தன்னோட வயசுக்கு ஏத்த மாதிரி வாய்ப்பை தேடி நடிக்கும் 6 நடிகர்கள்.. ஒரே வெற்றியால் 8 படத்திற்கு புக் ஆன சரத்குமார்

6 Actors: தன் திறமைக்கு ஏற்ற வாய்ப்பு தமிழ் சினிமாவில் கிடைக்காதா என வாய்ப்புக்காக சுற்றித்திரிந்து அதன் பின் தன்னை அடையாளப்படுத்திக் கொண்ட பிரபலங்களும் உண்டு. இந்நிலையில் தன்னோட வயதிற்கு ஏற்றவாறு வாய்ப்பை தேடி நடிக்கும் 6 நடிகர்கள் பற்றிய தகவலை இங்கு காண்போம்.

80-90 காலகட்டத்தில் முன்னணி கதாநாயகனாய் சத்யராஜ் மேற்கொண்டு எண்ணற்ற படங்கள் வெற்றியை பெற்றிருக்கிறது. இவரின் கொங்கு தமிழ் குசும்பு பேச்சும், நகைச்சுவையும் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று தந்தது. அதைத்தொடர்ந்து தற்போது தன் வயதுக்கு ஏற்றவாறு குணச்சித்திர கதாபாத்திரங்களில் சிறப்புற நடித்து வருகிறார்.

Also Read: கமல், சூர்யா கொடுத்த தைரியம்.. பார்ட் 2 படத்திற்கு பழைய காதலியை ஜோடியாக்கும் சிம்பு

இவரைத் தொடர்ந்து சுப்ரீம் ஸ்டார் என அழைக்கப்படும் சரத்குமார் நடிப்பில் எண்ணற்ற படங்கள் வெற்றியைக் கண்டிருக்கிறது. அவ்வாறு ஹீரோவாய் கலக்கி வந்த இவர் தற்பொழுது தன் வயதிற்கு ஏற்றவாறு வில்லன் கதாபாத்திரங்களையும், குணச்சித்திர கதாபாத்திரங்களையும் ஏற்று நடித்து வெற்றி கண்டு வருகிறார். சமீபத்தில் PS 1 மற்றும் PS 2 வில் தன் சிறப்பான நடிப்பினை வெளிக்கட்டியிருப்பார்.

மேலும் இப்படத்தின் வெற்றியை கொண்டு தன் அடுத்த கட்ட படங்களை புக் செய்து விட்டார் என்றே சொல்லலாம். மேலும் தன் அதிரடியான நடிப்பினை வெளிக்காட்டி ஆக்சன் நிறைந்த படங்களை மேற்கொண்டு வந்தவர் ராஜ்கிரண். தற்பொழுது தன் வயதை கருதி படத்தில் குணச்சித்திர கதாபாத்திரங்களை ஏற்று நடித்து வருகிறார்.

Also Read: அலைபாயுதே படத்தை அட்ட காப்பி அடித்திருக்கும் குஷி பட டிரைலர்.. விஜய் தேவர கொண்டா, சமந்தா அல்டிமேட் ரொமான்ஸ்

வில்லன் கதாபாத்திரத்திற்கு பேர் போனவர் பிரகாஷ்ராஜ். படத்திற்கு ஏற்றவாறு தன் தத்ரூபமான நடிப்பினை வெளிக்காட்டும் இவர் தற்போது குணச்சித்திர கதாபாத்திரங்களில் சிறப்புற நடித்து வருகிறார். 80- 90 காலகட்டத்தில் வில்லனாக குடைச்சல் கொடுத்தவர்தான் நாசர். தற்பொழுது தனக்கு ஏற்ற கதாபாத்திரங்களை மட்டுமே தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

இவரைத் தொடர்ந்து, சிறந்த இயக்குனராய் நாடோடிகள், போராளி போன்ற படங்களை இயக்கி வெற்றுக் கண்டவர் தான் இயக்குனர் சமுத்திரக்கனி. தற்பொழுது இயக்கத்தை விட்டுவிட்டு நடிப்பில் இறங்கிய இவர் குணச்சித்திர கதாபாத்திரம் ஏற்று நடித்து வருகிறார். தற்பொழுது தமிழ் மட்டும் அல்லாது அக்கட தேசத்திலும் தன் அடுத்த கட்ட பட வாய்ப்புகளை மேற்கொண்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: நடிக்க தெரியலன்னு சிம்பு படத்தில் இருந்து விரட்டி அடிக்கப்பட்ட நயன்தாரா.. ரெண்டு ஹிட் கொடுத்து மூக்கு உடைத்த சம்பவம்

Sharing Is Caring:

சமீபத்திய சினிமா செய்திகள்