அஜித் பட வாய்ப்பை பரிகொடுத்த இயக்குனர்.. விஷால் தந்தையால் ஏற்பட்ட சங்கடம்

Vishal, Ajith: அஜித்தின் பட வாய்ப்பு கிடைக்காதா என ரசிகர்கள் ஏங்கிக் கொண்டிருக்கிறார்கள். அந்த காலத்தில் அஜித்தின் வாய்ப்பு வந்தும் விஷாலின் தந்தையால் இயக்குனர் ஒருவர் இழந்துவிட்டார். அதை நினைத்து தற்போது வரை பல பேட்டிகளில் புலம்பித் தவித்து வருகிறார் அந்த இயக்குனர்.

அதாவது சிம்பு, விஜய் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களை இயக்கி மிகப்பெரிய வெற்றி கொடுத்தவர் தான் ஏ வெங்கடேஷ். இவர் ஆரம்பத்தில் சிவாஜி மற்றும் விஜய் இருவரையும் ஒன்றாக ஒரே படத்தில் நடிக்க வைக்கலாம் என்ற யோசனையில் கதை எழுதி வைத்திருக்கிறார்.

Also Read : என் இடத்தில எந்த பொண்ணு இருந்திருந்தாலும் செத்துருப்பா.. கொடூர சம்பவத்திலிருந்து மீண்டு வந்த அஜித் பட நடிகை

அந்த சமயத்தில் தான் விஜய் மற்றும் சிவாஜி காம்போவில் ஒன்ஸ்மோர் படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. மீண்டும் இதே கூட்டணியில் படம் வெளியானால் எப்படி இருக்கும் என்ற யோசனையில் வெங்கடேஷ் இருந்துள்ளார். இந்நிலையில் இவரின் நிறைய படங்களை தயாரித்தவர் விஷாலின் தந்தை ஜிகே ரெட்டி.

இவரிடம் வெங்கடேஷ் அந்த கதையை சொல்லும்போது தனது மகன் விக்ரம் கிருஷ்ணாவை வைத்து இந்த படத்தை எடுக்குமாறு கூறியுள்ளார். அதாவது விக்ரம் கிருஷ்ணா விஷாலின் அண்ணன் அவர். இயக்குனரும் சரி என்று தலையாட்டிவிட்டு சென்று விட்டாராம்.

Also Read : வடிவேலு நல்லவரு, அஜித் ஈகோ புடிச்ச ஆளு.. வைகை புயலை இம்ப்ரஸ் செய்ய கூவும் நடிகர்

அதன் பிறகு தயாரிப்பாளர் இந்த படத்தில் சிவாஜி காம்போவில் அஜித்தை போடலாம் என்று கேட்டுக் கொண்டுள்ளார். ஆனால் என்னை சினிமாவில் வளர்த்து விட்டது விஷாலின் தந்தை ஆகையால் அவர் பேச்சை மீறி என்னால் எதையும் செய்ய முடியாது என வெங்கடேஷ் மறுத்து விட்டாராம்.

அதன் பிறகு தான் சிவாஜி மற்றும் விக்ரம் கிருஷ்ணா கூட்டணியில் பூப்பறிக்க வருகிறோம் என்ற படம் உருவானது. ஆனால் இந்த படம் எதிர்பார்த்த அளவு போகவில்லை. அஜித் வாய்ப்பை அப்பொழுது இழந்துவிட்டேன் இனிமேல் கிடைக்க வாய்ப்பே இல்லை என இப்பொழுது புலம்பி வருகிறார் இயக்குனர்.

Also Read : ஒரு வழியா முடிவுக்கு வந்த அஜித்தின் விடாமுயற்சி .. அட போங்கடா என டேக்கா கொடுத்த த்ரிஷா

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்