நம்ப ஹீரோக்களோடு சேர்ந்து ஹிட் கொடுத்த 5 மலையாள மாஸ் நட்சத்திரங்கள்.. மல்டி ஸ்டார் திருவிழாவை ஆரம்பித்து வைத்த மம்மூட்டி

Tamil-Malayalam Heroes: பொதுவாகவே ஸ்டார் நடிகர்களின் படங்கள் ரிலீஸ் என்றாலே ரசிகர்களிடையே கொண்டாட்டங்கள் நிறைந்திருக்கும். அதுவே மல்டி ஸ்டார் ஹீரோக்கள் என்றால் சொல்லவே வேணாம், பயங்கர எதிர்பார்ப்புக்கள் உடன் கோலாகலமாக திருவிழா போல் பரபரப்புடன் இருக்கும். அப்படி தமிழ் ஹீரோக்களுடன் இணைந்த கலக்கிய 5 மலையாள ஹீரோக்கள் யார், என்ன திரைப்படம் என்றும் பார்க்கலாம்.

தளபதி: 1991 ஆம் ஆண்டு மணிரத்தினம் இயக்கத்தில் வெளிவந்தது தளபதி. முதல் முதலாக மல்லு ஹீரோவான மம்முட்டி, ரஜினியுடன் இணைந்து தமிழில் நடித்த படம். மகாபாரதத்தில் உள்ள கர்ணன், துரியோதனனை போல கதை அமைப்பு இருக்கும். இருவரின் பயங்கரமான அதிரடி நடிப்பினால் அப்போது வசூலை அள்ளிக் குவித்த திரைப்படமாகும்.

Also Read:இந்தியன்-2 படத்திற்கு முன்பே வெறியோடு வெளிவரும் கங்குவா.. பாகுபலி, கேஜிஎஃப் படத்திற்கு பின் இணைந்த பிரம்மாண்ட கூட்டணி

ஜில்லா: மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால், விஜய்யுடன் இணைந்து நடித்து வெளியான திரைப்படம் ஜில்லா. காஜல் அகர்வால், மகத், நிவேதா தாமஸ், சூரி, பூர்ணிமா பாக்யராஜ் போன்ற பல நடிகர்களும் இணைந்த திரைப்படம். இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது.

மொழி: 2007 ஆம் ஆண்டு ராதா மோகன் இயக்கத்தில் வெளியானது மொழி. இதில் பிரித்திவிராஜ், பிரகாஷ் ராஜ், ஜோதிகா போன்றோர் முதன்மை கதாபாத்திரமாக நடித்திருந்தனர். இசைக்கும், மௌனத்திற்கும் இடையே நடக்கும் காதல் போர் தான் இந்த படம். மௌனமும் ஒரு மொழி தான் என ஜோதிகா மூலம் இயக்குனர் இதில் சொல்லி இருப்பார்.

Also Read:என் அப்பாவ இப்படி பேச வாய் கூசலை.. நேருக்கு நேர் மோத பயில்வானுக்கு சவால் விட்ட மாரிமுத்துவின் வாரிசு

முறைமாமன்: சுந்தர் சி இயக்கத்தில் 1995இல் ஜெயராம், கவுண்டர் மணி இணைந்து திரைப்படம் முறைமாமன். கவுண்டமணிக்கு எப்படி தமிழ் நடிகர்களோடு நல்ல கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆனதோ அதைவிட கொஞ்சம் கூடுதலாகவே மலையாள நடிகர் ஜெயராமுடன் இந்த படத்தில் காமெடி கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகி இருந்தது.

விக்ரம்: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 2022 ஆம் ஆண்டு வெளியான விக்ரம் திரைப்படத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் உடன் பகத் பாசிலும் இணைந்து அமர்க்கப்படுத்திருப்பார்கள். இந்தியாவிலேயே அதிகபட்சம் வசூல் ஈட்டிய திரைப்படங்களில் வரிசையில் இதுவும் ஒன்று. திரையரங்குகளை அதிர வைக்கும் அளவிற்கு திரில்லிங் ஆக்சன் திரைப்படமாக தெறிக்க விட்டது.

Also Read:தட்டு தடுமாறிய ஜெயிலர்.. 18 நாளில் சாதித்து காட்டிய அட்லி, இனி ஒரு கொம்பனாலும் அசைக்க முடியாது

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்