வெள்ளிக்கிழமை, டிசம்பர் 13, 2024

சர்ச்சைக்குரிய கில்மா படங்களை எடுத்து காணாமல் போன 5 இயக்குனர்கள்.. முகம் சுளிக்க வைத்த வேலு பிரபாகரன்

Controversial Movie Directors: சினிமாவில் வித்தியாசம் காட்ட வேண்டும் என்ற நோக்கத்தில் எந்தவித ஒழிவும் மறைவும் இல்லாமல் சர்ச்சைக்குரிய படங்களை எடுத்து கில்மா இயக்குனர்கள் என 5 டைரக்டர்ஸ் பெயர் எடுத்து விட்டனர். அதிலும் 80களிலேயே இப்படிப்பட்ட கில்மா படங்களை இயக்கி இயக்குனர் வேலு பிரபாகரன் ரசிகர்களை முகம் சுளிக்க வைத்தார்.

சாமி: சாமி என பவ்வியமாக பெயரை வைத்துக் கொண்டு இந்த இயக்குனர் எடுக்கும் படங்களை எல்லாம் பார்த்தால், இவரை ஆசாமி என்று தான் சொல்லத் தோன்றும். அந்த அளவிற்கு சர்ச்சைக்குரிய காட்சிகளை வைத்து படம் ஆக்கி இருக்கிறார். அதிலும் இவருடைய இயக்கத்தில் ஆதி நடிப்பில் வெளியான மிருகம் என்ற படத்தில் மனைவியை கொடூரமாக கையாளக்கூடிய கணவரை காட்டியிருப்பார்கள். என்ன தான் இந்த படத்தில் எய்ட்ஸ் விழிப்புணர்வை ஏற்படுத்த நினைத்தாலும் அந்தரங்க காட்சிகளை எல்லை மீறி காட்டினர்.

இதன் தொடர்ச்சியாக இவருடைய இயக்கத்தில் வெளியான சிந்து சமவெளி படத்தில் நடிகை அமலாபால் கதாநாயகியாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். இதில் கணவரை விட்டுவிட்டு மாமனார் உடன் மருமகள் அந்தரங்க உறவில் ஈடுபடுவது போல் படத்தில் காட்டி பெரும் சர்ச்சையை கிளப்பினார். இது போன்ற படங்களை பார்க்கும் போது உறவுகளின் மீதான பிடிப்பு குறைந்துவிடும். ஆனால் அதையெல்லாம் புரிந்து கொள்ளாமல் கில்மா படங்களையே தொடர்ந்து இயக்கிய சாமி இப்போது இருக்கிற இடம் தெரியாமல் காணாமல் போய்விட்டார்.

Also Read: ஓடிடி மட்டுமே குறிவைக்கும் 5 நடிகைகள்.. கிளாமர் காட்டியே பெத்த லாபம் பார்த்த ரெண்டு மில்க் பியூட்டிஸ்

சந்தோஷ் பி ஜெயக்குமார்: அடல்ட் படமான இருட்டு அறையில் முரட்டு குத்து முதல் பாகத்தை மட்டுமல்ல, இரண்டாம் பாகத்தையும் இயக்கிய இயக்குனர் தான் சந்தோஷ் பி ஜெயக்குமார். இவர்தான் ஹர ஹர மஹாதேவகி என்ற ஏ சான்றிதழ் பெற்ற படத்தையும் இயக்கியவர். இப்படி தேடித்தேடி கில்மா படங்களை மட்டுமே இயக்கிக் கொண்டிருந்த டைரக்டர் ஆன இவர், இப்போது இருக்கிற இடம் தெரியாமல் காணாமல் போய்விட்டார்.

காரணம் இப்படி போன்ற படங்களை ஒரு சிலருக்கு மட்டுமே பிடிக்கும், ஆனால் பெரும்பான்மையானவர்கள் இது போன்ற படங்களை திரையரங்கில் பார்ப்பதை அருவருப்பாக நினைப்பார்கள். அதிலும் இயக்குனர் சந்தோஷ் பி ஜெயக்குமார் இப்போது கில்மா பட இயக்குனர் என முத்திரை குத்தப்பட்டு ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளார்.
ஏனென்றால் அந்த அளவிற்கு இவருடைய படங்களில் அந்தரங்க காட்சிகளுக்கும், லிப் லாக் காட்சிகளுக்கும் பஞ்சம் இல்லாமல் இருக்கும். அதிலும் இவர் படத்தில் நடிக்கும் நடிகர்களை எல்லாம் படுக்கையறை காட்சிகளில் போட்டு புரட்டி எடுத்து விடுவார். இதனால் தான் இவருடைய படத்தை குடும்ப ஆடியன்ஸ்கள் வெறுத்து ஒதுக்குகின்றனர்.

