அடிமாட்டு விலைக்கு விற்கப்பட்ட ஜெயிலர் உரிமம்.. 5 மடங்கு நஷ்டத்தை சந்திக்கும் கலாநிதி மாறன்

Jailer: சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் நடித்துள்ள ஜெயிலர் படம் அடுத்த வாரம் திரையரங்குகளை அலங்கரிக்க இருக்கிறது. அதற்கான டிக்கெட் புக்கிங் அசுர வேகத்தில் சென்று கொண்டிருக்கும் நிலையில் இப்படம் ஐந்து மடங்கு நஷ்டத்தை சந்தித்திருப்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அந்த வகையில் ரஜினிக்கு இந்தியாவில் மட்டுமல்லாமல் வெளிநாடுகளிலும் ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். இங்கு இவருடைய படத்தின் ரிலீஸ் நாளை எப்படி ரசிகர்கள் கோலாகலமாக கொண்டாடுகிறார்களோ அதே போல் மலேசியாவிலும் ரஜினி படம் திருவிழா போல் கொண்டாடப்படும்.

Also read: விஜய்க்கு செய்யாததை ரஜினிக்காக செய்த அனிருத்.. ஹைப்பை ஏற்றிய ஜெயிலர்

அதன் காரணமாகவே வெளிநாடுகளிலும் ரஜினியின் படங்கள் நல்ல விலைக்கு விற்பனையாகும். ஆனால் இந்த முறை அதில் கடும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதாவது ரஜினியின் படத்தை வழக்கமாக வாங்கும் வெளிநாட்டு விநியோகஸ்தர் மாலிக் இந்த முறை ஜெயிலரின் உரிமையை ஆறு கோடிக்கு விலை பேசி இருந்தார்.

இவர் ஒரு லாபகரமான விநியோகஸ்தர் என்பதால் பொதுவாக ரஜினி பட உரிமம் இவருக்கு தான் கிடைக்கும். ஆனால் இப்போது இவருக்கே பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதாவது தற்போது அமலாக்கத்துறை பிரச்சினையை சந்தித்து வரும் இவரால் ரஜினி படத்தை வாங்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

Also read: ஜெயிலர் படத்தை ஒரு வழி பண்ணிட்டு தான் விடுவாங்க போல.. விஜய், அஜித் பேரை சொல்லி சுத்தலில் விடப்பட்ட நெல்சன்

ஏனென்றால் தற்போது பணப்புழக்கம் செய்ய முடியாத சிக்கலில் அவர் மாட்டிக் கொண்டுள்ளார். இவரை தவிர மலேசியாவில் சொல்லிக்கொள்ளும்படியான விநியோகஸ்தர்கள் கிடையாது. இதனால் என்ன செய்வது என்று யோசித்த சன் பிக்சர்ஸ் தற்போது லோட்டஸ் நிறுவனத்திற்கு ஜெயிலர் பட உரிமத்தை வெறும் ஒரு கோடி ரூபாய்க்கு விற்றுள்ளது.

இந்த நிறுவனம் தமிழில் முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு படத்தை தயாரித்திருந்தது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் ரிலீஸுக்கு முன்பே கலாநிதி மாறன் மலேசியாவில் இப்படி ஒரு நஷ்டத்தை சந்தித்திருக்கிறார். மேலும் அடி மாட்டு விலைக்கு விற்பனையாகி இருந்தாலும் படம் வெளி வந்தால் பல மடங்கு கலெக்சனை தட்டி தூக்கி விடலாம் என சன் பிக்சர்ஸ் நம்பிக்கையுடன் காத்துக் கொண்டிருக்கிறது.

Also read: 500 கோடி கொடுத்தாலும் உன் படத்துல நடிக்க முடியாது.. ஜெயிலர் மீது செம கடுப்பில் இருக்கும் விஜய்

 

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்