விவாகரத்தை ட்ரெண்ட் ஆக்கிய 4 விஜய் டிவி பிரபலங்கள்.. ஒரே வருடத்தில் முடிவுக்கு வந்த திருமண உறவு!

Divorced TV Anchors: இப்போதெல்லாம் வெள்ளித்திரையை விட, சின்னத்திரையில் தான் கிசுகிசுகளுக்கும், பரபரப்புகளுக்கும் பஞ்சமில்லாமல் இருக்கிறது. சீரியலில் ஒன்றாக நடித்து திருமணம் செய்து கொண்ட காதல் ஜோடிகள் அடுத்தடுத்து விவாகரத்து செய்வது, ஆதாரங்களுடன் பேட்டி கொடுப்பது என தினமும் ஒரு கண்டன்டு கொடுத்து விடுகிறார்கள். ஆனால் இவர்களுக்கு முன்னரே 4 டிவி தொகுப்பாளர்கள் திருமணம் ஆகி ஒரே வருடத்தில் திருமண உறவை முறித்துக் கொண்டு பிரிந்திருக்கிறார்கள்.

திவ்ய தர்ஷினி (டிடி) : இப்போது இருக்கும் பல இளம் தொகுப்பாளர்களுக்கு திவ்யதர்ஷினியை போல் ஆக வேண்டும் என்பதுதான் மிகப்பெரிய கனவாக இருக்கிறது. தன்னுடைய திறமையான பேச்சுக்களால் பிரபலங்களை கவர்ந்த இவர் கேரளாவை சேர்ந்த ஸ்ரீகாந்த் என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணமாகி ஒரு வருடத்திலேயே இருவருக்குள்ளும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து பெற்று விட்டனர் அவருடைய முன்னாள் கணவர் தற்போது வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டதாக கூட தகவல்கள் வெளியாகின.

Also Read:ஹிட்டு படங்களாக கொடுத்த நடிகை.. பிட்டு படம் நடிக்க காரணமாக இருந்த சம்பவம்

ரம்யா: விஜய் டிவியில் பிரபலமாக இருந்த மற்றொரு தொகுப்பாளினி தான் ரம்யா சுப்ரமண்யம். இவர் திருமணம் ஆகி பத்து நாட்களுக்குள்ளே கணவரை விட்டு பிரிந்து விட்டார். அதன் பின்னர் ஒரு வருடம் கழித்து விவாகரத்தும் செய்து விட்டார். தற்போது தொகுப்பாளராக பணியாற்றி வரும் இவர் பிட்னஸிலும் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.

Also Read:2வது திருமணத்திற்கு தயாரான நடிகை.. கவர்ச்சியில் கிறங்கிப் போன தொழிலதிபர்

மகேஸ்வரி: சன் மியூசிக் தொலைக்காட்சியின் மூலம் தொகுப்பாளராக அறிமுகமாகியவர் தான் மகேஸ்வரி. அதன் பின்னர் சீரியல்களிலும், சினிமாவிலும் நடித்து வந்த இவர், திருமணமாகி ஒரு மகன் இருக்கும் நிலையில் விவாகரத்து செய்து கொண்டார். பல நிகழ்ச்சிகளில் ஒரு குழந்தையை தனியாக வளர்ப்பது எவ்வளவு கடினம் என்பதை பற்றி இவர் பேசி இருக்கிறார்.

ரேஷ்மா பசுபலேட்டி: ஒரு செய்தி வாசிப்பாளராக தன்னுடைய பணியை தொடங்கியவர் தான் ரேஷ்மா. இவர் பிரபல நடிகர் பாபி சிம்ஹாவின் உடன் பிறந்த சகோதரி ஆவார். திருமணத்திற்குப் பின் வெளிநாட்டில் செட்டில் ஆகிய இவர் கணவருக்கும், தனக்கும் ஒத்து வராததால் விவாகரத்து செய்துவிட்டு இந்தியா திரும்பினார். பின்னர் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமாகியவர் தற்போது பாக்கியலட்சுமி சீரியலில் நெகடிவ் கேரக்டரில் நடித்து வருகிறார்.

Also Read:திருமண தேவைக்காக வாய்ப்பு கேட்ட நடிகை.. அட்ஜஸ்ட்மென்ட்டுக்கு 15 நாள் கால்ஷூட் கேட்ட 70 வயசு கிழவன்

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்