Also Read: சம்பளம் கிடைச்சா போதும்னு மட்டமான கவர்ச்சி படங்களில் நடிக்கும் 5 நடிகைகள்.. முகம் சுளிக்க வைக்கும் விவாகரத்து நடிகை

ஆதிக் ரவிச்சந்திரன்: வரும் செப்டம்பர் 15 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் விஷாலின் மார்க் ஆண்டனி படத்தை இயக்கிய ஆதி ரவிச்சந்திரன் இதற்கு முன்பு ஜிவி பிரகாஷ், கயல் ஆனந்தி நடிப்பில் வெளியான ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’ என்ற சர்ச்சைக்குரிய படத்தை இயக்கினார். இந்த படத்தில் ஒரு இளைஞன் இரண்டு பெண்களை காதலிப்பது போன்றும் ஒரு காதலி இருந்தால் ஓகே, இரண்டு காதலி இருந்தால் டபுள் ஓகே என்ற கான்செப்டில் படத்தை எடுத்து பெரும் சர்ச்சையை கிளப்பினார்கள். அதுமட்டுமல்ல இந்த படத்தில் ஆபாசமான வார்த்தைக்கும் பஞ்சம் இல்லாமல் இருக்கும்.

அனிதா உதீப்: இப்போது கயல் சீரியல் கதாநாயகனாக இருக்கும் சஞ்சீவ் ஹீரோவாக நடித்து வெளியான படம் தான் குளிர் 100 டிகிரி. இந்த படத்தை பெண் இயக்குனரான அனிதா உதீப் திரைக்கதை எழுதி, இயக்கி, தயாரித்தார். அறிமுக இயக்குனராக இந்த படத்தை முதன்முதலாக இயக்கி தமிழ் சினிமாவிற்கு என்ட்ரி கொடுத்த இவர், அதன் பின் கடந்த 2019 ஆம் ஆண்டு 90ml என்ற சர்ச்சைக்குரிய படத்தை இயக்கினார். இந்த படத்திற்கு ஏ சான்றிதழ் கிடைத்த போதிலும் இதற்கு முன்பு வெளியான அடல்ட் படங்களான இருட்டு அறையில் முரட்டு குத்து, ஹர ஹர மகாதேவகி உள்ளிட்ட படங்களை எல்லாம் தூக்கி சாப்பிடும் அளவுக்கு இருந்தது.

ஏனென்றால் அந்த வகையில் இந்த படத்தில் இடம்பெற்ற காட்சிகளும் வசனங்களும் அந்தரங்க விஷயத்தைப் பற்றிய மையமாக வைத்து உருவாக்கப்பட்டு பார்ப்போருக்கு போதை ஏற்றும் அளவுக்கு இருந்தது. அதிலும் இதில் பெண் சுதந்திரம் என்றதும் அவர்கள் மது அருந்துவது, யாரிடம் வேண்டுமானாலும் உறவு வைத்துக் கொள்வது என்பது போன்ற காட்சிகளை இந்த படத்தில் இடம் பெற்றிருக்கும். அத்துடன் இதில் ஒரு பெண் தனது அந்தரங்க உறவை யாருடன் வேண்டுமானாலும் வைத்துக் கொள்வது, அவருடைய விருப்பம் என்பதை இயக்குனர் ஆணித்தரமாக சொன்னார். இதில் ஓவியா கதாநாயகியாக அந்த சர்ச்சைக்குரிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

Also Read: வித்தியாசமான காரணங்களால் ஒதுக்கப்பட்ட 5 நடிகைகள்.. உலகநாயகன் மகளுக்கு இப்படி ஒரு அசிங்கமா?

வேலு பிரபாகரன்: தயாரிப்பாளர், ஒளிப்பதிவாளர், நடிகர் என பல பரிணாமங்களை கொண்ட இயக்குனரான வேலு பிரபாகரன் சர்ச்சைக்குரிய விஷயங்களை கருப்பொருளாக கொண்டு படங்களை இயக்கி பெரிதும் விமர்சிக்கப்பட்டார். இவர் இயக்கிய நாளைய பொழுது உன்னோடு, காதல் கதை, பதினாறு, ஒரு இயக்குனரின் காதல் டைரி போன்ற படங்களில் எல்லாம் பெரும்பாலும் நாத்திகம் மற்றும் புரட்சிகர செய்திகள் முன் வைக்கப்பட்டிருக்கும்.

அதிலும் இந்த படங்களில் நடைமுறையில் உள்ள சாதி முறைகளையும் எடுத்துக்காட்டி, அந்தரங்கம் தொடர்பான கருத்துக்களையும் ஆராயும் வகையில் பேசினார். இதனால் இவர் இயக்கிய படங்களை வெளியிடுவதற்கான சான்றிதழை வழங்க தணிக்கையாளர்கள் தயாராக இல்லை. இதனால் கடந்த 2004 ல் தணிக்கை வாரியத்துடன் பெரும் வாக்குவாதமே நடந்தது. இவருடைய படத்தை வெளியிடக் கூடாது என தடை விதித்தனர்.

அதன் பின் இவர் இளைஞர்களுக்கு அந்தரங்க விஷயத்தை பற்றிய கல்வி முக்கியம் என்றும் செய்தியாளர் கூட்டத்தில் ஓர் உணர்ச்சிபூர்வமான வேண்டுகோளை விடுத்தார். பின் தணிக்கை குழுவிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமரசம் செய்து கொண்ட பின்பு, காதல் அரங்கம் என்று வைக்கப்பட்டிருந்த படத்தின் டைட்டிலை காதல் கதை என்று மாற்றி வெளியிட்டார். அதிலும் இந்த படத்தில் ஆடை இல்லாமல் இருக்கும் காட்சி, குழந்தைப் பிறப்பை சித்தரிக்கும் காட்சிகளையும் தத்ரூபமாக காட்டியதால் படத்தை பார்ப்போரை முகம் சுளிக்க வைத்தது.

- Advertisement -

Trending News