கதாபாத்திரத்திற்காக மொட்டை அடித்த 6 நடிகர்கள்.. ஹீரோ இமேஜை டேமேஜ் செய்த சூர்யா

Bald Actors Movies: பொதுவாகவே ஹீரோக்கள் அழகாக நடித்தால் மட்டுமே இமேஜை பாதுகாக்க முடியும். அத்துடன் ரசிகர்களிடமிருந்து நல்ல வரவேற்பு கிடைக்கும் என்பதுதான் பல நடிகர்களின் முக்கிய எண்ணங்களாக இருக்கும். ஆனால் அதெல்லாம் உண்மை கிடையாது என்று சில நடிகர்கள் நிரூபித்துக் காட்டியிருக்கிறார்கள்.

கதாபாத்திரத்திற்கு தகுந்தாற்போல் வித்தியாசமான கெட்டப்புகளை போட்டு நடித்தது மட்டுமல்லாமல், தலையில் முடியே இல்லாமல் மொட்டை அடித்துக் கொண்டு சில நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். அப்படி நடித்து அந்த படங்களை வெற்றி அடையவும் செய்து இருக்கிறார்கள். அந்த நடிகர்களை பற்றி நாம் பார்க்கலாம்.

Also read: யாரும் தேவையில்லை என்று டைரக்ட் செய்து ஹீரோவாக நடித்த 7 இயக்குனர்.. பிள்ளையார் சுழி போட்டு ஆரம்பித்த உலக நாயகன்

தமிழ் சினிமாவை பொருத்தவரை கெட்டப்புகளுக்கு பேர் போனவர் தான் உலக நாயகன். எந்த மாதிரியான கெட்டப்புகள் போட்டாலும் அதற்கு தகுந்தாற்போல் கச்சிதமாக நடித்துக் காட்டக் கூடியவர். அப்படிப்பட்டவர் ஆளவந்தான் படத்தில் மொட்டை அடித்துக் கொண்டு இவருடைய நடிப்பை ஆக்ரோஷமாக நடித்து காட்டி இருப்பார்.

அடுத்ததாக ஸ்டைல் என்றாலே இவர்தான் என்று சொல்லும் அளவிற்கு சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தை வாங்கி இருக்கிறார் ரஜினி. இவர் சிவாஜி தி பாஸ் என்ற படத்தில் சிவாஜியாக வரும் பொழுது தலையில் மொட்டை அடித்துக் கொண்டு வருவார். ஆனால் அதிலும் ஸ்டைலாக தான் இருப்பார்.

Also read: வைரமுத்துவை ஒப்பிட்டு பேசிய சூப்பர் ஸ்டார்.. மேடையில் கடித்து குதறிய சம்பவம்

இதனை அடுத்து ரசிகர்களிடம் பேரழகனாக பெயர் பெற்று ஹீரோ இமேஜ் உடன் வளர்ந்து வந்த நேரத்தில் எந்தவித தயக்கமும் இல்லாமல் மொட்டை அடித்துக் கொண்டு கஜினி படத்தில் சூர்யா நடித்திருப்பார். ஆனால் அப்படி நடித்ததனால்தான் தற்போது முன்னணி நடிகர்களில் ஒருவராக இடம் பிடிக்க முடிந்தது.

அடுத்து எத்தனையோ படங்களில் நடித்தும் கிடைக்காத பேரும் புகழும் விக்ரமுக்கு சேது படத்திற்கு பிறகு தான் கிடைத்தது. இப்படத்தில் கிளைமேக்ஸ் காட்சியில் மொட்டை அடித்துக் கொண்டு பார்க்க பைத்தியக்காரராக நடித்திருப்பார். அடுத்ததாக சாக்லேட் பாய் போல் வலம் வந்த கார்த்தி, காஷ்மோரா படத்தில் தலையில் முடியே இல்லாமல் மொட்டையுடன் நடித்திருப்பார். தற்போது இவர்களைத் தொடர்ந்து பாலிவுட்டில் சூப்பர் ஸ்டாராக கலக்கி வரும் ஷாருக்கான், ஜவான் படத்தில் மொட்டை அடித்துக்கொண்டு நடித்துள்ளார்.

Also read: அஜித் முதல் பல முன்னணி ஹீரோக்கள் நடிக்க மறுத்த அந்த கதை.. சூர்யா நடிப்பில் சூப்பர் ஹிட்டான சம்பவம்

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்