காதலித்து கழட்டி விடப்பட்ட 6 நடிகைகள்.. அவ்வளவு அழகா இருந்தும் தனி மரமாக வாழும் கௌசல்யா

Love Failure Actress: பொதுவாக காதல் என்றாலே எல்லாத்துக்கும் அப்பாற்பட்ட விஷயமாகத்தான் அனைவரும் உணர்வுபூர்வமாக பார்த்து வருகிறார்கள். அந்த வகையில் சினிமாவில் உள்ள நடிகைகளும் நிஜ வாழ்க்கையில் காதல் வசப்பட்டு உருகி உருகி காதலித்து வந்தார்கள். ஆனால் சில சூழ்நிலை காரணமாக அந்த காதல் கைகூடாமல் போகும் போது காதலித்தவர்களை கழட்டிவிட்டு இப்ப வரை திருமணமாகாமல் தனி மரமாக வாழ்ந்து வருகிறார்கள். அப்படிப்பட்ட நடிகைகளை பற்றி பார்க்கலாம்.

திரிஷா: இவர் கிட்டத்தட்ட சினிமாவிற்கு வந்து 20 வருடங்கள் தாண்டியும் தற்போது வரை ஹீரோயினாக நடித்துக் கொண்டு வருகிறார். முக்கியமாக 40 வயதிலும் இளமை மாறாமல் பருவ மங்கையாக இருக்கிறார். அப்படிப்பட்ட இவர் 2015 ஆம் ஆண்டு வருண் மணியன் என்பவரை உயிருக்கு உயிராக காதலித்து வந்தார். ஆனால் இவர்களுடைய காதல் நிச்சயதார்த்தம் வரை சென்று திருமணம் எட்டும் தருவாயில் ஏற்பட்ட மனக்கசப்பால் த்ரிஷா இந்த கல்யாணமே வேண்டாம் என்று நிறுத்தி விட்டார். அதனால் தற்போது வரை வேறு யாரையும் திருமணம் செய்யாமல் ஹீரோயின் ஆகவே வலம் வந்து கொண்டிருக்கிறார்.

Also read: லியோவுக்கு முன் 462 கிலோமீட்டரில் ரிவெஞ் எடுக்கும் திரிஷா.. வைரலாகும் “தி ரோடு” ட்ரெய்லர்

தபு: பாலிவுட்டில் தனக்கென தனி இடத்தை பிடித்த நடிகை தபு. எந்த மாதிரியான கதாபாத்திரத்தை கொடுத்தாலும் அதை சரியாக நடித்து ரசிகர்களிடம் அதிக வரவேற்பை பெற்றிருக்கிறார். அப்படிப்பட்ட இவர் பாலிவுட் நடிகராக இருந்த சஞ்சய் கபூருடன் நெருங்கி பழகி வந்தார். ஆனால் குடும்பத்தில் ஏற்பட்ட சில சிக்கல்கள் காரணமாக இவர்கள் தொடர்ந்து பேசிக்கொள்ள முடியாமல் பாதிலேயே காதல் முடிவடைந்து விட்டது. அடுத்ததாக நாக அர்ஜுனா உடன் ரகசிய உறவை நீடித்துக் கொண்டு வந்தார். அதன் பின் இவருக்கு திருமணம் ஆனதால் குடும்பம் தான் எனக்கு முக்கியம் என்று தபுவை எட்டிப் பார்க்கவே இல்லை. இந்த விரக்தியால் தற்போது வரை கல்யாணம் ஆகாமல் தனியாக இருந்து வருகிறார்.

கௌசல்யா: 90களில் குடும்ப குத்துவிளக்காக பார்த்ததும் கையெடுத்து கும்பிடும் அளவிற்கு சாந்தமான முகத்துடன் முன்னணி நடிகையாக கலக்கியவர் தான் கௌசல்யா. அப்படிப்பட்ட இவர் ஒருவரை உருகி உருகி காதலித்து வந்திருக்கிறார். ஆனால் அந்த காதல் கைகூடாமல் போனதால் தற்போது வரை கல்யாணம் ஆகாமல் தனியாக வாழ்ந்து வருகிறார். இந்த விஷயத்தை இவரை ஒரு பேட்டியில் ஓபன் ஆக கூறி இருக்கிறார். ஆனால் இவர் யாரை காதலித்தார் என்ற ஒரு விஷயம் இப்பொழுது வரை ரகசியமாக இருக்கிறது.

