய பிறகு அந்தப் பெண் இவரை ஏமாற்றி வேறு ஒருவரை திருமணம் செய்து கொள்ளும். இதை தாங்கிக் கொள்ள முடியாத அஜித் தற்கொலை செய்து கொள்வார்.

Also read: அஜித் நிராகரித்த 5 பிரபலங்கள்.. அவமானப்படுத்தியதால் இன்று வரை வாய்ப்பு கொடுக்காத ஏ கே

Advertisement Amazon Prime Banner