திருமண தேவைக்காக வாய்ப்பு கேட்ட நடிகை.. அட்ஜஸ்ட்மென்ட்டுக்கு 15 நாள் கால்ஷூட் கேட்ட 70 வயசு கிழவன்

அட்ஜஸ்ட்மென்ட் என்ற வார்த்தை இப்போது எங்கு திரும்பினாலும் கேட்கத் தொடங்கி விட்டது. முன்பெல்லாம் இலை மறை காயாக இருந்த இந்த விஷயம் தற்போது நேரடியாகவே கேட்கும் வரை வந்துவிட்டது. இப்படித்தான் ஒரு சம்பவம் திருமண தேவைக்காக நடிக்க வாய்ப்பு கேட்ட ஒருவருக்கு நடந்திருக்கிறது.

சினிமாவில் அக்கா, அண்ணி போன்ற வேடங்களில் நடித்து வந்த நடிகை ஒருவருக்கு சில மாதங்களுக்கு முன் நிச்சயதார்த்தம் முடிந்திருக்கிறது. திருமணத்திற்கு சில நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில் நடிகைக்கு நகைகள் வாங்குவதற்கு சில பணத்தேவை ஏற்பட்டிருக்கிறது. அதனால் அவர் ஏதாவது வாய்ப்பு கிடைத்தால் உதவியாக இருக்கும் என்று தனக்கு தெரிந்தவரிடம் நடிக்க சான்ஸ் கேட்டிருக்கிறார்.

Also Read: காதலருடன் லிப்லாக்கில் மூழ்கிக் கிடந்த நடிகை.. நைட் பார்ட்டியில் அரங்கேறிய கூத்து

அப்போது 70 வயதான பிரபலம் ஒருவர் அவருக்கு நடிக்க வாய்ப்பு கொடுப்பதாக கூறியிருக்கிறார். ஆனால் அதற்காக அவர் போட்ட கண்டிஷன் தான் நடிகைக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அதாவது அடுத்த 15 நாட்கள் எனக்கு ஒத்துழைப்பு கொடுத்தால் உனக்கு தேவையான நகை, பணம் எல்லாவற்றையும் நானே தருகிறேன் என அந்த கிழம் கூறியிருக்கிறது.

இதனால் அதிர்ந்து போன அந்த நடிகை எனக்கு எந்த வாய்ப்பே வேண்டாம் என்று மறுத்திருக்கிறார். ஆனாலும் விடாத அந்த மனிதர் நடிகையை ரொம்பவும் வற்புறுத்தி இருக்கிறார். ஒரு கட்டத்தில் அவர் விடாப்பிடியாக நடிகையை நெருங்குவதற்கு முயற்சி செய்து இருக்கிறார்.

Also Read: அப்பா வயது இயக்குனருடன் அட்ஜஸ்ட்மென்ட் செய்த நடிகை.. பெரிய ஹீரோயினாக மாற ஆசைப்பட்டதால் வந்த விபரீதம்

இயல்பிலேயே தைரியமான பெண்ணான அந்த நடிகை எப்படியோ அவரிடம் இருந்து எஸ்கேப் ஆகி வந்திருக்கிறார். அதன் பிறகு இந்த நடிப்பே வேண்டாம் என்று முடிவு எடுத்த நடிகை சினிமாவை விட்டே விலகி இருக்கிறார். தற்போது திருமணம் முடிந்து செட்டிலான நிலையில் அவர் சின்னத்திரையில் கவனம் செலுத்திக் கொண்டிருக்கிறார்.

சமீப காலமாக இப்படிப்பட்ட சில வக்கிரம் பிடித்த மனிதர்களின் புத்தியை நடிகைகள் பலரும் தோலுரித்து காட்டி வருகின்றனர். ஆனாலும் இது போன்ற அவலம் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. இதனாலேயே திறமை இருந்தும் நடிக்க தயங்கும் பலர் இருக்கின்றனர். அதற்கு இந்த நடிகையும் ஒரு உதாரணமாக இருக்கிறார்.

Also Read: 50 வயதிலும் அடங்காத ஆசை.. பஸ் நிக்கிற ஸ்டாப் எல்லாம் சின்ன வீடு செட்டப் செய்யும் நடிகர்

- Advertisement -