Also read: 40 வயதிலும் ஹீரோயினாக ஜொலிக்கும் திரிஷாவின் 5 படங்கள்.. உச்சத்தில் இருக்கும் ஹீரோக்களை வளைத்துப் போட்ட குந்தவை

சித்தாரா: இவர் புது புது அர்த்தங்கள் படத்தின் மூலம் ஹீரோயினாக சினிமாவிற்கு நுழைந்தார். 90களில் வெளியான படங்களில் பல முன்னணி ஹீரோவுக்கு ஜோடியாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். தமிழ், தெலுங்கு,மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் நடித்த இவர் தற்போது 50 வயது மேலாகியும் திருமணம் செய்து கொள்ளாமல் தனியாக இருந்து வருகிறார். அதற்கு காரணம் முன்னணி ஹீரோயினாக இருக்கும் பொழுது பிரபல நடிகர் ஒருவரை காதலித்து ஏமாந்து போனதால் விரக்தியில் வேற யாரையும் திருமணம் செய்து கொள்ளாமல் தனியாக இருக்கிறார்.

சோபனா: தெலுங்கு, தமிழ், மலையாளம், இந்தி என பல மொழிகளில் நடித்து இரண்டு நேஷனல் ஃபிலிம் அவார்டு பெற்ற பெருமை நடிகை சோபனாவை சேரும். அத்துடன் இவருடைய நடிப்புக்கு மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுக் கொடுத்தது. அப்படிப்பட்டவர் தற்போது 53 வயது ஆகியும் திருமணம் செய்து கொள்ளாமல் நடனத்தில் ஆர்வம் இருப்பதால் அதில் சிறந்து விளங்கி வருகிறார். மேலும் இவர் திருமணம் செய்யாமல் இருப்பதற்கு காரணம் நடிகையாக இருந்த காலத்தில் பிரபல நடிகர் ஒருவரை காதலித்து இருக்கிறார். ஆனால் அந்த காதலில் சேர முடியாததால் சோகமான இவர், இவருக்கு பிடித்த பரதநாட்டியத்தில் முழு கவனத்தை செலுத்தி வருகிறார்.

நக்மா: தென்னிந்திய சினிமாவில் கிளாமர் குயினாக 90களில் கொடி கட்டி பறந்த நடிகைகளில் ஒருவர் தான் நக்மா. தமிழில் முன்னணி நடிகர்களுடன் நடித்த இவர் ஒரு சிலருடன் காதல், டேட்டிங் என இருந்த நிலையில் அப்போது அதிகமாக கிசுகிசுவில் சிக்கப்பட்டார். அந்த வகையில் 2001 ஆம் ஆண்டு கிரிக்கெட் வீரர் கங்குலியுடன் தொடர்பில் இருந்ததாக அப்பட்டமாக கிசுகிசுக்கப்பட்டார். அடுத்ததாக சரத்குமாருடன் ரகசிய தொடர்பில் இருந்து வந்தார். அதன்பின் சர்ச்சை பூகம்பகமாக வெடித்ததால் நக்மா விலகி விட்டார். இதனை தொடர்ந்து நடிகர் ரவி கிஷான் மற்றும் மனோஜ் திவாரி ஆகியவரை காதலித்து வந்தார். இப்படி தொடர்ந்து காதல் தோல்விகளை சந்தித்ததால் தற்போது 48 வயது ஆகியும் திருமணமாகாமல் இருக்கிறார்.

Also read: இளசுகளை கிறங்கடித்த நக்மாவின் 5 படங்கள்.. 25 படங்களுக்குப் பின்னர் அடித்த ஜாக்பாட்

- Advertisement -