வியாழக்கிழமை, டிசம்பர் 12, 2024

பிக் பாஸ்க்கு இதெல்லாம் ஒன்னும் புதுசு இல்ல.. இதுவரை தலையை பிய்த்து கொண்டு தானாக ஓடிய 6 பேர்

Bigg Boss Season 7: கடந்த வாரம் தொடங்கப்பட்ட பிக் பாஸ் சீசனில் இருந்து தானாக முன்வந்து வெளியேறிய பவா செல்லதுரை தான் தற்போது சமூக வலைத்தளங்களில் பயங்கர ட்ரெண்டாக இருக்கிறார். ஆனால் இவருக்கு முன்பே இதுவரை நடந்த பிக் பாஸ் சீசனில் இருந்து மொத்தம் ஆறு போட்டியாளர்கள் இதேபோன்று தங்களால் இந்த வீட்டில் தாக்கு பிடிக்க முடியாது என்று சொல்லி வெளியேறி இருக்கிறார்கள்.

பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசன் என்பது எப்படி பொது மக்களுக்கு புதுசா இருந்ததோ, அதேபோன்றுதான் அதில் கலந்து கொண்ட போட்டியாளர்களுக்கும் இருந்தது. வழக்கு எண் 18 / 9 மற்றும் ஓநாயும் ஆட்டுக்குட்டியும் போன்ற படங்களில் கதாநாயகனாக நடித்த நடிகர் ஸ்ரீ இந்த சீசனின் முதல் வாரத்திலேயே என்னால் இந்த வீட்டில் இருக்க முடியாது என்று சொல்லி வெளியேறி விட்டார்.

Also Read:ஜோவிகா எனக்கு பொறந்த பொண்ணு இல்ல.. சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த வனிதா

முதல் சீசனில் ரசிகர்களிடையே அதிக வரவேற்பை பெற்றவர் நடிகர் பரணி. தன்னை வீட்டில் இருக்கும் அனைவரும் கார்னர் செய்து ஒதுக்கிய நிலையில், பிக் பாஸ் வீட்டின் சுவர் ஏறி குதித்து வெளியேற முயற்சி செய்து பின்னர் வெளியே அனுப்பி வைக்கப்பட்டார். அதே போன்று தனக்காக ஒரு ஆர்மியே தொடங்கப்பட்ட நிலையில், நீச்சல் குளத்தில் குதித்து தற்கொலை செய்ய முயற்சி செய்து ஓவியா வெளியேறி விட்டார்.

இரண்டாவது சீசனில் இப்படி எந்த சம்பவமும் நடக்காமல் இருந்த நிலையில், பயங்கர வரவேற்பை பெற்ற மூன்றாவது சீசனில் பிக் பாஸ் விதியை மீறி தன்னைத்தானே காயப்படுத்திக் கொண்ட நடிகை மதுமிதா அந்த வீட்டை விட்டு வெளியேறினார். நான்காவது சீசனிலும் எந்த போட்டியாளர்களும் தாமாக முன்வந்து வெளியேறவில்லை.

Also Read:பிக் பாஸுக்கு முன்பே வனிதா மகளுக்கு வந்த ஆஃபர்.. ஒரு ரவுண்ட் வர போகும் ஜோவிகா

ஐந்தாவது சீசனில் முதல் திருநங்கை போட்டியாளராக கலந்து கொண்டவர் தான் மாடல் நடிகை நமிதா மாரிமுத்து. இவர் மீது ரசிகர்கள் அதிகம் நம்பிக்கை வைத்திருந்த நிலையில் அவரும் தானாக முன்வந்து வெளியேறிவிட்டார். பிக் பாஸ் வீட்டின் விதிகளை மீறியதே இதற்கு காரணம் என்று அப்போது சொல்லப்பட்டது.

டிக்டாக் மூலம் பிரபலமாகி பின்னர் பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்தவர் தான் ஜிபி முத்து.இவருக்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு இருந்தது. கண்டிப்பாக இவர் அந்த வீட்டில் இருந்திருந்தால் டைட்டில் வின்னர் ஆக கூட ஆகி இருப்பார். இருந்தாலும் தன்னுடைய மகனை பார்க்காமல் இந்த வீட்டில் இருக்க முடியாது என்று சொல்லி வெளியேறினார்.

Also Read:மோந்து பார்த்தாலே போதும், சோலி முடிஞ்சு.. கம்பி கட்டுற கதை எல்லாம் சொல்லும் ரட்சிதா

- Advertisement -

Trending News