ஐஸ்வர்யா ராஜேஷ் வளர காரணமாய் இருந்த 5 படங்கள்.. நயன்தாராக்கு போட்டி நான் தான் சொல்லும் அளவிற்கு வந்த உயரம்

Aishwarya Rajesh: பொதுவாக சினிமா நடிகர்களின் வாரிசுகள், நடிக்க வருவது வழக்கம். ஆனால் எந்த ஒரு பேக்ரவுண்ட் சப்போர்ட் இல்லாமல் சொந்த முயற்சியினால் மேலே வந்தவர் ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் ஆரம்ப காலகட்டத்தில் அசத்தப்போவது யாரு, மானாட மயிலாட நிகழ்ச்சியில் கலந்துகொண்டு,பின்னர் படிப்படியாக சினிமாக்குள் வந்தவர். தற்போது உள்ள முன்னணி கதாநாயகிகளுக்கு டப் கொடுக்கும் அளவிற்கு வளர்ந்து இருக்கிறார். அப்படி இவர் மேலே வருவதற்கு அடித்தளமாக அமைந்த 5 திரைப்படங்கள் பற்றி பார்க்கலாம்.

ரம்மி: இவர் தன்னுடைய திரையுலக பயணத்தை 1996 இல் ரம்பாண்டு என்ற தெலுங்கு படத்தில் வரும் பாட்டில் குழந்தை நட்சத்திரமாக தொடங்கினார். அதனைத் தொடர்ந்து இவர் நீதானே அவன் 2010ல் வெளியான திரைப்படத்தில் நந்தினியாக தமிழில் அறிமுகமானார். பிறகு வரிசையாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது, ஆனால் எந்த ரீச்யும் கிடைக்கவில்லை. இவருக்கு முதலில் பெயர் வாங்கிக் கொடுத்த திரைப்படம், 2013இல் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் விஜய் சேதுபதியின் கூட்டணியில் வெளியான ரம்மி ஆகும்.

Also Read:பல கோடி கொட்டிக் கொடுத்தாலும் அவன் கூட சேராததற்கு காரணம்.. மிஷ்கினால் மனநலம் பாதிக்கப்பட்ட விஷால்

காக்கா முட்டை: தொடர்ந்து இவர் சில படங்கள் நடித்திருந்தார் ஆனால் அதெல்லாம் எடுபடவில்லை. மறுபடியும் பயங்கர பேமஸானது 2015இல் மணிகண்டன் இயக்கத்தில் வெளியான காக்கா முட்டை திரைப்படத்தின் மூலம் ஆகும். இதில் காக்கா முட்டை இருவரின் அம்மாவாக தத்ரூபமான நடித்து இருந்திருப்பார். திரைப்படத்திற்கு சிறந்த நடிகை எனும் விருதும் வாங்கினார். இது இவரின் கேரியரில் முக்கிய திரைப்படமாக அமைந்தது.

பிளான் பி: விக்னேஷ் கார்த்தி இயக்கத்தில் 2021ல் வெளியான திட்டம் இரண்டு திரைப்படமும் இவருக்கு வெற்றியை தேடி தந்தது. இது ஒரு கிரைம் திரில்லர் திரைப்படமாகும். அதிரா என்னும் போலீசாக தனது துணிச்சலான நடிப்பினை வெளிப்படுத்தி இருப்பார். இவரின் திரைப்படங்கள் தொடர் வெற்றியினால் இவருக்கென ஒரு தனி அடையாளமே உருவானது.

Also Read:வயசானாலும் சுண்டி இழுக்கும் அழகு ஆன்ட்டிஸ்.. இப்பவும் ஜோதிகாவை பார்த்து வாயை பிளக்கும் இளசுகள்

க பே ரணசிங்கம்: விருமாண்டி இயக்கத்தில் 2020 இல் வெளியான க பே ரணசிங்கம் திரைப்படத்தில் விஜய் சேதுபதியுடன் நடித்த அரசியல் சார்ந்த கருத்துக்களை கொண்ட திரைப்படம் ஆகும். அரியநாச்சியாக தனது உணர்வுபூர்வமான நடிப்பினை வெளிப்படுத்தி இருப்பார். இத்திரைப்படத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது.

வடசென்னை: வெற்றிமாறன் இயக்கத்தில் 2018ல் தனுஷ் உடன் இணைந்து நடித்து வெளியான திரைப்படம் வடசென்னை. திரைப்படத்தில் சமுத்திரக்கனி, டேனியல் பாலாஜி, அமீர் போன்றோர் நடித்துள்ளனர். பத்மாவாக இவர் பேசிய வசனங்களாலும், நடிப்பினாலும் திரையுலகையே திரும்பி பார்க்க வைத்தவர். தமிழ் சினிமாவின் லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவுக்கே பயங்கர போட்டியாக இருக்கும் அளவுக்கு இவரின் வளர்ச்சி இருக்கிறது

Also Read:ஐஸ்வர்யா ராய்க்கு ஆசைப்பட்டு மொத்த வாய்ப்பையும் பறிக்கொடுத்த நடிகர்.. சாதுரியமாக அஜித் வாங்கிய வாய்ப்பு

Stay Connected

1,170,254FansLike
132,060FollowersFollow
1,320,000SubscribersSubscribe
- Advertisement -