2022 இல் பெரிய அளவில் பேசப்பட்ட 5 இயக்குனர்கள்.. இளைஞர்கள் மனதில் இடம் பிடித்த லவ் டுடே பிரதீப்

இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்தே பல படங்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. படத்தின் மாபெரும் வெற்றியால் அந்த பட இயக்குனரை பற்றி ரசிகர்கள் பெரிய அளவில் பேசியுள்ளனர். அவ்வாறு 2022-ல் மிகவும் பிரபலமான 5 இயக்குனர்களை பார்க்கலாம்.

பிரசாந்த் நீல் : இந்த ஆண்டு கே ஜி எஃப் 2 படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகி இருந்தது. இப்படத்தை பிரசாந்த் நீல் இயக்கியிருந்தார். கன்னட மொழியில் வெளியான இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வசூல் சாதனை படைத்தது. அதே சமயத்தில் தளபதி விஜயின் பீஸ்ட் படத்தை கே ஜி எஃப் 2 படம் காலி செய்தது.

Also Read : ரத்தன் டாடா சூர்யா இல்லையா.. அதிர்ச்சி தகவலை கூறிய கே ஜி எஃப் பட நிறுவனம்

மணிரத்தினம் : மக்கள் மத்தியில் அதிகம் பேசப்பட்ட படம் பொன்னியின் செல்வன். இப்படத்தை தனது கனவாக நினைத்து எடுத்த முடித்துள்ளார் மணிரத்தினம். அதேபோல் படம் வெளியாகி ஏகபோக வரவேற்பை பெற்றது. மேலும் பொன்னியின் செல்வன் 2 அடுத்த ஆண்டு வெளியாக உள்ளது.

எச் வினோத் : எச் வினோத்தின் வலிமை படம் இந்த ஆண்டு தொடக்கத்தில் வெளியானது. இந்நிலையில் அஜித்துடன் மீண்டும் கூட்டணி சேர்ந்து துணிவு படத்தை எடுத்துள்ளார். இந்த படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாக உள்ளது. வினோத் கமலுடன் இணைய உள்ளதாக இணையத்தில் செய்திகள் வெளியாகி வருகிறது.

Also Read : கமலும் இல்லை, விஜய் சேதுபதியும் இல்லை.. டாப் ஆக்டரை பிடித்த வினோத்

லோகேஷ் கனகராஜ் : விக்ரம் படம் மூலம் உலக சினமாவையே திரும்பி பார்க்க வைத்தவர் லோகேஷ் கனகராஜ். இவருடைய அடுத்த படத்தை பற்றி இப்போது இணையத்தில் அதிகம் பேசப்பட்டு வருகிறது. விஜய் உடன் இணைந்து தளபதி 67 படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க இருக்கிறார்.

பிரதீப் ரங்கநாதன் : லேட்டா வந்தாலும் லேட்டஸ்டாக வருவேன் என்று ரஜினி பட வசனம் போல இந்த ஆண்டு இறுதியில் வெளியான லவ் டுடே படத்தின் மூலம் உச்சாணி கொம்புக்கே சென்று உள்ளார் பிரதீப் ரங்கநாதன். இப்போது இணையத்தில் இவரை பற்றிய செய்தி தான் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

Also Read : ஹீரோவாக பிரதீப்பிற்கு குவியும் பட வாய்ப்பு.. சம்பளத்தை கேட்டு பின்னங்கால் பிடரியில் அடித்து ஓடிய தயாரிப்பாளர்

Next Story

- Advertisement -