Videos | வீடியோக்கள்
உறைய வைக்கும் பனியிலும் உழைத்த டெக்னீசியன்கள்.. வீடியோ வெளியிட்டு மரியாதை செய்த லியோ டீம்
படத்தில் கடுமையாக உழைத்த சக தொழிலாளர்களுக்கு மரியாதை செய்யும் வகையில் பட குழு வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் லியோ திரைப்படம் விறுவிறுப்பாக உருவாகி கொண்டு இருக்கிறது. தற்போது காஷ்மீரில் சூட்டிங் நடைபெற்று வரும் இந்த படத்தில் இருந்து அவ்வப்போது போட்டோக்களும், வீடியோக்களும் வெளிவந்து ரசிகர்களை உற்சாகப்படுத்திக் கொண்டிருக்கிறது. அந்த வகையில் தற்போது வெளியாகி இருக்கும் ஒரு வீடியோ பலரையும் ஆச்சரியப்படுத்தி இருக்கிறது.
அதாவது காஷ்மீரில் கடும் குளிர் வாட்டி வதைப்பது அனைவருக்கும் தெரியும். அதிலும் மைனஸ் டிகிரி குளிரில் பட குழுவினர் மிகவும் கஷ்டப்பட்டு படப்பிடிப்பை நடத்தி வருகின்றனர். அதில் காய்ச்சல் போன்ற பல உடல் உபாதைகள் ஏற்பட்டாலும் அனைத்தையும் தாண்டி இந்த படப்பிடிப்பு வேகமாக நடைபெற்று வருகிறது.
Also read: பதற வைத்த நிலநடுக்கம், லியோ டீம் எப்படி இருக்கு? தயாரிப்பாளர் போட்ட ட்வீட்
இது பற்றி படத்தில் நடித்திருந்த இயக்குனர் மிஷ்கின் கூட மிகவும் புகழ்ந்து பேசி இருந்தார். அவை அனைத்தும் ரொம்பவும் மிகைப்படுத்தி பேசியதாகவே அனைவருக்கும் தெரிந்தது. ஆனால் அவர் கூறியது எந்த அளவுக்கு உண்மை என்று தற்போது வெளியாகி இருக்கும் வீடியோ நமக்கு வெளிச்சம் போட்டு காட்டி இருக்கிறது.
அந்த வகையில் படத்தில் கடுமையாக உழைத்த சக தொழிலாளர்களுக்கு மரியாதை செய்யும் வகையில் பட குழு வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறது. அதில் உறைய வைக்கும் குளிரில் ஒவ்வொருவரும் எப்படி கஷ்டப்பட்டு வேலைகளை செய்கிறார்கள் என்பது காட்டப்பட்டிருக்கிறது. அதிலும் ஒருவர் அதிகப்படியான குளிரால் மூக்கில் இருந்து கூட ரத்தம் வரும் என்று கூறியது ரசிகர்களை மிரள வைக்கிறது.
Also read: லோகேஷுக்கு வலை விரித்து இருக்கும் 3 ஸ்டார்கள்.. 50 கோடியுடன் காத்திருக்கும் பாலிவுட் நடிகர்
அதைத்தொடர்ந்து ஒரு கேப்டனாக லோகேஷ் எப்படி அனைவரையும் வழிநடத்துகிறார் என்பதும் விஜய் சக பணியாளர்களிடம் எப்படி கலந்துரையாடுகிறார் என்பதும் காட்டப்படுகிறது. இதுவே படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க வைத்துள்ளது. ஏற்கனவே லியோ திரைப்படம் சோசியல் மீடியாவை கடந்த சில மாதங்களாக ஆட்டிப்படைத்து வருகிறது.
அதில் ஒவ்வொரு நாளும் புது புது அப்டேட்டுகள் வெளிவந்து திரையுலகையே கதி கலங்க வைக்கிறது. அந்த வகையில் லியோ திரைப்படத்திற்கு பின்னால் இத்தனை பேர் உழைத்திருப்பது பாராட்டுகளையும் பெற்று வருகிறது. இதன் மூலம் படம் நிச்சயம் வேற லெவலில் கலக்கும் என்றும் ரசிகர்கள் ஆர்ப்பரித்து வருகின்றனர்.
