நக்கல் அடித்து மனதை காயப்படுத்தும் 5 இயக்குனர்கள்.. சக நடிகர்களை கலாய்த்து தள்ளும் மிஸ்கின்

Five Directors: பொதுவாக இயக்குனர் என்றால் சீரியஸ் ஆகவும், வேலையை கடுகடுவென்று தான் பார்ப்பார்கள் என்று அனைவரும் சொல்வதை நாம் கேள்விப்பட்டிருப்போம். இவர்களுக்கு மத்தியில் சில இயக்குனர்கள் ரொம்பவே ஜாலியாக கலகலப்பாக இருந்திருக்கிறார்கள். ஆனால் இவர்களுடைய ஜாலி மற்றவர்களை அதிகமாக காயப்படுத்தும் அளவிற்கு இருந்திருக்கிறது அப்படிப்பட்ட இயக்குனர்கள் யார் என்பதை பார்க்கலாம்.

ஆர் சுந்தர்ராஜன்: இவர் பல படங்களில் குணச்சித்திர நடிகராகவும், காமெடியனாகவும் நன்கு அறியப்பட்டவர். மேலும் இவர் பல படங்களை இயக்கி வெற்றியை கொடுத்திருக்கிறார். முக்கியமாக இவர் இயக்கிய படங்கள் வெள்ளிவிழா கண்ட படமாகவும் வந்திருக்கிறது. அப்படிப்பட்ட இவர் படபிடிப்பின் போது வேலை செய்பவர்களை கலாய்ப்பதும், அவர்களின் மனதை புண்படுத்தும் விதமாக அமைந்திருக்கிறது

Also read: பெயர் சொல்லாமல் மனதில் நின்ற 5 கதாபாத்திரங்கள்.. ரஜினியை வைத்து கே எஸ் ரவிக்குமார் வைத்த ட்விஸ்ட்

மணிவண்ணன்: இவர் எந்த அளவிற்கு காமெடியனாக மக்கள் மத்தியில் இடம் பெற்றாரோ, அதே அளவிற்கு நல்ல இயக்குனராகவும் பல வெற்றி படங்களை கொடுத்திருக்கிறார். முக்கியமாக அரசியல்வாதிகளின் நடவடிக்கைகளை மக்களுக்கு காட்டும் விதமாக பல படங்களை இயக்கியிருக்கிறார். அப்படிப்பட்ட இவர் சூட்டிங் ஸ்பாட்டில் கலகலப்பாக  இருந்திருக்கிறார். ஆனால் இவருடைய வில்லங்கத்தனமான பேச்சு மற்றவர்களின் மனதை காயப்படுத்தி இருக்கிறது.

கே எஸ் ரவிக்குமார்: கமர்சியல் இயக்குனர் என்றால் கே எஸ் ரவிக்குமார் தான் என்று சொல்லும் அளவிற்கு பேர் வாங்கி இருக்கிறார். மேலும் இவர் எடுக்கக்கூடிய படங்கள் குடும்பத்துடன் பார்த்து அவருடைய பொழுதுபோக்கை கழிக்கும் விதமாக தரமான படத்தை எடுக்கக் கூடியவர். அப்படிப்பட்ட இவருடைய உண்மையான குணமே ஜாலியாக நக்கல் அடித்து பேசுவது, மற்றவர்களை கலாய்த்து லொள்ளு பண்ணுவது போன்றவைகளை செய்து மற்றவர்கள் வருத்தப்படும் அளவிற்கு இருந்திருக்கிறது.

Also read: படப்பிடிப்பில் அதிக பிரசிங்கித்தனமாக செய்த மிஷ்கின்.. ஹீரோக்களை காக்கா பிடித்த மட்டமான வேலை

மிஷ்கின்: இவர் எடுக்கக்கூடிய படங்கள் புரியாத புதிராகவும், வித்தியாசமாகவும், உன்னிப்பாக கவனித்தால் மட்டுமே புரியும் என்ற வகையில் படத்தை எடுக்கக் கூடியவர். அப்படிப்பட்ட இவருடைய பேச்சு கொஞ்சம் அடாவடித்தனமாக இருக்கும். அதாவது எல்லாரையும் கேலியும் கிண்டலும் செய்வது. பாரபட்சமே இல்லாமல் அவர்களை கலாய்ப்பது போன்ற விஷயங்களை செய்யக் கூடியவர். ஆனால் இவருடைய பேச்சால் மற்றவர்கள் ரொம்பவே நொறுங்கிப் போய் கஷ்டப்படும் அளவிற்கு வேதனையை உண்டாக்கி இருக்கிறது.

வெங்கட் பிரபு: பல சீரியசான இயக்குனர்களுக்கு மத்தியில் இவருடைய நடவடிக்கைகள் சற்று வித்தியாசமாக இருக்கும். அதாவது படங்களை இயக்கும் நேரத்தில் மட்டும் ஒரு இயக்குனராக இருந்துட்டு, அதன் பின் அங்கு இருக்கும் ஆர்டிஸ்டிகளிடம் சக கலைஞராக இறங்கி ஜாலியாக நக்கல் அடித்து ஒரு என்டர்டைன்மென்ட் செய்யக் கூடியவர். ஆனால் இவருடைய நக்கலான பேச்சு பலருக்கும் மன வருத்தத்தை கொடுத்திருக்கிறது.

Also read: அழகர், பரமனை ஞாபகப்படுத்திய வெங்கட் பிரபு.. 15 வருடம் ஆட்டிப்படைத்த படம், சசிகுமாருக்கு கொடுத்த பரிசு

Next Story

- Advertisement -