ஒரே வாரத்தில் முணுமுணுக்க வைத்து தெறிக்க விட்ட 5 பாடல்கள்.. அனிருத், ஏ ஆர் ரகுமானிடம் மாட்டிய யுவன்

Yuvan stuck with Anirudh and AR Rahuman: சமீப காலமாக எந்த ஒரு பெரிய நடிகர்களின் படங்களாக இருந்தாலும் அந்த படம் திரையரங்குகளில் வருவதற்கு முன் பாடல்களை வெளியிட்டு மிகப்பெரிய ஹைப்பை ஏற்படுத்தி விடுகிறார்கள். அதுவும் குழந்தைகள் மனதை கவரும் வகையில் அந்த பாடல்களை வெளியிட்டு இந்த படம் தியேட்டர்களில் வந்தால் எங்களை பார்க்க கூட்டுப் போக வேண்டும் என்ற அடம் பிடிக்க வைக்கும் அளவிற்கு சில பாடல்கள் ஹிட் ஆகி விடுகிறது.

அந்த வகையில் மே 20 ஆம் தேதியிலிருந்து இன்று வரை வெளிவந்து ஒரு வாரத்திற்குள்ளே சில படங்களின் பாடல்கள் பட்டி தொட்டி எல்லாம் தெறிக்கவிட்டு விட்டது. இதனால் ஒரு பக்கம் எந்த படம் மக்களிடம் ஜெயிக்கப் போகிறது என்று போட்டி போட்டு வந்தாலும் இன்னொரு பக்கம் அந்தப் பாடல்களை மெருகேற்றும் விதமாக இசையமைத்த இசையமைப்பாளர்களுக்கும் மிகப்பெரிய சவாலாக அமைந்து வருகிறது.

ரிலீசுக்கு வரிசை கட்டி இருக்கும் படங்கள்

அப்படி இந்த ஒரு வாரத்தில் வெளிவந்த பாடல்கள் மற்றும் படங்களை பற்றி தற்போது பார்க்கலாம். இயக்குனர் சங்கர் இயக்கத்தில் கமல் நடிப்பில் உருவாகியுள்ள இந்தியன் 2 படம் ஜூலை மாதம் 12ஆம் தேதி அனைத்து திரையரங்களிலும் ரிலீஸ் ஆக தயாராகிவிட்டது. அதற்கு முன் இதிலிருந்து முதல் பாடலான பாரா(Paaraa) என்ற பாடல் வெளியாகி உள்ளது. இப்பாடலை பா விஜய் எழுதி அனிருத் மற்றும் ஷ்ருதிகா சமுத்ரலா இணைந்து பாடியிருக்கிறார்கள்.

அதே மாதிரி அனிருத் அக்கட தேசத்திலும் ஜூனியர் என்டிஆர் நடிப்பில் உருவாகியுள்ள தேவாரா படத்திற்கு இசையமைத்திருக்கிறார். அதில் Fear Song அடி தூள் கிளப்பும் வகையில் பட்டய கிளப்பி வருகிறது. இதனை அடுத்து தனுஷ் இயக்கி, எழுதி, நடிப்பில் உருவாகியுள்ள ராயான் படத்திலும் இரண்டு பாடல்கள் வெளியாயிருக்கிறது. அடங்காத அசுரன் மற்றும் வாட்டர் பாக்கெட் இரண்டு பாடல்களுமே வெளிவந்து ரசிகர்களிடம் அதிக ஹைப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அத்துடன் இந்த படத்திற்கு ஏஆர் ரகுமான் இசையமைத்து கொடுத்திருக்கிறார்.

அடுத்ததாக துரை செந்தில்குமார் இயக்கத்தில் வெற்றிமாறன் தயாரிப்பில் சூரி மற்றும் சசிகுமார் நடிப்பில் உருவாகியுள்ள கருடன் இந்த மாதம் 31ஆம் தேதி அனைத்து திரையரங்களிலும் வெளிவர இருக்கிறது. இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து கொடுத்திருக்கிறார். இப்படத்தில் இருந்து ஒத்தப்பட வெறியாட்டம் வச்ச பொறி நரியாட்டம் என்ற பாடல் நேற்று வெளியானது. இந்த பாடலை கேட்கும் பொழுது சூரிக்கு தத்ரூபமாக பொருந்தியது போல் பாடல் வரிகள் இசை அனைத்துமே புல்லரிக்க வைத்து விட்டது.

ஆனால் சமீபத்தில் அனிருத்திடம் யார் போட்டி போட்டாலும் வேலைக்காகாது என்று சொல்வதற்கு ராக் ஸ்டார் ஆக ஜொலித்து வருகிறார். அந்த வகையில் இசைப்புயல் மற்றும் ராக்ஸ்டார் இடம் மாட்டிக்கொண்ட யுவனுக்கு இந்த பாடல் கை கொடுக்குமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

3 இசை ஜாம்பவான்களின் லேட்டஸ்ட் அப்டேட்

- Advertisement -