கடும் குளிரில் எடுக்கப்பட்ட 5 படங்கள்.. காஷ்மீரில் உறைந்த லியோ படக்குழு

ஒரு படம் திரையில் அழகாக காட்ட பின்னால் பல பேரின் கடின உழைப்பு இருக்கிறது. ஆனால் அவர்களுக்குப் பாராட்டு, ரசிகர்களிடம் அங்கீகாரம் கிடைத்ததில்லை. இந்நிலையில் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் சில படங்கள் எடுக்கப்பட்டுள்ளது. அந்த படங்கள் என்ன என்பதை தற்போது பார்க்கலாம்.

ஆளவந்தான் : கமல் இரட்டை வேடத்தில் நடித்து வெளியான திரைப்படம் ஆளவந்தான். இந்த படத்தில் அவரது வித்தியாசமான தோற்றம் ரசிகர்களை பிரமிக்க செய்தது. இந்த படத்தில் பெரும்பான்மையான காட்சிகள் காஷ்மீரில் கடும் குளிரில் எடுக்கப்பட்ட இருந்ததாம்.

Also Read : கஜானாவை திறக்காமலே படத்தை தயாரிக்கும் கமல்.. ராஜதந்திரியாக மாறிய உலக நாயகன்

விவேகம் : அஜித், சிறுத்தை சிவா கூட்டணியில் வெளியான திரைப்படம் விவேகம். இந்த படத்தில் சில காட்சிகள் பல்கேரியாவில் மைனஸ் டிகிரி குளிரில் படமாக்கப்பட்டு இருந்தது. அந்தக் காட்சியை படமாக விவேகம் படக்குழு மிகுந்த சிரமம் பட்டதாக அப்போது தகவல் வெளியானது.

காற்று வெளியிடை : கார்த்தி நடிப்பில் மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான திரைப்படம் காற்று வெளியிடை. இந்த படத்தில் கார்த்தி விமானப்படை அதிகாரியாக நடித்திருந்தார். மேலும் இதில் பல காட்சிகள் காஷ்மீரில் எடுக்கப்பட்டிருந்தது. அதுவும் குளிர்காலத்தில் எடுக்கப்பட்டதால் படக்குழு மிகுந்த அவதிப்பட்டு உள்ளனர்.

Also Read : மீண்டும் சிவகார்த்திகேயனை டார்கெட் செய்யும் கார்த்தி.. ஒதுங்கி போனாலும் விடாத தொல்லை

கோப்ரா : அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான திரைப்படம் கோப்ரா. இந்தப் படத்தின் படப்பிடிப்பு மைனஸ் 18 டிகிரி செல்சியஸில் ரஷ்யாவில் படமாக்கப்பட்டு இருந்தது. அந்த அளவுக்கு படத்தில் பல விஷயங்களை மெனக்கெட்ட செய்தாலும் ரசிகர்கள் இடம் வரவேற்பு பெறவில்லை.

லியோ : லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் லியோ படத்தின் சில காட்சிகள் காஷ்மீரில் படமாக்கப்பட்டுள்ளது. அங்கு உரையும் பனியில் டெக்னீசியன்கள் எப்படி வேலை பார்த்தார்கள் என்பதை தயாரிப்பு நிறுவனம் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தது.

Also Read : உறைய வைக்கும் பனியிலும் உழைத்த டெக்னீசியன்கள்.. வீடியோ வெளியிட்டு மரியாதை செய்த லியோ டீம்

Next Story

- Advertisement -