வியாழக்கிழமை, டிசம்பர் 12, 2024

ரீ என்ட்ரியில் மொத்தமாக சொதப்பிய 5 ஹிட் ஹீரோஸ்.. மிஸ்கின் புடிச்சுட்டு வந்த பழைய பீஸ்

Director Mysskin: வாய்ப்பு என்பது ஒருமுறை தான் கிடைக்கும், அதை சரியாக உபயோகப்படுத்தி கொண்டு தனக்கான வெற்றியை அடைந்து விட வேண்டும். கிடைத்த வெற்றியை நழுவ விட்டு விட கூடாது என தமிழ் சினிமாவில் எத்தனையோ ஹீரோக்கள் கடுமையாக உழைத்து வருகிறார்கள். இந்த 5 ஹீரோக்கள் முதல் வாய்ப்பில் மிகப்பெரிய அளவில் வெற்றியை தொட்டுவிட்டு, பின்னர் இருக்கும் இடம் தெரியாமல் போயிருக்கிறார்கள். ஏதோ ஒரு அதிர்ஷ்டத்தால் இவர்களுக்கு, இரண்டாவது வாய்ப்பு தேடி வந்தும் அதை சரியாக பயன்படுத்தாமல் சொதப்பியதால் இப்போது மறுபடியும் காணாமல் போய்விட்டார்கள்.

கிடைத்த வாய்ப்பை சொதப்பிய 5 ஹீரோஸ்

‘சித்தப்பு’ சரவணன்: நடிகர் சரவணன் 90 களின் காலகட்டத்தில் நிறைய குடும்ப பின்னணி கதைகளில் நடித்து வெற்றி பெற்றார். இவர் முரளி அளவுக்கு வளர்ந்து வந்திருக்க வேண்டிய நடிகரும் கூட. வாய்ப்புகள் இல்லாமல் காணாமல் போன இவரை பாலா நந்தா படம் மூலம் மீண்டும் நடிக்க வைத்தார். அதன் பின்னரும் வாய்ப்பு இல்லாமல் இருந்த இவரின் சினிமா வாழ்க்கையை, பருத்திவீரன் படத்தின் செவ்வாழை கேரக்டர் மொத்தமாக திருப்பி போட்டது. அப்படியே சப்போர்டிங் கேரக்டரில் தொடர்ந்து நடிக்காமல் ஹீரோ, பிக்பாஸ் ஷோ என சொதப்பி விட்டார்.

செல்வா: இயக்குனர் கஸ்தூரிராஜாவின் ஆத்தா உன் கோவிலிலே படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகம் ஆன செல்வாவுக்கு முதல் படமே 100 நாள் ஓடி பெரிய வெற்றியை கொடுத்தது. தொடர்ந்து 8 வருடங்கள் ஹீரோவாக நடித்த செல்வா அதன் பின்னர் வாய்ப்பு இல்லாமல் ஒதுங்கிவிட்டார். கிட்டத்தட்ட 13 வருடங்கள் களைத்து மிஸ்கின் முகமூடி படத்தில் அவருக்கு வாய்ப்பு கொடுத்தார். பின்னர் கதைகளை சரியாக தேர்வு செய்யாததால் செல்வாவால் சினிமாவில் ஜொலிக்க முடியவில்லை.

Also Read:பெண் ரசிகைகள் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய 6 நடிகர்கள்.. மூன்று முடிச்சால் மொத்தத்தையும் இழந்த பிரசாந்த்

கார்த்திக்: தமிழ் சினிமாவில் ரொம்பவும் கூலான ஹீரோ கார்த்திக் என எல்லோருக்கும் தெரியும். அட! வில்லனா கேரக்டரை கூட இவ்வளவு கூலாக நடிக்கிறார் என அனேகன் படத்தில் ஆச்சரியப்பட வைத்தார். தனுஷ், கார்த்திக் காம்போவில் அந்த படத்தின் காட்சிகளும் வேற லெவலில் இருந்தது. அனேகன் படத்தில் கிடைத்த வரவேற்பை கார்த்தி சரியாக பயன்படுத்த தவறிவிட்டார்.

அரவிந்த் சாமி: வாய்ப்புகளை தவறவிடுவது அரவிந்த்சாமிக்கு ஒன்னும் புதிதல்ல. ரோஜா, பாம்பே என சூப்பர் ஹிட் படங்களை கொடுத்துவிட்டு திடீரென காணாமல் போனார். இயக்குனர் மணிரத்னம் மட்டும் தன்னுடைய ஹீரோவை விட்டு கொடுக்க மனமில்லாமல் அவ்வப்போது வாய்ப்பு கொடுத்து வந்தார். தனிஒருவன் படம் தான் அரவிந்த்சாமிக்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது. ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு இருந்தும் கதை தேர்வுகளில் சொதப்பி மொத்தமாக கெடுத்து கொண்டார்.

ராம்கி: 90ஸ் காலகட்டத்தில் பெண் ரசிகைகள் கொண்டாடிய ஹீரோக்களில் ராம்கியும் ஒருவர். செந்தூர பூவே, இணைந்த கைகள் போன்ற ஹிட் படங்களை கொடுத்த ராம்கி திருமணத்திற்கு பிறகு இருக்கும் இடம் தெரியாமல் போனார். மாசாணி படத்தில் பிளாஷ்பேக்கில் சில காட்சிகளில் மட்டுமே வந்தாலும் பெரிய அளவில் வரவேற்பை பெற்றார். பிரியாணி படத்தில் நெகட்டிவ் ரோலில் நடித்து மீண்டும் கிடைத்த வாய்ப்பை சொதப்பி கொண்டார்.

Also Read:கல்யாணம் பண்ண மாட்டோம்னு வெட்டி சபதம் போட்ட 5 படங்கள்.. ஜொள்ளு விட்டு முதல் ஆளாய் அஜித் பண்ணிய காதல்

- Advertisement -

Trending News