அடுத்த வாரம் வசூல் வேட்டைக்கு தயாரான 5 படங்கள்.. ஜெயிலரால் வாழ்வா சாவா என்ற நிலையில் தயாரிப்பாளர்

சினிமா வியாபார நோக்குக்காக எடுக்கப்படுகிறது என்றாலும் ரசிகர்களின் ரசனைக்கு ஏற்ப கொடுத்தால் இன்னும் சற்று கூடுதல் வெற்றியடைகிறது. அதிலும் விடுமுறை நாட்களை கருத்தில் கொண்டு வியாழன், வெள்ளி போன்ற நாட்களில் தான் படம் ரிலீஸ் ஆகிறது. அந்த வகையில் அடுத்த வாரம் வசூல் வேட்டைக்கு தயாரான 5 படங்களை இப்போது பார்க்கலாம்.

கதர் 2 : 2001 ஆம் ஆண்டு கதர் படத்தின் முதல் பாகம் வெளியான நிலையில் இப்போது இரண்டாம் பாகம் உருவாகி இருக்கிறது. போனி கபூரின் ஜி ஸ்டூடியோஸ் இந்த படத்தை தயாரித்து இருக்கிறது. அனில் ஷர்மா இந்த படத்தை இயக்கி உள்ளார். சன்னி தியோல், அமீஷா படேல் மற்றும் உத்கர்ஷ் ஷர்மா ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ள நிலையில் வருகின்ற ஆகஸ்ட் 11ஆம் தேதி திரையரங்குகளில் இப்படம் வெளியாக இருக்கிறது.

Also Read: ஜெயிலர் ரிலீஸ் வைத்து அக்கப்போர் பண்ணும் பிரபல நிறுவனம்.. இப்படி எல்லாம் ஒரு விளம்பரம் தேவையா!

OMG2 : கதர் 2 படத்தை தொடர்ந்து மற்றொரு படமும் ஆகஸ்ட் 11ஆம் தேதி பாலிவுட்டில் வெளியாகிறது. 2012 ஆம் ஆண்டு ஓ மை காட் என்ற படம் வெளியாகி இருந்தது. இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை தற்போது எடுத்துள்ளனர். காமெடி ஜானரில் எடுக்கப்பட்டுள்ள இப்படத்தை அமித் ராய் இயக்கியுள்ளார். அக்ஷய் குமார், பங்கஜ் திரிபாதி, யாமி கெளதம் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.

போலா ஷங்கர் : சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடிப்பில் 2015 ஆம் ஆண்டு வெளியான வேதாளம் படத்தின் ரீமேக் தான் போலா ஷங்கர். தெலுங்கில் உருவாகி இருக்கும் இப்படத்தை மெஹர் ரமேஷ் இயக்கி இருக்கிறார். இப்படத்தில் சிரஞ்சீவி, கீர்த்தி சுரேஷ் மற்றும் தமன்னா ஆகியோர் நடித்துள்ள நிலையில் ஆகஸ்ட் 11ஆம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.

Also Read: அடிமாட்டு விலைக்கு விற்கப்பட்ட ஜெயிலர் உரிமம்.. 5 மடங்கு நஷ்டத்தை சந்திக்கும் கலாநிதி மாறன்

ஜெயிலர் : நெல்சன் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினி நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ஜெயிலர். மேலும் மற்ற மொழியில் உள்ள பிரபலங்களும் இப்படத்தில் இணைந்துள்ளார்கள். இந்த வருடத்தில் ரசிகர்கள் மிகவும் எதிர்பார்க்கும் படங்களில் இப்படமும் ஒன்று. இந்நிலையில் வருகின்ற வியாழக்கிழமை ஆகஸ்ட் 10 ஆம் தேதி ஜெயிலர் படம் தியேட்டரில் வெளியாக இருக்கிறது.

ஜெயிலர் : தமிழில் ரஜினியின் ஜெயிலர் டைட்டில் போல் மலையாளத்தில் ஜெயிலர் என்ற பெயரில் ஒரு படம் உருவாகி இருக்கிறது. சக்கீர் மடத்தில் இயக்கத்தில் தியான் ஸ்ரீனிவாசன் இந்த படத்தில் நடித்திருக்கிறார். இதில் என்ன சிக்கல் என்றால் இந்த படமும் ஆகஸ்ட் 10ஆம் தேதி தான் வெளியாகிறது. தனது சொத்து எல்லாவற்றையும் விற்று தான் இந்த படத்தை தயாரிப்பாளர் எடுத்துள்ளார் என்று கூறியதால் வாழ்வா சாவா என்ற பயத்தில் இருக்கிறார்.

Also Read: ஜெயிலர் படத்தை ஒரு வழி பண்ணிட்டு தான் விடுவாங்க போல.. விஜய், அஜித் பேரை சொல்லி சுத்தலில் விடப்பட்ட நெல்சன்

Next Story

- Advertisement -