பெண் ரசிகைகள் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய 6 நடிகர்கள்.. மூன்று முடிச்சால் மொத்தத்தையும் இழந்த பிரசாந்த்

Actor Prashanth: கன்னிப்பெண்கள் நெஞ்சுக்குள் கையெழுத்து போட்டவன்,பெண்ணின் பின்னால் சுற்றாமல் பெண்ணே சுற்றும் பேரழகன்… என்ற பாடல் வரிகளை கவிஞர் வைரமுத்து நடிகர் அஜித்குமாருக்காக எழுதி இருப்பார். இந்த பாடல் வரிகள் பொருந்தும் அளவுக்கு தமிழ் சினிமாவில் ஆறு நடிகர்கள் இருந்தார்கள். தமிழ்நாட்டில் இருந்த ஒட்டுமொத்த பெண் ரசிகைகளும் அந்த நடிகர்களை தலையில் தூக்கி வைத்து கொண்டாடினார்கள். அந்த ஆறு ஆணழகன் நடிகர்கள் யார் என்று பார்க்கலாம்.

ரசிகைகள் கொண்டாடிய 6 நடிகர்கள்

மோகன்: நடிகர் மோகன் மைக்கை பிடித்து நடிக்கும் பாடல் காட்சிகளுக்காகவே பெண் ரசிகைகள் திரையை தெறிக்க விட்டிருக்கிறார்கள். இவருடைய நடிப்பில் வெளியான கோபுரங்கள் சாய்வதில்லை, மெல்ல திறந்தது கதவு, இரட்டைவால் குருவி போன்ற படங்கள் பெண் ரசிகைகளால் மட்டுமே மிகப் பெரிய அளவில் கொண்டாடப்பட்டது. ராஜ ராஜ சோழன் நான், எனை ஆளும் காதல் தேசம் நீ என இன்று இந்தப் பாட்டு டிவியில் ஓடினாலும் பழைய நினைவுகளை அசை போடாத 80ஸ் கிட்ஸ் பெண்களே இருக்க மாட்டார்கள்.

கார்த்திக்: பெண் ரசிகைகள் மட்டுமில்லை அந்த காலத்து ஹீரோயின்களே காதலித்த நடிகர் என்றால் அது கார்த்திக் தான். கார்த்திக்கின் அழகான ஹேர் ஸ்டைல், நேர்த்தியான உடை, மெளிதான சிரிப்பு ஒட்டுமொத்த பெண்களையும் திரையரங்கில் கொண்டு வந்து கட்டி வைத்தது என்று தான் சொல்ல வேண்டும். இன்று வரை கார்த்திக்கை நினைக்கும் பொழுது மௌன ராகம் படம் மனோகர் லைப்ரரியில் திவ்யாவிடம் காதலை மைக் போட்டு சொன்னது தான் ஞாபகத்திற்கு வரும்.

ராம்கி: நடிகர் ராம்கியின் ஹேர் ஸ்டைல்க்காகவே பெண்கள் அவர் மீது பித்து பிடித்த அலைந்தார்கள். இன்றுவரை தன்னுடைய கட்டுக்கோப்பான உடலை மெயின்டைன் செய்து வருகிறார். செந்தூரப்பூவே படத்தில் வெள்ளை நிற பேண்ட் சட்டை அணிந்து செந்தூரப்பூவே நீயும் தேர் கொண்டு வா என்ற பாடலுக்கு இவர் செய்த பர்பாமன்ஸுக்கு அந்தப் படத்தின் நடிகை நிரோஷாவே இவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ராம்கியின் திருமண செய்தி தமிழ்நாட்டில் நிறைய பெண்களுக்கு மிகப்பெரிய வருத்தத்தை கொடுத்தது.

Also Read:கல்யாணம் பண்ண மாட்டோம்னு வெட்டி சபதம் போட்ட 5 படங்கள்.. ஜொள்ளு விட்டு முதல் ஆளாய் அஜித் பண்ணிய காதல்

அரவிந்த் சாமி: ரோஜா படம் வெளியாகி 20 ஆண்டுகளுக்கு மேலாகி விட்டது. இன்று வரை தமிழ்நாட்டில் ஒரு ஆண் அழகாக இருக்கிறான் என்று சொல்வதற்கு சொல்லப்படும் உதாரணமே அரவிந்த் சாமியின் பெயர்தான். ரோஜா படத்தில் மதுபாலாவின் அக்காவை பெண்பார்க்க வரும் முதல் சீனிலேயே ஒட்டுமொத்த பெண் ரசிகைகளின் உள்ளத்தையும் களவாடி விட்டார் அரவிந்த்சாமி. 20 வருடங்கள் கழித்து அதே இளமையோடு, அழகோடு தனி ஒருவன் படத்தில் நடித்து தன்னுடைய கெத்து இன்னும் குறையவில்லை என்பதையும் நிரூபித்து விட்டார்.

பிரஷாந்த்: அப்போதைய காலகட்டத்தில் பிரசாந்துடன் நடிக்க வேண்டும் என்றால் நடிகைகள் கதை கூட கேட்க மாட்டார்கள். அந்த அளவுக்கு பெண் ரசிகைகளை மட்டுமில்லாமல் ஹீரோயின்களையும் கவர்ந்தவர் தான் பிரஷாந்த். விஜய் மற்றும் அஜித் அறிமுக ஹீரோக்களாக இருக்கும்போதே பிரசாந்த் முன்னணி ஹீரோவாக இருந்தால். அவர் செய்த திருமணத்தால் வாழ்க்கை போனது மட்டுமில்லாமல் சினிமாவில் இருந்த அதிர்ஷ்டமும் அவருக்கு போய்விட்டது.

மாதவன்: 80ஸ் மற்றும் 90ஸ் கிட்ஸ் பெண்கள் இன்று வரை போட்டி போட்டு விட்டுக்கொடுக்காமல் இருக்கும் நடிகர் மாதவன் தான். இப்போது அவர் எத்தனையோ படங்களில் வித்தியாசமான கேரக்டர்களில் அடித்தாலும் அவருடைய கண்களை பார்க்கும் பொழுது அலைபாயுதே படத்தில் ஷாலினி இடம் சக்தி நீ அழகா இல்ல உன்னை நான் காதலிக்கல ஆனால் இதெல்லாம் நடந்திடுமோ என பயமா இருக்குதுன்னு சொன்ன கார்த்திக் தான் நம் கண்களுக்கு ஞாபகம் வருகிறார்.

Also Read:கண்ணும் கண்ணும் பேசி ரொமான்டிக்கை தெறிக்கவிட்ட விஜய் அஜித்தின் 5 படங்கள்.. ரெண்டு பேரும் வளர்வதற்கு காரணமான காதல்

Sharing Is Caring:

அதிகம் படித்தவை