புதன்கிழமை, டிசம்பர் 11, 2024

இளசுகளை கிறங்கடித்த நக்மாவின் 5 படங்கள்.. 25 படங்களுக்குப் பின்னர் அடித்த ஜாக்பாட்

தமிழ் சினிமாவில் மிக குறுகிய காலத்தில் நடித்த சில நடிகைகள் தங்களது முகம் மற்றும் நடிப்பு திறமையை ஆணித்தனமாய் ரசிகர்களின் மனதில் விட்டுச் செல்வர். அதில் முக்கியமான நடிகை தான் நக்மா, நடிகை ஜோதிகாவின் சகோதரியான இவர் ஹிந்தியில் 25 படங்களில் நடித்த பின்பு தான் தமிழில் இயக்குனர் ஷங்கரால் காதலன் படம் மூலமாக அறிமுகம் செய்யப்பட்டார். அப்படி அவர் அழகில் இளைஞர்களை கிறங்கடித்த 5 சூப்பர்ஹிட் படங்களை பற்றி தற்போது பார்க்கலாம்.

காதலன் : 1994 ஆம் ஆண்டு இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில், பிரபுதேவா,நக்மா, வடிவேலு உள்ளிட்டோர் நடித்த படம் தான் காதலன். அந்தாண்டின் மெகா ஹிட் பட வரிசையில் இப்படம் இடம்பெற்றது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் வெளியான இப்படம் ஷங்கரின் பிரம்மாண்டமான காட்சிகள் நிறைந்த மிகப்பெரும் பொருட்செலவில் உருவாக்கப்பட்டது. தனது முதல் படத்திலேயே நேர்த்தியான நடிப்பாலும், அழகாலும் கிறங்கடித்த நக்மாவுக்கு இப்படத்தை தொடர்ந்து பல பட வாய்ப்புகள் குவிந்தது.

Also Read:  பாட்டுக்கு மட்டும் இவ்வளவு கோடிகளா.? ஷங்கர் மீது உச்சக்கட்ட கடுப்பாகிய தயாரிப்பாளர்

பிஸ்தா: இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் கார்த்திக், நக்மா, மணிவண்ணன் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான இப்படம் சூப்பர்ஹிட்டானது. காதல், நகைச்சுவை கார்த்திக்கின் நவரச நடிப்பு என இப்படம் முழுவதும் கலகலப்புக்கு பஞ்சமே இருக்காது. நக்மா இப்படத்தில் முக்கால்வாசி காட்சியில் பட்டுப் புடவை அணிந்துக்கொண்டு வளம் வருவது ரசிகர்களை வாயை பிளக்க பார்க்க வைக்கும்.

வில்லாதி வில்லன்: நடிகர் சத்யராஜ் இயக்குனராக அறிமுகமாகி நடித்த நூறாவது படம் தான் வில்லாதி வில்லன். மாபெரும் ஹிட்டான இப்படத்தில் சத்யராஜ் மூன்று வேடங்களில் நடித்திருப்பார். நக்மாவின் தந்தை கதாபாத்திரத்திலும், அவரது காதலர் கதாபாத்திரத்திலும், வில்லன் கதாபாத்திரத்திலும் நடித்திருப்பார். த்ரில்லர் நிறைந்த இப்படத்தில் நக்மாவின் ஜானகி கதாபாத்திரம் பெருமளவில் பேசப்பட்டது.

Also Read: மதத்தை வைத்து கூடு விட்டு கூடு பாயும் 5 பிரபலங்கள்.. இந்துவா கிறிஸ்டின் மதமா?

ஜானகி ராமன்: இயக்குனர் சுந்தர்.சி இயக்கத்தில் சரத்குமார், நக்மா, ரம்பா உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான இப்படம் 100 நாட்களை கடந்து திரையரங்கில் ஓடியது. காதல், கலாட்டா, காமெடி என வெளியான இப்படத்திற்கு இசையமைப்பாளர் சிற்பி இசையமைத்தார். ரம்பாவை விட நக்மாவின் அழகும், நடிப்பும் இப்படத்தில் பெருமளவில் பேசப்பட்டது.

லவ் பேர்ட்ஸ் : 1996 ஆம் ஆண்டு இரண்டாவது முறையாக பிரபுதேவா, நக்மா ஜோடி இப்படத்தில் இணைந்தது. ஏ.ஆர் ரஹ்மான் இசையில் வெளியான இப்படத்தின் பாடல்கள் ஹிட்டானதையடுத்து, இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இரட்டை வேடத்தில் பிரபுதேவா இப்படத்தில் நடித்த நிலையில், காதலனை இழந்து வாடும் நக்மாவின் மிருதுலா கதாபாத்திரம் பெரிதும் பேசப்பட்டது.

Also Read: வாழ்நாளில் மறக்க முடியாத ஹிட் கொடுத்த 5 டாப் ஹீரோக்கள்.. பாட்ஷா மாதிரி இன்னொரு படம் வாய்ப்பே இல்ல

- Advertisement -

Trending News