புதன்கிழமை, டிசம்பர் 11, 2024

பிரபுதேவா வளர்வதற்கு காரணமாக அமைந்த 5 படங்கள்.. இந்திய மைக்கேல் ஜாக்சனை வைத்து ஷங்கர் கொடுத்த சூப்பர் ஹிட்

தமிழ் சினிமாவில் நடன இயக்குனராக அனைவரது நெஞ்சங்களையும் கவர்ந்தவர் தான் நடன புயல் பிரபுதேவா. அதிலும் தனது நடனத்தின் மூலம் இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன் என்றே அழைக்கப்படுகிறார். இவர் நடனத்தில் மட்டுமல்லாமல் நடிப்பிலும் தெறித்து விட்டிருப்பார். அப்படியாக சினிமா கேரியரில் பிரபுதேவாவின் முன்னேற்றத்திற்கு அடித்தளமாக அமைந்த 5 படங்களை பற்றி இங்கு பார்க்கலாம்.

காதலன்: சங்கர் இயக்கத்தில் 1994 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் காதலன். இதில் பிரபுதேவா, நக்மா, வடிவேலு, ரகுவரன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். அதிலும் இப்படத்தில் ஒரு காதலன் பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு தனது காதலியை எவ்வாறு கரம் பிடிக்கிறார் என்பதை மையமாக வைத்து இப்படமானது அமைந்துள்ளது. மேலும் இப்படம் சூப்பர் ஹிட் அடித்து வணிக ரீதியாக மாபெரும் வெற்றி பெற்றது.

Also Read: ரப்பர் மனிதனைப் போல் பிரபுதேவா ஆடிய 5 பாடல்கள்.. ஆட்டத்தை பார்த்து மிரண்டு ஹீரோவாக்கிய ஷங்கர்

மின்சார கனவு: இயக்குனர் ராஜீவ்  மேனன் இயக்கத்தில் 1997 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் மின்சார கனவு. இதில் பிரபுதேவா உடன் அரவிந்த்சாமி, கஜோல், நாசர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். அதிலும் இப்படத்தில்  அரவிந்த்சாமியின் வேண்டுகோளுக்கு இணங்க பெண்ணின் மனதை ஆழம் பார்க்க செல்லும் பிரபுதேவா ஒரு கட்டத்தில் காதல் வலையில் சிக்கிக் கொள்கிறார். அதன்பின்னர் நடக்கும் சுவாரஸ்யங்களை மிக அழகாக காட்டும் கதையாக இப்படம் அமைந்துள்ளது. மேலும் இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வணிக ரீதியாக வெற்றி பெற்றது.

நினைவிருக்கும் வரை: இயக்குனர் கே சுபாஷ் இயக்கத்தில் 1999 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் நினைவிருக்கும் வரை. இதில் பிரபுதேவா உடன் கீர்த்தி ரெட்டி, சுஜாதா, விவேக் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். அதிலும் இப்படத்தில் ஏழை குடும்பத்தை சேர்ந்த பிரபுதேவா வசதி வாய்ப்பு படைத்த பெண்ணின் மீது காதல் வயப்படுகிறார். ஆனால் கடைசிவரையிலும் நட்பினை மட்டுமே ஆழமாக வைத்து இப்படமானது அமைந்திருக்கும். மேலும் இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

Also Read: அந்த ஒரே படத்தால் டைரக்சனை கைவிட்ட பிரபு தேவா.. என்னது 100 கோடி நஷ்டமா?

ஏழையின் சிரிப்பில்: கே சுபாஷ் இயக்கத்தில் 2000 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ஏழையின் சிரிப்பில். இதில் பிரபுதேவா உடன் கௌசல்யா, நாசர், அனுமோகன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். அதிலும் இப்படத்தில் பிரபுதேவா, நாசருக்கு விசுவாசம் ஆன ஒரு ஏழை தொழிலாளியாகவும், உழைப்பிற்கு அடையாளமாகவும் இருக்கக்கூடிய வகையில் இப்படம் ஆனது எடுக்கப்பட்டுள்ளது. மேலும் இப்படம் விமர்சன ரீதியாக வெற்றி பெற்றது.

பெண்ணின் மனதை தொட்டு: இயக்குனர் எழில் இயக்கத்தில் 2000 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் பெண்ணின் மனதை தொட்டு. இதில் பிரபுதேவா உடன் ஜெயா சீல், தாமு, ஐஸ்வர்யா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். அதிலும் இப்படத்தில் காதலர்களாக இருக்கக்கூடிய இவர்களுள் தவறான புரிதல் காரணமாக பல்வேறு மன சங்கடங்கள் உண்டாகிறது. பின்னர் அதில் இருக்கும் மனக்கசப்புகளை உணர்ந்து பிறகு இருவரும் ஒன்று சேர்கிறார்கள். மேலும் இப்படம் நேர்மறையான விமர்சனங்களை பெற்றது மட்டுமல்லாமல், வசூல் ரீதியாக மாபெரும் வெற்றி பெற்றது.

Also Read: செல்வராகன் நடிக்க கூப்பிட்டு வர மறுத்த பிரபுதேவா.. மிஸ் பண்ணிட்டோமேன்னு இப்பவும் புலம்பும் சூப்பர் ஹிட் படம்.!

- Advertisement -

Trending News