புதிதாக உருவாகும் 5 வரலாற்றுப் படங்கள்.. 33 வருடங்களுக்குப் பிறகு இணைந்த கமல் – மணிரத்தினம்

5 Historical Movies in Kollywood: பாகுபலி படத்திற்கு பிறகு இந்திய சினிமாவில் நிறைய இயக்குனர்களுக்கு வரலாற்று படங்கள் எடுப்பதற்கு நிறையவே ஆர்வம் அதிகமாகி விட்டது. அதிலும் மணிரத்தினம் பொன்னியின் செல்வன் இயக்கிய பிறகு, தமிழ் சினிமாவில் அடுத்தடுத்து வரலாற்று படங்களை இயக்குவதற்கு இயக்குனர்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள். தமிழ் சினிமாவில் அடுத்தடுத்து புதிதாக உருவாகிக் கொண்டிருக்கும் ஐந்து வரலாற்று படங்களை பற்றி பார்க்கலாம்.

5 வரலாற்றுப் படங்கள்

தங்கலான்: இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில், விக்ரம் மிரட்டி இருக்கும் படம் தான் தங்கலான். இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்பு தங்க சுரங்கத்தில் வேலை செய்த தமிழர்கள் பற்றியும், அந்த இடத்தை ஆங்கிலேயர்கள் கைப்பற்ற நினைத்தபோது பழங்குடி இனத்தைச் சேர்ந்த தங்கலான் அதை எதிர்த்து போராடியதை பற்றியும் ஆன வரலாற்று கதை தான் இந்த படம்.

கங்குவா: நடிகர் சூர்யாவின் நடிப்பில் அடுத்து திரைக்கு வரவிருக்கும் படம் தான் கங்குவா. இயக்குனர் சிறுத்தை சிவா தன்னுடைய ஸ்டைலில் இருந்து முற்றிலும் மாறுபட்டு இயக்கிய படம் தான் இது. தமிழ் உட்பட இந்த படம் கிட்டத்தட்ட பத்து மொழிகளில் ரிலீஸ் ஆக இருக்கிறது. இதுவரை வெளியாகி இருக்கும் இரண்டு போஸ்டர்களை வைத்து பார்க்கும் பொழுது இந்த படம் வரலாற்று கதை மற்றும் நிகழ்காலத்தை இணைத்து எடுக்கப்பட்டிருப்பது தெரிகிறது.

Also Read:பொன்னியின் செல்வனுக்கு வந்த சோதனை..! மணிரத்தினத்திடம் மாட்டிக் கொண்டு முழிக்கும் ஜெயம் ரவி

STR 48: கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தின் வெற்றிக்குப் பிறகு இயக்குனர் தேசிங்கு பெரியசாமி சிம்புவுடன் இணைந்திருக்கிறார். சமீபத்தில் இந்த படத்தின் போஸ்டர் வெளியாகி இருந்தது. ஏற்கனவே இந்த படம் வரலாற்று கதையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது என்று வெளியான செய்தியை உறுதிப்படுத்தும் வகையில் தற்போது அந்த போஸ்டர் வெளியாகி இருக்கிறது. படப்பிடிப்பு பிசியாக நடந்து கொண்டு இருக்கிறது.

தக் லைஃப்: தக் லைஃப் என்னும் வார்த்தை நவீன சமூக வலைத்தளத்தில் பயன்பாட்டில் இருக்கும் போது இது எப்படி வரலாற்று படமாக இருக்க முடியும் என்ற சந்தேகம் எல்லோருக்கும் இருக்கலாம். இந்தியாவில் ஆங்கிலேயரின் ஆட்சியின் போது இந்திய சாலைகளில் பயணிப்போரை கொன்று கொள்ளையடிக்கும் இனத்தை சேர்ந்தவர்களைத்தான் தக் என்று குறிப்பிட்டார்கள். அந்த சமயத்தில் அவர்களைப் பார்த்து பயந்த ஆங்கிலேயர்கள் அந்த இனத்தையே அழிக்க திட்டமிட்டது, பின்னர் நடந்த சம்பவம் தான் இந்த படத்தின் கதையாக இருக்க வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது.

இந்தியன் 2: வர்மக்கலை தெரிந்த சுதந்திரப் போராட்ட தியாகி ஊழலுக்கு எதிராக போராடும் கதையை மையமாகக் கொண்டு 1996 ஆம் ஆண்டு ரிலீசான படம் தான் இந்தியன். இந்த படத்தின் கிளைமாக்சில் அந்த சுதந்திர போராட்ட தியாகி லஞ்சம் வாங்கியதற்காக தன்னுடைய சொந்த மகனையே கொன்று விடுவார். கமல் இரட்டை வேடங்களில் நடித்த இந்த படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி வருகிறது. அந்த சுதந்திரப் போராட்ட தியாகி சேனாதிபதியின் அடுத்த நகர்வை மையமாகக் கொண்டுதான் இந்த கதை அமைக்கப்பட்டிருக்கும்.

Also Read:ஒரே மாதிரியான கதையில் கமிட் ஆகிய சூர்யா.. கைவசம் இருக்கும் 3 படங்கள்

 

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்