ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 15, 2024

ரீல் ஜோடியில் இருந்து ரியல் ஜோடியாக மாறிய 5 தம்பதிகள்.. கேரியரை சோழி முடித்த பாபி சிம்ஹா

Real Couple Actor Actress: சினிமாவைப் பொறுத்தவரை எத்தனையோ நடிகர்கள் நடிகைகள் படத்திற்காக காதலித்து திருமணம் செய்வது போல் நடித்திருக்கிறார்கள். அதில் சில பேர் நடிக்கும் போது அவர்களுக்குள் உண்மையான காதல் ஏற்பட்டதால்  நிஜ வாழ்க்கையிலும் ஒன்று சேர்ந்திருக்கிறார்கள். அப்படிப்பட்ட தம்பதிகளைப் பற்றி நாம் பார்க்கலாம்.

தேவயானி ராஜகுமாரன்: தேவயானி 90ல் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்து தன்னை வைத்து இயக்கிய இயக்குனரான ராஜகுமாரனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவரிடம் உள்ள மிகப்பெரிய சிறப்பு சாந்தமான முகமும், கொஞ்சி கொஞ்சி பேசும் தமிழும் இவருக்கு என்று தனி ஒரு ரசிகர் கூட்டத்தைப் பெற்றுக் கொடுத்தது. அத்துடன் சினிமாவில் உச்சத்தில் இருக்கும் போதே காதலில் வயப்பட்டார். அதன் பின் இவருக்கு கிடைத்த பேரும் புகழையும் விட காதலித்தவரை கல்யாணம் பண்ண வேண்டும், என்ற குறிக்கோளுடன் அனைத்தையும் உதறி தள்ளிவிட்டு அவரை திருமணம் செய்து கொண்டு தற்போது சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார்.

Also read: பிரபு இடத்தை பிடித்த ஜெயராமின் 5 படங்கள்.. தேவயானி, மந்த்ராவை மயக்கிய கோபாலகிருஷ்ணன்

சூர்யா ஜோதிகா: சூர்யா மற்றும் ஜோதிகா ஆரம்பத்தில் நடிக்கும் பொழுது நண்பர்களாக இருந்து அதன் பின் தொடர்ந்து பல படங்களில் ஜோடியாக நடித்ததில் இருந்து ஒருவரை ஒருவர் காதலிக்க ஆரம்பித்து விட்டார்கள். அதன் பின் 2006 இல் இவர்கள் திருமணம் செய்து கொண்டார்கள். இவர்கள் இருவரும் மகிழ்ச்சியுடன் தென்னிந்திய திரையுலகில் மிகவும் போற்றப்படும் ஜோடியில் ஒன்றாகவும் அண்டர்ஸ்டாண்டிங் ஆகவும் வாழ்ந்து வருகிறார்கள்.

அஜித் ஷாலினி: இவர்கள் இருவரும் 1999 ஆம் ஆண்டு அமர்க்களம் படத்தில் ஒருவரை ஒருவர் சந்தித்து கொண்டனர். இவர்களுடைய முதல் பார்வையிலேயே காதல் மலரவில்லை, அதற்கு பதிலாக ஆக்ஷன் காட்சியில் அஜித், ஷாலினி கையில் கீச்சிய போது ரொம்பவே துடித்துப் போய்விட்டார். அதிலிருந்து அஜித் ரொம்பவே அக்கறையாக கவனித்திருக்கிறார். இதன் பின்பு இவர்களுடைய நட்பு, காதலாக மலர்ந்து விட்டது. அடுத்து இவர்கள் சந்தித்து ஒரு வருடம் கழித்து 2000 ஆண்டு சென்னையில் பிரம்மாண்டமான முறையில் திருமணம் செய்து கொண்டார்கள்.

Also read: அஜித் ரசிகர் என்று சொன்னதால் மறுக்கப்பட்ட பட வாய்ப்பு.. ஒரே படத்தோடு தலைமுழுகிய விஜய்

ராம்கி நிரோஷா: இவர்கள் சினிமாவில் நடிக்க ஆரம்பித்ததிலிருந்து ஒருவரை ஒருவர் மோதிக் கொண்டுதான் இவர்களுடைய பயணம் ஆரம்பித்திருக்கிறது. அத்துடன் இவர்கள் நடிக்கும் ஒரு காட்சியில் இவர்களுக்குள் ரொம்பவே சண்டை ஏற்பட்டு வாக்குவாதத்தில் போய் முட்டி இருக்கிறது. அந்த அளவிற்கு இவர்கள் இருவரும் எலியும் பூனையுமாகத் தான் இருப்பார்களாம். அதன்பின் கொஞ்சம் கொஞ்சமாக நண்பர்களாக மாறி, காதலித்து திருமணம் செய்திருக்கிறார்கள். தற்போது வரை இருவரும் புரிதலுடன் வாழ்க்கை நடத்தி வருகிறார்கள்.

ரேஷ்மா பாபி சிம்ஹா: இவர்கள் இருவரும் 2015 ஆம் ஆண்டு உறுமீன் படப்பிடிப்பில் ஒருவரை ஒருவர் காதலித்திருக்கிறார்கள். அதன் பின் இவர்களுடைய திருமணத்திற்கு ரேஷ்மாவின் பெற்றோர்கள் சம்மதம் தெரிவிக்கவில்லை. அவர்களை சமாதானம் செய்து முறைப்படி 2016 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்கள். ஆனால் ரேஷ்மா அந்த நேரத்தில் கொஞ்சம் வளர்ந்து வரும் ஹீரோயினாக இருந்த நிலையில் அவருடைய கேரியரை காலி பண்ணும் விதமாக இவர்களுடைய திருமணம் அமைந்துவிட்டது. ஆனாலும் அதையெல்லாம் அசால்ட்டாக நினைத்து திருமண வாழ்க்கையை சந்தோஷமாக நடத்தி வருகிறார்கள்.

Also read: பாபி சிம்ஹாவின் மிரட்டலான நடிப்பில் வெளிவந்த வசந்த முல்லை ட்ரெய்லர்.. இங்கேயும் பயமுறுத்தும் ஆர்யா

- Advertisement -

Trending News