நம்ம சினிமா மறந்து போன 5 சூப்பரான ஹீரோக்கள்.. ஆன்மீகத்தில் இறங்கிய ராஜன் தம்பி

5 super heroes forgotten by Tamil cinema: திரைத்துறையில் சாதிக்கும் எண்ணத்தோடு வரும் இளைஞர்கள் வாய்ப்புக்காக பலவகையிலும் போராடி வருகின்றனர். வாய்ப்பு கிடைத்த சிலரோ முட்டி மோதி வெற்றி பெற்ற போதும் தனக்குரிய இடத்தை தக்க வைத்துக் கொள்ள முடியாமல் தடுமாறி போயினர். இவ்வாறாக தமிழ் சினிமா மறந்து போன 5 சூப்பர் ஹீரோக்களை பற்றி காணலாம்.

பாலாவின் இயக்கத்தில் 2001  சூர்யா, ராஜ்கிரண், லைலா நடிப்பில் வெளிவந்த நந்தா திரைப்படத்தில் கல்லூரி மாணவனாக அடாவடி செய்தவர் நந்தா சரவணன். கில்லி திரைப்படத்தில் விஜய்க்கு எதிராக பிளேடை வைத்து மிரட்டி கபடி ஆடிய நந்தா சரவணன் அதற்குப் பின் ஓரிரு படங்களில் நடித்து பின் திரைத்துறையை விட்டு ஒதுங்கி விட்டார்.

Also read: அப்ப நிஜமாவே பாலா சைக்கோ தானா.? புது பஞ்சாயத்தை கூட்டிய தாரை தப்பட்டை நடிகர்

விசில் திரைப்படத்தில் பிக்பாஸ் புகழ் காயத்ரி ரகுராம், ஷெரின் மற்றும் டிடி இவர்களுடன் இணைந்து நடித்தவர்தான் விக்ரமாதித்யா. இளமை துள்ளலுடன் பெண் ரசிகர்களிடையே அதிகமாக பிரபலமான விக்ரமாதித்யா அடுத்து பம்பர கண்ணாலே படத்தில் நடித்தார். அவ்வளவுதான் மனுஷன் எங்க இருக்காருன்னுனே தெரியல.

ராதிகாவின் சித்தி என்கின்ற சின்னத் திரை தொடர் மூலமாக அறிமுகமானவர் டேனியல் பாலாஜி. தனுசுடன் பொல்லாதவன்  விஜய்யின் பைரவா,  மற்றும் கமலின் வேட்டையாடு விளையாடு போன்ற படங்களில் வில்லனாக நடித்தவர் டேனியல். வெற்றிமாறனின் வட சென்னை படத்தில் இவரது கேரக்டர் அதிகமாக பேசப்பட்டது. திரைத்துறையில் வெற்றி பெற சாதிக்க துடிக்கும் இவர் தனது தாயின் ஆசைக்காக சென்னை ஆவடியை பகுதியில் அங்காள பரமேஸ்வரி கோயிலைக் கட்டி கும்பாபிஷேகம் நடத்தி முடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

திரைப்பட இயக்கத்திற்கான படிப்பில் தங்க பதக்கம் பெற்றவர் யுகி சேது. 1987 ஆண்டு கவிதை பாட நேரமில்லை என்ற படத்தின் மூலம்  இயக்குனராக அறிமுகமானார்.  கமலின் பஞ்சதந்திரம், விஜயகாந்த் உடன் ரமணா போன்ற படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த யுகி சேது பப்ளிசிட்டியை விரும்பாத ஒரு யுனிவர்சிட்டி எனலாம். ரீல் லைஃபில் மட்டுமல்ல ரியல் லைஃப்லும் நகைச்சுவையுடன் பேசுவதில் வல்லவராம் யுகி.

தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் குணச்சித்திர நடிகராகவும் வில்லன்  நடிகராகவும் நடித்து வருபவர் கிஷோர். வெற்றிமாறனின் ஆஸ்தான நட்சத்திரமாக அவரின் பல படங்களிலும் தலை தூக்கும் கிஷோருக்கு விவசாயத்தின் மீது கொள்ளை பிரியமாம். அது மட்டும் இன்றி தன்னுடைய வேலைகள் அனைத்தையும் மற்றவரின் உதவி இல்லாமல் தானே செய்வாராம். இதை வெற்றிமாறனே பேட்டி ஒன்றில் பெருமையாக பகிர்ந்து இருந்தார்.

Also read: மூன்றே படத்தில் முக்காடு போட்ட இயக்குனர்.. விஜய்யை ஆக்சன் ஹீரோவாக மாற்றி கொடுத்த பிளாக் பஸ்டர் ஹிட்

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்