சனிக்கிழமை, டிசம்பர் 14, 2024

ஃபகத் பாஸில் தமிழில் கலக்கிய 5 படங்கள்.. நடிப்பு அரக்கன் என மூக்கில் விரல் வைத்த கமல்

Actor Fahadh Faasil: தன் தந்தையின் சிபாரிசில் மலையாள படங்களில் மாஸ் காட்டி வரும் முன்னணி கதாநாயகன் தான் ஃபகத் பாசில். அதைத்தொடர்ந்து தமிழில் தற்பொழுது வில்லன் கதாபாத்திரத்தில் தன் நடிப்பின் மூலம் மூக்கில் விரல் வைக்கும் அளவிற்கு சிறப்புற நடித்து வருகிறார்.

இந்நிலையில் சமீபத்தில் வெளிவந்த விக்ரம் படத்தில் இவரின் நடிப்பை கண்டு கமலே வியந்துள்ளார். அவ்வாறு தமிழ் சினிமாவில் இவர் மேற்கொண்ட 5 படங்களை பற்றி இங்கு காண்போம்.

Also Read: சிவாஜிக்கு நடிப்பு சொல்லிக் கொடுக்கும் 2 நடிகர்கள்.. எந்த சந்தேகமாக இருந்தாலும் உரிமையாக பேசி தீர்த்துக் கொள்வார்

சூப்பர் டீலக்ஸ்: 2019ல் தியாகராஜன் குமரராஜா இயக்கத்தில் வெளிவந்த படம் தான் சூப்பர் டீலக்ஸ். இப்படத்தில் விஜய் சேதுபதி, ஃபகத் பாசில், சமந்தா, ரம்யா கிருஷ்ணன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள். இப்படத்தில் ஃபகத் பாசில் சப்போர்ட்டிங் ஆக்டராக சிறப்புற நடித்திருப்பார்.

வேலைக்காரன்: 2017ல் சிவகார்த்திகேயனின் ஆக்சன் படமாக வெளிவந்த இப்படத்தில் நயன்தாரா, சினேகா, ஃபகத் பாசில் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள். இதில் ஃபகத் பாசில், பணியாளர்களை ஏமாற்றும் கதாபாத்திரத்தில் தத்ரூபமாக நடித்திருப்பார்.

Also Read: சஸ்பென்ஸ் ஆக சிம்பு விடுத்த அழைப்பு.. சூப்பர் ஹிட் திரில்லர் கதைக்கு ஆசைப்படும் எஸ் டி ஆர்

புஷ்பா: 2021ல் அல்லு அர்ஜுன், ஃபகத் பாசில், ராஷ்மிகா மந்தனா ஆகியோர் இணைந்து நடித்த படம் தான் புஷ்பா. தெலுங்கிலும், தமிழிலும் வெற்றி கண்ட இப்படத்தில் ஹீரோவிற்கு டஃப் கொடுக்கும் வில்லன் கதாபாத்திரத்தில் ஃபகத் பாசில், மக்கள் இடையே நல்ல விமர்சனங்களை பெற்றார். மேலும் இப்படத்தில் இவரின் நடிப்பு கூடுதல் சிறப்பை பெற்று தந்திருக்கும்.

விக்ரம்: சமீபத்தில் வெளிவந்த விக்ரம் படத்தில் உலக நாயகன், ஃபகத் பாசில், விஜய் சேதுபதி, சூர்யா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள். இப்படத்தில் கமல் பற்றிய தகவலை புலனாய்வு செய்யும் கதாபாத்திரத்தில் ஃபகத் பாசில் சிறப்புற நடித்திருப்பார். மேலும் இப்படத்தில் இவரின் நடிப்பை கண்டு கமலே வியக்கும் அளவிற்கு அமைந்திருக்கும்.

Also Read: வரலட்சுமி நடிப்பில் மிரள வைத்த 5 படங்கள்.. குலத்தை கருவறுக்க துடித்த பேச்சி

மாமன்னன்: மாரி செல்வராஜ் இயக்கத்தில், அரசியல் ரீதியான கதை கொண்ட படம் தான் மாமன்னன். இப்படத்தில் வடிவேலு, ஃபகத் பாசில், கீர்த்தி சுரேஷ், உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள். இப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் இடம்பெறும் ஃபகத் பாசிலின் நடிப்பை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் ரசிகர்கள்.

- Advertisement -

Trending News