புதன்கிழமை, அக்டோபர் 16, 2024

ஐஸ்வர்யா ராய்க்கு ஆசைப்பட்டு மொத்த வாய்ப்பையும் பறிக்கொடுத்த நடிகர்.. சாதுரியமாக அஜித் வாங்கிய வாய்ப்பு

Actress Aiswariya Rai: நடிகர்கள் எப்போதுமே அழகான, தங்களுக்கு பிடித்த நடிகைகளுடன் நடிக்க ஆசைப்படுவது இயல்பான ஒன்றுதான். அதிலும் சில நடிகர்கள் ஒரே நடிகைகளுடன் தொடர்ச்சியான படங்களில் நடித்து வருவதையும் வாடிக்கையாக வைத்துள்ளனர். ஆனால் இந்த விஷயம் எல்லாம் தற்போதுள்ள காலக்கட்டத்தில் சற்று மாறுப்பட்டுள்ளது. அதாவது எந்த நடிகைகளுக்கு மார்க்கெட் அதிகமாக இருக்கிறதோ அவர்களுடன் மட்டுமே ஹீரோக்கள் ஜோடி சேர நினைக்கிறார்கள்.

அதில் அவர்களுக்கு ஏற்ற கதாபாத்திரம் இல்லையென்றாலும் மார்கெட்டுக்காக இப்படி நடிகைகளை அப்படங்களில் நடிக்க வைக்கின்றனர். ஆனால் 80,90 களில் மார்க்கெட்டுக்காக நடிகைகளை நடிக்க வைக்காமல் படத்தின் கதாபாத்திரத்திற்காகவே நடிகைகளின் தேர்வு இருக்கும். அது புதுமுக நடிகைகளாக இருந்தாலும் சரி, முன்னணி நடிகைகளாக இருந்தாலும் சரி, அந்த வகையில் பிரபல சாக்லேட் பாய் நடிகர் ஒருவர் முன்னாள் உலக அழகியும், நடிகையுமான ஐஸ்வர்யா ராயுடன் மட்டும் தான் நடிப்பேன் என அடம்பிடித்து தன் வாய்ப்பை பறிக்கொடுத்துள்ளார்.

Also Read: பிரபுதேவாவுடன் ஜோடி போட மறுத்த ஐஸ்வர்யா ராய்.. லிவிங்ஸ்டன் ஸ்கோர் செய்த படம்

நடிகை ஐஸ்வர்யா ராய் தமிழில் இருவர் படத்தின் மூலமாக அறிமுகமான நிலையில், பாலிவுட்டில் செட்டிலானார். பின்னர் பொன்னியின் செல்வன் பாகம் 1 ,2 படங்களின் மூலமாக மீண்டும் ரீ என்ட்ரி கொடுத்துள்ளார். இந்நிலையில், இவருடன் ஜோடிப் போட்டு நடிக்க வேண்டும் என்ற ஆசை சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் முதல் ஜெயம் ரவி வரை இருந்துதான் வருகிறது. அதற்கான காரணம் ஐஸ்வர்யா ராயின் அழகு, மற்றொன்று அவருடன் நடித்தால் வரும் பெருமை, இதுவே அவருடன் நடிக்க வேண்டும் என்ற போட்டிக்கு காரணமாக அமைந்துள்ளது.

அந்த வகையில் 2000ஆம் ஆண்டு இயக்குனர் ராஜிவ் மேனன் இயக்கத்தில் வெளியான கண்டுக்கொண்டேன் கண்டுக்கொண்டேன் படத்தில் ஐஸ்வர்யா ராய், தபு, மம்மூட்டி, அப்பாஸ், அஜித் உள்ளிட்டோர் நடித்த நிலையில், இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தில் ஐஸ்வர்யா ராய்க்கு ஜோடியாக அப்பாஸ் நடித்ததையடுத்து, தபுவுக்கு ஜோடியாக அஜித் நடித்திருப்பார்.

Also Read: அந்தரங்க விஷயத்தில் என் புருஷன் இப்படித்தான் இருக்கணும்.. கண்டிஷன் போட்ட ஐஸ்வர்யா ராய்

இதனிடையே ஆரம்பத்தில் அஜித்தின் கதாபாத்திரத்தில் நடிக்க நடிகர் பிரஷாந்திடம் தான் இயக்குனர் கேட்டுள்ளார். ஆனால் நடிகர் பிரஷாந்த் என்னால் தபுவுக்கு ஜோடியாக நடிக்க முடியாது, ஐஸ்வர்யா ராய்க்கு மட்டும் தான் ஜோடியாக நடிப்பேன் என அடம்பிடித்துள்ளார். காரணம் இவரது முந்தைய படமான ஜீன்ஸ் படத்தில் ஐஸ்வர்யா ராயுடன் ஜோடி போட்டிருப்பார். இயக்குனரும் எவ்வளவோ பிரஷாந்திடம் பேசிப்பார்த்த நிலையில், வேறு வழியே இல்லாமல் அஜித்தை இப்படத்தில் நடிக்க வைத்தனர்.

இப்படம் வெளியாகி 23 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில், ஐஸ்வர்யா ராயை விட தபு, அஜித்தின் காதல் தான் ரசிகர்களை கொண்டாட வைத்து வருகிறது. மீண்டும் இவர்களது ஜோடியை திரையில் பார்க்க மாட்டோமா என்ற ஏக்கமும், எதிர்பார்ப்பும் ரசிகர்களுக்கு அதிகம் உள்ளது. ஒருவேளை இப்படத்தில் பிரஷாந்த் நடித்திருந்தால் இன்று அவரது மார்க்கெட் நிலைத்திருக்கும் வாய்ப்பையாவது பெற்றிப்பார். ஆனால் உலக அழகிக்கு ஆசைப்பட்டு மொத்த மார்க்கெட்டையும் இழந்துள்ளார்.

Also Read:  அட்லீக்கு மட்டும் கிடைக்கும் மாலை, மரியாதை.. கண்டுகொள்ளாமல் கை கழுவி விடப்பட்ட அஜித் நண்பர்

- Advertisement -spot_img

Trending News