அஜித் முதல் பல முன்னணி ஹீரோக்கள் நடிக்க மறுத்த அந்த கதை.. சூர்யா நடிப்பில் சூப்பர் ஹிட்டான சம்பவம்

Ajithkumar – Surya: ஒரு சில நடிகர்களுக்கு இயக்குனர்கள் ஒரு படத்தின் கதையை சொல்லும் பொழுது அது சரியாக புரியாமல் போகலாம் அல்லது அந்த கதையின் மீது அவர்களுக்கு நம்பிக்கை இல்லாமலும் போகலாம். கதைகளை தேர்ந்தெடுத்த நடிப்பது என்பது அந்தந்த நடிகர்களின் புரிதலை பொறுத்து தான் இருக்கிறது. ஒரு கதை நன்றாக இல்லை என்று ரிஜெக்ட் செய்யும் ஹீரோக்கள் அதே கதை வேறு ஹீரோ நடித்த ஹிட் அடிக்கும்போது வருத்தப்பட்ட சம்பவங்களும் உண்டு.

அப்படி அஜித் முதல் பல முன்னணி ஹீரோக்கள் வேண்டாம் என ஒதுக்கிய கதை ஒன்றில் சூர்யா நடித்து அது மிகப்பெரிய ஹிட் அடித்தது. மேலும் சூர்யாவின் சினிமா வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையாகவும் அமைந்தது. இன்று வரை தமிழ் சினிமா ரசிகர்களின் மனதிற்கு நெருக்கமான படங்களில் இந்த படமும் ஒன்று. அந்த அளவுக்கு இந்த படம் மக்களை சென்றடைந்தது என்று சொல்லலாம்.

Also Read:விடாமுயற்சியால் பிடித்த ஏழரை சனி.. நம்பிய இயக்குனரும் அஜித்தை கைவிட்ட பரிதாபம்

நடிகர் அஜித் குமாரை வைத்து தீனா மற்றும் கேப்டன் விஜயகாந்தை வைத்து ரமணா போன்ற திரைப்படங்களை இயக்கிய ஏ ஆர் முருகதாஸ் அடுத்து ஒரு கதையுடன் அஜித்திடம் சென்றிருக்கிறார். முதலில் ஓகே சொன்ன அஜித் ஒரு சில நாட்கள் அந்த படத்திலும் நடித்திருக்கிறார். அந்த படத்திற்கு மிரட்டல் என்று பெயரும் வைத்து அதிகாரப்பூர்வ அறிவிப்புகளும் வெளியாகின. ஆனால் கதை பிடிக்காத காரணத்தால் அஜித் அந்த படத்திலிருந்து விலகி விட்டார்.

அதன்பின்னர் முருகதாஸ் இந்த கதையை பல ஹீரோக்களிடமும் சொல்லி இருக்கிறார். நடிகர்கள் விக்ரம், சிம்பு போன்றவர்களும் இந்த கதையை ரிஜெக்ட் செய்து விட்டார்களாம். இறுதியாக நடிகர் மாதவனிடம் இந்த கதையை சொல்லும்பொழுது, அவர் அதை காது கொடுத்து கூட கேட்க ரெடியாக இல்லை என்பது போல் இருந்திருக்கிறார். இதை முருகதாசுடன் இருந்த இயக்குனர் மற்றும் நடிகர் மனோபாலா புரிந்துகொண்டு, அடுத்து அவரை சூர்யாவிடம் அழைத்துச் சென்றிருக்கிறார்.

Also Read:அஜித் பட வாய்ப்பை பரிகொடுத்த இயக்குனர்.. விஷால் தந்தையால் ஏற்பட்ட சங்கடம்

சூர்யா முழு கதையையும் கேட்டு படத்திற்கும் உடனே ஓகே சொல்லி விட்டாராம். அப்படி உருவான படம் தான் கஜினி. கடந்த 2005 ஆம் ஆண்டு இந்த படம் ரிலீஸ் ஆனது. ஏழு கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட இந்த படம் 50 கோடி வசூல் செய்தது. மேலும் தமிழ் சினிமா ரசிகர்களாலும் இந்த படம் ரிலீஸ் ஆன நேரத்தில் தூக்கி வைத்து கொண்டாடப்பட்டது. நடிகர் சூர்யாவும் இந்த படத்திற்காக பயங்கரமாக உடம்பை ஏற்றி நடித்திருந்தார்.

இந்த படத்தின் வெற்றி என்பது பாலிவுட் வரை தாக்கத்தை ஏற்படுத்தியது. கடந்த 2008 ஆம் ஆண்டு பாலிவுட்டின் முன்னணி ஹீரோவான அமீர்கான், கஜினி இந்தி ரீமேக்கில் நடித்திருந்தார். அந்த படத்தையும் இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் தான் இயக்கினார். பாலிவுட்டிலும் இந்த படம் விமர்சன ரீதியாகவும், வணிக ரீதியாகவும் வெற்றி பெற்றது.

Also Read:என் இடத்தில எந்த பொண்ணு இருந்திருந்தாலும் செத்துருப்பா.. கொடூர சம்பவத்திலிருந்து மீண்டு வந்த அஜித் பட நடிகை

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்