சீட்டின் நுனியில் அமர வைத்த 5 திரில்லர் படங்கள்.. ஸ்டேட் விட்டு ஸ்டேட் பொறிவைத்து பிடித்த தீரன்

Actor Karthik: குற்றம் களைவது போன்ற திகில் ஓட்டும் திரில்லர் படங்களுக்கு மக்கள் இடையே நல்ல வரவேற்பு கிடைக்கிறது. மேலும் இக்கதாபாத்திரத்திற்கு ஏற்றவாறு ஹீரோக்கள் தன் நடிப்பினை வெளிக்காட்டியும் உள்ளார்கள்.

அவ்வாறு, இருக்கையின் நுனியில் அமர வைக்கும் அளவிற்கு இப்படங்களில் ஏற்படும் சஸ்பென்ஸ்கள் பார்ப்பவர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அது போன்ற அமைந்த டாப் 5 பெஸ்ட் திரில்லர் மூவிஸ் பற்றிய தகவலை இங்கு காண்போம்.

Also Read: அஜித் பட வாய்ப்பை பரிகொடுத்த இயக்குனர்.. விஷால் தந்தையால் ஏற்பட்ட சங்கடம்

துப்பறிவாளன்: மிஸ்கின் தயாரிப்பில் இடம்பெற்ற இப்படத்தில் விஷால், பிரசன்னா, ஆண்ட்ரியா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள். பல கொலைகளை மேற்கொள்ளும் கும்பலை தன் டிடெக்டிவ் மைண்டால் பின்பற்றிய விஷால் கொண்ட கதாபாத்திரம் மக்களிடையே பேராதரவை பெற்று தந்தது. இப்படம் காண்பவர்கள் இடையே விறுவிறுப்பு ஊட்டும் அளவில் அமைந்து வெற்றியை கண்டது.

போர் தொழில்: சமீபத்தில் ஓ டி டியில் வெளியாகி மாபெரும் வெற்றியை பெற்று தந்த படம் தான் போர் தொழில். தொடர்ந்து ஏற்படும் சீரியல் கொலைகளை களைய முற்படும் இரு போலீஸ் அதிகாரியின் மேற்கொள்ளும் செயல்கள் மக்களிடையே பெரிதும் பேசப்பட்டது. அதிலும் குறிப்பாக சரத்குமாரின் நடிப்பு இப்படத்திற்கு கூடுதல் வெற்றியை பெற்று தந்தது.

Also Read: கொள்கையோடு சினிமாவில் களமிறங்கிய 5 நடிகர்கள்.. நிஜ வாழ்க்கையிலும் கடைப்பிடித்த டி ஆர்

தீரன் அதிகாரம் ஒன்று : 2017ல் ஆக்சன் திரில்லர் படமாய் வெளிவந்த இப்படத்தில் கார்த்தி, ராகுல் ப்ரீத்தி சிங், அபிமன்யு சிங் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள். கொள்ளையடிக்க முற்படும் கும்பலை ஸ்டேட் விட்டு ஸ்டேட் தீவிர வேட்டையில் ஈடுபடும் கார்த்தியின் கதாபாத்திரம் நல்ல விமர்சனத்தை பெற்று தந்தது. அதிலும் குறிப்பாக உண்மை சம்பவத்தை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட இப்படம் கார்த்தியின் பெயர் சொல்லும் படமாக அமைந்தது.

வேட்டையாடு விளையாடு: கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் ஆக்சன் கலந்த க்ரைம் த்ரில்லர் படமாய் வெளிவந்த இப்படத்தில் டேனியல், பிரகாஷ் ராஜ், கமல், ஜோதிகா, கமலினி முகர்ஜி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள். மருத்துவம் பயின்ற இரு சீரியல் கில்லரால் கொலை செய்யப்படும் பெண்களை மேற்கொண்டு புலனாய்வு பண்ணும் கதாபாத்திரத்தில் சிறப்புற நடித்திருப்பார் கமல். இப்படம் மக்களிடையே நல்ல விமர்சனங்களை பெற்று பிளாக் பாஸ்டர் ஹிட் கொடுத்தது.

Also Read: சிகரங்களை செதுக்கிய இயக்குனர் இமயம்.. பாலசந்தர் பெண்ணியம் பேசிய இந்த 6 படங்களை மிஸ் பண்ணிடாதீங்க

ராட்சசன்: பார்ப்பவர்கள் இடையே பரபரப்பை ஏற்படுத்தும் விதமாய் இருக்கையில் அமர வைத்த படங்களில் இதுவும் ஒன்று. சிறுவயதில் தான் சம்பவித்த காதல் தோல்வியால் கொலை செய்யும் சைக்கோ கில்லரை தேடும் பணியில் விஷ்ணு விஷால் தன் நடிப்பினை வெளிக்காட்டி இருப்பார். இப்படம் மக்களிடையே நல்ல விமர்சனங்களை பெற்று தந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story

- Advertisement -