5 ஹீரோக்களுக்கு மறுவாழ்வு கொடுத்த இயக்குனர்.. ஏணியை பிடித்து உச்சத்திற்கு வந்த ஆக்சன் கிங்

Action King Arjun: எவ்வளவு பெரிய உச்சத்தில் இருக்கும் ஹீரோக்களுக்கும் ஒரு கட்டத்தில் ஒரு சின்ன சரிவு ஏற்படும். அப்போது அந்த நடிகர்களை தூக்கி விட ஏதாவது ஒரு இயக்குனர் கடவுள் போல் வந்து காப்பாத்தி இருப்பார். அப்படி தமிழ் சினிமாவின் முக்கியமான 5 ஹீரோக்களுக்கு வெற்றி என்னும் மறுவாழ்வை கொடுத்த ஒரே இயக்குனர் ஷங்கர் தான். நல்ல கதைகளின் மூலம் ஷங்கர் தூக்கி விட்ட 5 ஹீரோக்கள் யார் என்று பார்க்கலாம்.

மறுவாழ்வு பெற்ற 5 ஹீரோக்கள்

பிரபுதேவா: பிரபல டான்ஸ் மாஸ்டர் சுந்தரத்தின் மகனாக, பாடல் காட்சிகளில் அப்பாவுக்கு உதவி செய்ய ஆரம்பித்தவர் தான் பிரபுதேவா. பின்னர் கோரியோகிராபராக ஒரு சில படங்களுக்கு பணியாற்றி கொண்டிருக்கும் போது அவருக்கு படங்களில் ஹீரோவாக நடிக்கும் வாய்ப்பும் கிடைத்தது. கிடைக்கின்ற வாய்ப்பை பயன்படுத்தி கொண்டிருந்த பிரபுதேவாவை காதலன் படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அடையாளப்படுத்தினர் இயக்குனர் ஷங்கர்.

பிரஷாந்த்: விஜய் மற்றும் அஜித் வளர்ந்து வந்து கொண்டிருந்த காலத்திலேயே பிரஷாந்த் முன்னணி ஹீரோவாக இருந்தார். தொடர்ந்து காதல் படங்களில் நடித்து கொண்டிருந்த அவருக்கு ஜீன்ஸ் என்னும் பிரம்மாண்ட படத்தின் மூலம் மறுவாழ்வு கொடுத்திருக்கிறார் இயக்குனர் ஷங்கர். ஜீன்ஸ் படத்தில் தன்னால் முடிந்த அளவு பிரம்மாண்டத்தை காட்டியிருந்தார். அந்த படத்தில் இடம்பெற்ற கிராபிக்ஸ் காட்சிகளுக்காகவே அந்த காலத்தில் கொண்டாடப்பட்டது.

Also Read:அர்ஜுன் இயக்கிய லாபமும் நஷ்டமும் அடைந்த படங்கள்.. 60 வயதிலும் லியோ சித்தப்பா செய்யும் அக்கப்போரு!

அர்ஜுன்: அர்ஜுனை மக்கள் ஹீரோவாக ஏற்று கொள்ளவே பல காலம் ஆனது. தன்னுடைய சொந்த தயாரிப்பின் மூலம் நாட்டுப்பற்று சம்மந்தப்பட்ட படங்களை இயக்கி நடித்து ஆக்சன் கிங் என்னும் பெயரை வாங்கினார். ஷங்கர் இயக்கிய ஜென்டில் மேன் படம் தான் அர்ஜுனுக்கு சூப்பர் ஹிட் ஆக அமைந்தது. அடுத்து ஷங்கர் இயக்கதில் அர்ஜுன் நடித்த முதல்வன் படம் தான் அவரை முன்னணி ஹீரோவாக மாற்றியது.

விக்ரம்: இயக்குனர் ஷங்கர் இயக்கதில் விக்ரம் நடித்த பிரம்மாண்ட படம் தான் ஐ. இந்த படம் பொருளாதார ரீதியாக எதிர்பார்த்த வெற்றியை கொடுக்கவில்லை என்றாலும் விக்ரமுக்கு திறமையான நடிகன் என்ற பெயரை வாங்கி கொடுத்தது. ஒரு படத்திலேயே பாடி பில்டர் ஆகவும் உடல் எடையை குறைத்து நோயாளியாகவும் விக்ரம் நடித்து இருந்தது சினிமா ரசிகர்களால் வியப்பாக பார்க்கப்பட்டது.

ரஜினிகாந்த்: பாபா படத்திற்கு பிறகு சந்திரமுகி மூலம் கம்பேக் கொடுத்த ரஜினிக்கு தொடர் வெற்றிப்படம் தேவைப்பட்டது. அந்த சமயத்தில் அவரை காப்பாற்றியது ஷங்கரின் சிவாஜி படம் தான். அதை தொடர்ந்து ரஜினி மற்றும் ஷங்கர் இணைந்து எந்திரன் 2.0 படங்களில் பணிபுரிந்தார்கள். இன்று எத்தனையோ தயாரிப்பாளர்கள் ரஜினி படத்தில் 100 கோடிக்கு மேல் முதலீடு போட காத்திருக்கிறார்கள். ஆனால் அதற்கெல்லாம் பிள்ளையார் சுழி போட்டது இயக்குனர் ஷங்கர் தான்.

Also Read:காந்தி போல உத்தமனாக வாழும் 5 நடிகர்கள்.. இப்பவும் இளமை துள்ளலோடு இருக்கும் ஆக்சன் கிங்