பிக் பாஸ் 6-ன் நியாயம் இல்லாத 5 எலிமினேஷன்.. இப்போது வரை கொந்தளிக்கும் தனலட்சுமி ஆர்மி

Kamal_Dhanalakshmi-Cinemapettai
Kamal_Dhanalakshmi-Cinemapettai

21 போட்டியாளர்களுடன் துவங்கப்பட்ட பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி தற்போது 8 போட்டியாளர்களுடன் இன்னும் ஒரு சில வாரங்களில் நிறைவடைய போகிறது. இருப்பினும் இந்த சீசனில் அநியாயமாக எலிமினேட் செய்யப்பட்ட 5 போட்டியாளர்களை குறித்து சோசியல் மீடியாவில் ரசிகர்கள் தங்களுடைய ஆதங்கத்தை வெளிப்படுத்துகின்றனர்.

VJ மகேஸ்வரி: சமீபத்தில் உலகநாயகன் கமலஹாசன் நடிப்பில் வெளியான விக்ரம் படத்தில் விஜய் சேதுபதியின் மூன்று மனைவிகளில் ஒருவராக நடித்து புகழ்பெற்ற VJ மகேஸ்வரி, பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் வலிமையான போட்டியாளராக இருப்பார் என ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்தனர்.

இதனால் இந்த சீசன் சூடு பிடிக்கும் என்றும் நினைத்துக் கொண்டிருந்த நிலையில் எதிர்பாராத விதமாய் கிட்டத்தட்ட 35 நாட்கள் மட்டுமே பிக் பாஸ் வீட்டில் அவரால் பயணிக்க முடிந்தது. இதற்காக அவர் மொத்தம் 8 லட்சம் சம்பளமாக பெற்றுள்ளார். இவருடைய எலிமினேஷனால் பலரும் ஷாக் ஆனார்கள்.

Also Read: சீரியல் நடிகை ஆயிஷா உடை மாற்றும் போது உள்ளே புகுந்த இயக்குனர்.. மாப்பிள்ளைக்கு அவ்வளவு வெறி!

ஆயிஷா: ரவுடி பேபி ஆக சத்யா சீரியல் மூலம் ரசிகர்களின் மனதை கவர்ந்த ஆயிஷா, பிக் பாஸ் வீட்டில் என்ட்ரி கொடுத்ததும் பலரும் குஷியாளர்கள். முதலில் மற்ற போட்டியாளர்களின் விட தனித்துவமான விளையாட்டை வெளிப்படுத்திக் கொண்டிருந்த ஆயிஷா, இந்த சீசனின் டாப் 5 கண்டஸ்டண்ட்ஸ் என பிக் பாஸ் ரசிகர்கள் அடித்து சொன்னார்கள்.

ஆனால் அவருடைய உடல்நிலை குறைவு காரணத்தால் அவரால் தன்னுடைய முழு ஈடுபாட்டை கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டது. இருப்பினும் அவரை பிக் பாஸ் வீட்டில் நீண்ட நாட்கள் இருக்க வேண்டும் என அவருடைய ரசிகர்கள் நினைத்தார்கள். இருப்பினும் 63-வது நாளில் அவர் எலிமினேட் செய்தது பலருக்கும் அதிர்ச்சி அளித்தது.

ஜனனி: இலங்கை செய்தி வாசிப்பாளராக தமிழ் ரசிகர்களுக்கு பரிச்சயமாகாத ஜனனி, தன்னுடைய க்யூட்டான பேச்சு மற்றும் செய்கைகளால் வெகு சீக்கிரமே பிக் பாஸ் ரசிகர்களை கவர்ந்தார். மேலும் ஜெனிலியா நஸ்ரியா போன்ற நடிகைகளிடம் பார்த்த அதை கியூட்னஸ் ஜனனியிடம் இருந்ததால் இந்த சீசனில் இவருக்கென்று தனி ஆர்மி உருவானது. இருப்பினும் இவர் பிக் பாஸ் வீட்டில் இருந்து 70-வது நாளில் வெளியேறியது நியாயம் இல்லாத எலிமினேஷன் என பலரும் கண்டனம் தெரிவித்தனர்.

Also Read: விவாகரத்தான 5 போட்டியாளர்களை பொறுக்கி எடுத்த விஜய் டிவி.. டிஆர்பிக்காக இப்படியல்லாமா பண்ணுவீங்க!

தனலட்சுமி: டிக் டாக் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான தனலட்சுமி மக்களிடம் இருந்து தேர்வு செய்யப்பட்ட போட்டியாளராக இந்த சீசனில் என்ட்ரி கொடுத்தார். என்னதான் பஜார் போல் பிக் பாஸ் வீட்டில் சண்டை போட்டாலும், இந்த சீசனின் கண்டன் கொடுக்கும் ஒரே கண்டஸ்டண்ட் ஆக கெத்தாக வலம் வந்தார். அதன்பின் திடீரென்று 77-வது நாளில் பிக் பாஸ் வீட்டில் இருந்து எலிமினேட் செய்யப்பட்டது அவருடைய ரசிகர்களை இன்று வரை ஏற்றுக் கொள்ள முடியாமல் இருக்கிறது. இதனால் சோசியல் மீடியாவில் தங்களுடைய கோபங்களை காட்டமாக வெளிப்படுத்திக் கொண்டிருக்கின்றனர்.

ரட்சிதா மகாலட்சுமி: சீரியலின் மூலம் மீனாட்சியாக ரசிகர்களின் மனதை கவர்ந்த ரட்சிதாவிற்கு என்றே தனி ரசிகர் கூட்டம் உள்ளது. மேலும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ரட்சிதாவை பற்றி தெரிந்து கொள்ள நினைத்த ரசிகர்களுக்கு டிக்கெட் பினாலே நிகழ்ச்சியின் மூலம் அவருடைய உண்மையான சுயரூபம் வெளிப்பட்டது. தற்போது தான் அவர் விளையாட்டில் அதிக ஆர்வம் கொண்டு பைனலிஸ்ட் ஆக வேண்டும் என முனைப்புடன் செயல்பட்ட நிலையில், திடீரென்று 91-வது நாளில் வெளியேற்றப்பட்டது நியாயம் இல்லாத எலிமினேஷன் என ரசிகர்கள் கூறுகின்றனர்.

Also Read: இரண்டாவது திருமணம் பற்றி மனம் திறந்த மகேஸ்வரி.. கண்ணீருடன் சொன்ன பதில்

இவ்வாறு இந்த 5 போட்டியாளர்கள் தான் பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சிகள் நியாயம் இல்லாமல் வெளியேற்றப்பட்ட போட்டியாளர்களாக ரசிகர்கள் கருதுகின்றனர். அதிலும் தனலட்சுமி பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்திருந்தால் இன்னும் சுவாரசியமாக இருந்திருக்கும் என சோசியல் மீடியாவில் அவருடைய ஆர்மி கோபத்தில் கொந்தளிக்கிறது.

Advertisement Amazon Prime Banner