இஷ்டத்துக்கு கொளுத்தி போட்ட நெட்டிசன்கள்.. பதறிப் போய் பதிலடி கொடுத்த GOAT யுவன்

Yuvan Shankar Raja: கடந்த சில மணி நேரங்களாகவே சோசியல் மீடியா அல்லோலப்பட்டுக் கொண்டிருக்கிறது. அதற்கு காரணம் யுவன் சங்கர் ராஜாவின் இன்ஸ்டாகிராம் அக்கவுண்ட் செயலிழந்தது தான்.

இதைப் பார்த்த நெட்டிசன்கள் உடனே விசில் போடு பாடலின் நெகட்டிவ் விமர்சனங்களால் பயந்து போய்விட்டார் என கொளுத்தி போட்டனர். அந்த செய்தியும் தீயாக பரவியது.

yuvan-shankar raja
yuvan-shankar raja

கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளிவந்த கோட் படத்தின் முதல் பாடல் தற்போது வரை சர்ச்சையான விஷயங்களை சந்தித்துக் கொண்டிருக்கிறது. யுவன் தன் ரசிகர்களை ஏமாற்றிவிட்டார் என்ற கமெண்ட்டுகளும் பறந்தது.

இதற்கு அந்தப் பாடலை எழுதிய மதன் கார்க்கி விளக்கமும் கொடுத்திருந்தார். ஆனாலும் யுவனை நெட்டிசன்கள் ட்ரோல் செய்வதை மட்டும் நிறுத்தவில்லை.

சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த யுவன்

இந்த சூழ்நிலையில்தான் அவருடைய சோசியல் மீடியா பக்கம் செயலிழந்தது. உடனே இதற்கும் அதற்கும் முடிச்சு போட்டு ஒரு வதந்தியை ரசிகர்கள் பரப்ப தொடங்கி விட்டனர்.

இதையெல்லாம் பார்த்த யுவன் சங்கர் ராஜா தற்போது ஒரு ட்வீட் போட்டுள்ளார். அதில் தொழில்நுட்ப கோளாறு தான் இதற்கு காரணம் என தெரிவித்துள்ளார்.

மேலும் அதை சரி செய்வதற்கான வேலையை தன்னுடைய டீம் பார்த்து வருவதாகவும் விரைவில் சரியாகிவிடும் என்றும் தெரிவித்துள்ளார்.

இதுதான் தற்போது வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த ரசிகர்கள் அஜித் ஃபேன்ஸ் தான் இப்படி ஒரு வதந்தியை கிளப்பி இருப்பார்கள் என பதிலடி கொடுத்து வருகின்றனர். எது எப்படியோ யுவன் இதன் மூலம் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டார்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்