வைரமுத்துவை ஒப்பிட்டு பேசிய சூப்பர் ஸ்டார்.. மேடையில் கடித்து குதறிய சம்பவம்

Super Star Rajinikanth: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் எப்போதுமே மனதில் பட்டதை வெளிப்படையாக பேசக்கூடியவர். இதனால் பல நேரங்களில் அவர் நெகட்டிவ் விமர்சனங்களையும் சந்தித்தது உண்டு. அது போன்று அவர் பேசிய ஒரு மேடைப் பேச்சால் நடந்த சம்பவம் ஒன்று தற்போது வெளியாகி இருக்கிறது. அவர் என்னவோ நினைத்து பேச, அது மிகப்பெரிய பிரபலம் ஒருவர் கடிந்து கொள்ளும் அளவிற்கு மாறி இருக்கிறது.

ரஜினிக்கு எப்போதுமே ஒரு பழக்கம் உண்டு. எந்த நேரத்திலும் தன்னை தாழ்த்திக் கொண்டு மற்றவர்களை உயர்த்தி பேசுவார். பல நேரங்களில் நகைச்சுவையாக தன்னைத்தானே மட்டம் தட்டியும் கொள்வார். இப்படி அவர் பொன்னியின் செல்வன் மேடையில் தளபதி படத்தின் அனுபவத்தை பற்றி பேசியது கூட சமூக வலைத்தளங்களில் பயங்கர வைரல் ஆகியது.

Also Read:சூப்பர் ஸ்டார் கூப்பிட்டும் வராத பிரபலம்.. கமலின் அனுமதிக்காக காத்திருந்த ரஜினி

ரஜினிக்கு மிகப்பெரிய ஹிட் படமாக அமைந்தது தான் இயக்குனர் சங்கர் இயக்கத்தில் வெளியான எந்திரன். இந்த படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவின் போது பாடல் ஆசிரியர் வைரமுத்துவை பெருமைப்படுத்தி பேசும் விதமாக ரஜினி, மக்கள் திலகம் எம்ஜிஆருக்கு எப்படி கவிஞர் வாலி அமைந்தாரோ, அதேபோன்றுதான் எனக்கு வைரமுத்து என்று சொன்னாராம். இதே போன்று ஒரு மேடையில் இயக்குனர் பாலச்சந்தரை பற்றி பேசும் பொழுது, வாலி சொன்ன வசனத்தை தனக்கேற்றபடி மாற்றி சொல்லி இருப்பார்.

பாலச்சந்தரை பற்றி அப்படி பேசும்பொழுது வாலி அதை ரொம்பவும் சந்தோஷமாக எடுத்துக் கொண்டார். ஆனால் வைரமுத்துவை பற்றி ரஜினி சொன்ன விஷயத்தில் கவிஞர் வாலிக்கு அவ்வளவாக ஈடுபாடு இல்லை. தன்னுடைய கோபத்தை எப்படியாவது ரஜினிக்கு தெரிவிக்க வேண்டும் என்று சந்தர்ப்பம் பார்த்து காத்துக் கொண்டிருந்திருக்கிறார் கவிஞர்.

Also Read:80களில் நெகட்டிவ் ரோலில் ரஜினி பின்னிய 5 படங்கள்.. கமலை மட்டுமே தூக்கி வைத்த பாலச்சந்தர்

அந்த சமயத்தில் தான் ரஜினி தன்னுடைய இரண்டாவது மகள் சௌந்தர்யா ரஜினிகாந்தின் திருமண பத்திரிக்கையை எடுத்துக்கொண்டு வாலியின் வீட்டிற்கு சென்று இருக்கிறார். அப்போது கவிஞர் ரஜினியிடம், மக்கள் திலகத்திற்கு வாலியைப் போல், எனக்கு வைரமுத்து என்று நீ மேடையில் சொல்லியிருந்தாய். நீ வேண்டுமானால் எம்ஜிஆர் ஆக மாறு ஆனால் வைரமுத்துவை வாலியுடன் ஒப்பிடாதே என்று சொன்னாராம்.

மேலும் வாலி, நான் எம்ஜிஆருக்காக என்றே ‘மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்’ போன்ற பாடல்களை எழுதி இருக்கிறேன். ஆனால் வைரமுத்து உனக்கு மட்டுமே பொருந்துமாறு இதுவரை ஏதாவது பாடல் எழுதி இருக்கிறாரா என்ற கேள்வியையும் கேட்டிருக்கிறார். ரஜினி வைரமுத்துவை பாராட்டி பேச நினைத்து, இறுதியில் அது வாலியின் கோபத்திற்கு காரணமாக அமைந்தது என்ற விஷயம் தற்போது வெளியில் வந்திருக்கிறது.

Also Read:ரஜினியை மிரள வைத்த காமெடி நடிகர்.. இவரைப் போய் மிஸ் பண்ணிட்டோமே என வருத்தப்படும் சூப்பர் ஸ்டார்

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்