பிரபலங்களின் மார்க்கெட்டை காலி செய்த 5 விஷ பூச்சிகள்.. ஆல் அட்ரஸே காணாமல் போன மைக் மோகன்

Actor Mohan: அடுத்தடுத்த படங்களில் தொடர் வெற்றியை கொடுத்து தனக்கான அடையாளத்தை உருவாக்கிக் கொண்ட பிரபலங்களை அடியோடு அழிக்க முடிவெடுத்தவாறு பிரச்சனையை மேற்கொண்டு கேரியரையே தொலைக்க செய்த 5 விஷ பூச்சிகளை பற்றி இத்தொகுப்பில் காண்போம்.

அப்பாஸ்: சாக்லேட் பாய் ஆக தமிழ் சினிமாவில் உச்சபட்ச நடிகராய் திகழ்ந்தவர் அப்பாஸ். பிரசாந்த், அஜித், விஜய் காலத்தில் போட்டியாய் களமிறங்கிய இவர் சினிமாவே வேண்டாம் என வெளியூரில் செட்டில் ஆகி, தற்போது மீண்டும் நடிக்க போவதாக பேச்சும் அடிபட்டு வருகிறது. இருப்பினும் இவர் சினிமாவில் இருந்து விலக பல காரணம் இருந்தாலும் சி சி எல் விளையாட்டில் தனக்கான அங்கீகாரம் கிடைக்க விடாமல் செய்ததாக விஷால் மீது ஒரு புகார் முன்வைக்கப்பட்டது.

Also Read: இணையத்தில் கசிந்த சிவகார்த்திகேயன் சிக்ஸ் பேக் புகைப்படம்.. ஆகஸ்ட் 15ல் சம்பவம் செய்யப் போகும் SK-21

கோவை சரளா: நகைச்சுவை நடிகையாய் தனக்கான அடையாளத்தை உருவாக்கிக் கொண்டவர் கோவை சரளா. இவரும், வடிவேலும் இணைந்து கலக்கிய காமெடிகள் மக்களின் பேராதரவை பெற்றுத் தந்தது. இந்நிலையில் தன் சக நடிகையின் வளர்ச்சியை பிடிக்காமல் வடிவேலு இவரை தமிழ் சினிமாவில் இருந்து விரட்டி விட்டதாகவும். அதை தொடர்ந்து தான் கோவை சரளா தெலுங்கு சினிமாவில் நடிப்பை மேற்கொண்டதாக கூறப்படுகிறது.

பிளாக் பாண்டி: சிவகார்த்திகேயனும், பிளாக் பாண்டியும் சிறந்த நண்பர்கள் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றே. அவ்வாறு சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் பட்டைய கிளப்ப தொடங்கிய காலகட்டத்தில் நகைச்சுவை மேற்கொண்டு வந்தார் பிளாக் பாண்டி. இவரின் வளர்ச்சியை பிடிக்காது, ஒருமுறை சூரி சிவகார்த்திகேயனை பற்றி கேட்க, நண்பன் என்ற முறையில் பேசிய பேச்சை தவறாக எடுத்துரைத்து எங்களின் நட்பில் விரிசலை ஏற்படுத்தினார் சூரி என்று இன்டர்வியூ ஒன்றில் கூறினார்.

Also Read: நார்வேயில் த்ரிஷாவுடன் ஜாலி பண்ணும் தளபதியின் புகைப்படம்.. இது நம்ம லிஸ்ட்லயே இல்ல

ஷர்மிலி: நடிகையாகவும், டான்சராகவும் தமிழ் சினிமாவில் வலம் வர வேண்டும் என ஆசைப்பட்டதாக கூறிய ஷர்மிலி, கவுண்டமணி தான் தன் படத்தில் நகைச்சுவையை ஏற்க கூப்பிட்டதாகவும், அதன்பின் நகைச்சுவை கதாபாத்திரங்களை ஏற்கும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு தன் கேரியரையே தொலைத்து விட்டதாக மனம் உருகி கூறி வருகிறார்.

மோகன்: 90 காலகட்டத்தில் புகழின் உச்சியில் இருந்தார் மைக் மோகன் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றே. அதன்பின் ஏன் சரிவர எந்த படங்களில் நடிக்கவில்லை என்பது கேள்விக்குறியாக இருக்கும் நிலையில், சினிமாவில் இவரின் நடிப்பை கண்டு விரும்பாத ஹீரோயின்களே இருக்க முடியாது அந்த அளவிற்கு தனக்கான பெண் ரசிகர்களைக் கொண்ட இவரை பிரபல நடிகை ஒருவர் காதலிப்பதாக கூறியதை ஏற்க மறுத்ததால் அவருக்கு சில பிரச்சனைகள் உள்ளதாக வதந்தியை பரப்பி அவர் கேரியரையே புள்ள பூச்சி மாதிரி அழித்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இது போன்ற தகவல் தான் தொடர்ந்து பேசப்பட்டு வருகிறது இருப்பினும் இவை வீண் வதந்தியாக கூட இருக்கலாம் எனவும் கருதப்படுகிறது.

Also Read: டான்ஸ் நடிகையை வேட்டையாடிய முன்னணி ஹீரோ.. பணத்தை சுருட்டிக்கொண்டு கழட்டி விட்ட சோகம்

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்